பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்புப்‌ பொறியியல்‌ 85

நிலையிலுள்ள மருத்துவ வசதிகளைப் பயன்படுத்த மக்கள் குறைவாகவுள்ள இடங்களுக்கும் அந்த மைய மருத்துவ நிலையங்களுக்கும் செய்தித் தொடர்பு சாதனங்களும் தொலைமுறை நோய் அறிகருவிகளும் உருவாக்கலாம். இதன் மூலம் நோயாளிகளின் மருத்துவ வரலாற்றுக் குறிப்புகளை கேட்டறிய லாம். சோதனைகளைக் கண்காணித்து (இவற்றைத் தொலைக்காட்சி மூலம் மைய நிலையத்திலிருந்து கண்காணிக்கலாம்) நோயாளியைத் தக்க நேரத்தில் தக்க ஊர்திகள் மூலம் தேவையான இடத்துக்குக் கொண்டுசெல்லலாம். மேலும் தொலைமுறைச் செய் திக்குறிப்புகளைக் கணிபொறியில் தேக்கி, நெருக் கடி நேரத்தில் திரும்பப் பெறலாம். இத்தகைய உடல்நலப் பணி அமைப்பு தனித்தனியாகப் பிரிந் துள்ள உடல்நல மருத்துவர்களை மருத்துவ மையங் களிலுள்ள மருத்துவர்களுடன் கலந்துரையாட வழி வகுக்கிறது. நகர மக்கள் தொகை, நகர மக்கள்தொகைக்கும் மேற்கூறிய அமைப்பை ஒத்த அனைத்து நேர உடல் நலச் சோதிப்பு மையத்தை இம்முறையால் உருவாக்கி நகர மக்கள் முழுவதற்குமான அன்றாட உடல் சோதனைகளைச் செய்து சரி பார்க்கலாம். கலி போர்னியாவிலுள்ள கெய்சர் பர்மனன்டே மையமும் நியூயார்க்கிலுள்ள மில்வான்கி, விஸ் பிராவிடன்ட்ஸ், நியூ அல்லியன்ஸ் ஆகிய நிறுவனங்களும் இத்தகைய பணியைப் புரிகின்றன. அனைத்து நேரப் பல கட்ட உடல்நலச் சோதிப்பு மையத்தில் ஒவ்வொரு நோயாளியும் இரத்தப் பகுப் பாய்வு, காட்சி, கேள்வி, எடை, உடல் அளவுகள், சிறுநீர் பகுப்பாய்வு, மின் நெஞ்சலை வரை, துடிப்பு வேகம், இரத்த அழுத்தம் போன்ற 30-க்கும் மேலான சோதனைகளுக்குத் திட்டமிட்ட வரிசை முறைப்படி ஆட்படுத்தப்படுகின்றனர். பகுதி நேர மருத்துவ செய்து கணி ஊழியர்கள் இச்சோதனைகளைச் பொறிகளில் 'அந்தச் செய்திகளைச் செலுத்துவர். இந்தச் சோதனைகள் ஒன்றோடு ஒன்று மோதாத படியும், நேரமும் செலவும் குறைவாய் அமையும் படியும், நோயாளியின் வசதிக்கேற்பத் திட்டமிடப் படுகின்றன. நோயாளியின் உடல் ஆய்வு முடிந்ததும் நோயாளியின் மருத்துவருக்குக் கணிபொறி பான நிலையிலிருந்தும் விலகும் செய்திக் குறிப்புகளை அறிவிக்கும். இயல் இங்ஙனம் இந்த மையங்கள் மருத்துவர் நேரடி யாகச் செய்யும் ஆய்வுகளைத் தவிர நோயாளியின் நோய்த் தொடர்பான உடல்நிலை பற்றிய பண்பிய லான அளவுகளையும் திரட்டுகின்றன. இம்மையங் களின் தொடர்ந்து நோய்களை நீக்கும் வல்லமை இத்தகைய மையங்களைப் பயன்படுத்தும் தொழில் அமைப்புப் பொறியியல் 85 நுட்ப வளர்ச்சியையும், இம் மையங்களை மருத்துவர் கள் ஆதரித்துத்தனிப்பட்ட, நேரடியான மரபுவழிச் சோதனைகளுடன், இம்மையங்களின் பணியையும் பயன்பாட்டையும் ஏற்றுக்கொள்வதையும் பொறுத்து அமையும். உடல்நல அமைப்பை விரிவுபடுத்தல். உடல் நலம் பேணலிலும் அமைப்புப் பொறியியல் பெரிதும் பயன்படுகிறது. நகரப் பகுதிகளுக்கோ அல்லது ஊரகப் பகுதிகளுக்கோ இதைப் பயன்படுத்தலாம். மக்கள்தொகையில் எல்லா உறுப்பினர்களையும் உள்ளடக்கும்படி உடல்நலத் திட்டத்தை உருவாக்கு வதை அமைப்புப் பொறியியல் தீர்க்க வேண்டும். முன்போலக் குறிப்பிட்ட சில செல்வாக்குள்ளவர் களுக்கு மட்டும் மருத்துவ நிலையங்கள் பயன்படு வதைத் தவிர்க்க இந்தத் திட்டம் உதவல் வேண்டும். காண்க, செய்தி அமைப்புகள், மருத்துவமனை மருத்துவக் கட்டுப்பாடு அமைப்பு. அமைப்பு அணுகுமுறையின் பரப்பு எல்லை ஒரு சமூக,பொருளாதார அல்லதுஅரசியல் அமைப் பின் சிறப்பியல்புகளை மாற்றியமைக்க வேண்டும் என்றாலோ, படைக்கல அமைப்பை அல்லது தொழிலக எந்திரமயமாக்கலை உருவாக்க வேண்டும் என் றாலோ, படிமம் உருவாக்கல், உகப்பு நிலைப்படுத்தல், கணிபொறியியல் ஒப்புருவாக்கம், வடிவமைப்பு. கட்டுப்பாடு ஆகியவற்றைச் செய்தல், தற்காலத் தொழில்நுட்பம் முழுவதிலும் பேரளவில் பயன்படு கின்றன. சில எடுத்துக்காட்டுகளின் மூலம் அமைப்பு அணுகு முறையால் மனிதச் செயல்முறைச் சூழல் களைப் புரிந்து கொள்வதிலும் வடிவமைப்பதிலும் உள்ள வீச்சின் பரப்பை விளக்கலாம். தொழிலக எந்திரமயம் (Industrial Automation). தொழிலக எந்திர மயமாக்கல் என்பது தீர்மானம் எடுக்கும் செயலை மனிதனுக்குப் பதிலாக எந்திரங் களைக் கொண்டு செய்யும் செயல்முறையாகும். படம் 6,சிமென்டை உருவாக்கும் அமைப்பைக் காட்டுகிறது. இதில் வெளியேறும் விளைபொருள் தக்கபடி மாதிரி எடுக்கப்பட்டு அதில் அடங்கியுள்ள உறுப்புகளின் அளவுகளைக் கண்டறிய வேதியலாகப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. இந்த அளவுகள் தேவையான செந் தர மதிப்புகளுடன் ஒப்பிடப்படுகின்றன. இரண்டிற்கு முள்ள வேறுபாடு பிழையாகும். இந்த பிழை அளவு களைப் பயன்படுத்தி உள் ஊட்டப்படும் மூலப் பொருள்களின் அளவுகள் கட்டுப்படுத்தப்படுகின் றன. வெளியேறும் விளைபொருளின் உட்கூறுகளின் வரம்புகளையும் அதற்கேற்ப உள்ளே தரவேண்டிய பொருள்களின் அளவு மாற்றங்களையும் தானாகவே கணிபொறி கட்டுப்படுத்துகிறது. மேலும் விளை