88 அமைப்பு மாற்றங்கள்
88 அமைப்பு மாற்றங்கள் மாதல் (isomerisation) என்று பெயர். ஃப்ரெடிரிக் வோய்லர் (Frederich Wöhlerj எனும் கரிம வேதியிய லார் அம்மோனியம் சயனேட் கரைசலை பூரியா கரைசலாக மாற்றினார். NH⭑CNO அம்மோனியம் சயனேட்டு HNCONH, யூரியா அத்தகைய மாற்றியமாதல் பெட்ரோலியத் துறை யில் நீளச் சங்கிலி வடிவிலான ஹைட்ரோகார்பன் களைக் கிளைமிகை ஹைட்ரோகார்பன்களாக மாற்று வதற்குப் பயன்படுகிறது. பெட்ரோலில் கிளைமிக்க ஹைட்ரோகார்பன்கள் மிகுந்த செறிவில் இடம் பெற்றால், அப் பெட்ரோல் உட்கனல் பொறியைப் பழுதடையச் செய்யாமல் எரியும். சில சாயங்கள் நேராகத் துணியின் மீது வண்ண மேற்க உகந்தனவாக இருப்பதில்லை. அவை ஆக் சிஜனேற்றமடைந்த நிலையில் வண்ணத்துடனும், ஒடுக்கப்பட்ட நிலையில் வண்ணமற்றவையாகவும் உள்ளன. வண்ணமுற்ற நிலையில் அவை நீரில் கரைவதில்லை. எனவே இவ்வகைச் சாயங்களைக் காரத்தில் கரைத்து வண்ணமற்றவையாக அல்லது வெண்மையானவையாக மாற்றவேண்டும். வண்ண மற்ற நிலையில் (leuco-base) சாய மூலக்கூறின் வடிவமைப்பு ஒரு வகையாகவும், வண்ணமேற்ற நிலையில் வேறுவகை வடிவமைப்பு கொண்டதாகவும் உள்ளது. இவ்வடிவமைப்பு மாற்றம் அமில-காரத் தன்மையையும், ஆக்சிஜனேற்ற நிலையையும் பொறுத்து அமையும். இதனையும் மாற்றியமாக்குதல் (isomerisation) வினைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். அவுரி (indigo) போன்ற தொட்டிச் சாயங்கள் இவ்வகைக்கு எடுத்துக்காட்டுகள். மற்றொரு வகை மாற்றியமாக்குதல், இயங்கு சமநிலை (tatutomerism) எனப்படும். இரு கார் பனைல் தொகுதிகளுக்கு இடையே மெத்திலீன் இடை (-CH-) தொகுதி இடம் பெறுமாயின், இத் தொகுதி யிலுள்ள ஹைட்ரஜன் அணுக்களுள் ஒன்று கார் பனைல் தொகுதியில் ஆச்சிஜன் அணுவுடன் இணைந்து, அதன் விளைவாக இரட்டைப் பிணைப் பும் ஒற்றைப் பிணைப்பும் இடப் பரிமாற்றம் காண் கின்றன. இவ்விரண்டு மூலக்கூறுகளுக்கும் இடையே ஓர் இயக்கு சமநிலை (dynamic equilibrium) உருவா கிறது. (சமன்பாடு 1) 0 H,C-C-CH, -C - OC,H, கீட்டோ அமைப்பு OH 1 11 || HgC - C=CH -C - OC,H, ஈனால் அமைப்பு (1) இது உண்மையில் ஓர் இடமாற்றிய வினையன்று. ஏனெனில், கீட்டோ அமைப்பு எவ்வகைத் தூண்டு தலும் இல்லாத நிலையிலும் ஈனால் அமைப்பாக மாறத் தொடங்கும். ஒரு கட்டத்தில் இரு அமைப்பு களும் சமநிலை எய்தும். ஒரே மாதிரியான தொகுதிகள் ஓர் இரட்டை ணைப்புக்கு (double bond) மாறுபட்ட இருக்கை களில் அமைந்திருப்பின், அம் மூலக்கூறு மாறுபக்க மாற்று (trans isomer) எனப்படுகின்றது. இதன் மீது ஆற்றல் மிக்க ஒளிக்கதிரைப்பாய்ச்சினால், மூலக் கூறின் ஒருபாதி ஓர் அரைவட்டம் திரும்பி ஒரு பக்க மாற்று (cis isomer) எனும் அமைப்பு உண்டாகிறது H&C H C = C H C.H. மாறுபக்க மாற்று 11 {hv] H.C CH, C = C H H ஒருபக்க மாற்று ஒளியைச் சுழற்றும் இயல்புடைய (optically active) சேர்மங்கள் புரிமாற்றம் (inversion) அடையும் நிகழ்ச்சியையும் இத்தகைய இடமாற்றத்திற்கு எடுத் துக்காட்டாகக் கொள்ளலாம். து வால்டன் புரி மாற்றம் (Walden inversion) எனப்படும். முனைப் படுத்தப்பட்ட ஒளியை வலப்புறம் திருப்பும் மூலக்கூறு இடப்புறம் திருப்பும் இயல்புடையதாக மாறும்.