பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பொற்றுமை (விலங்கியல்‌): 99

ஒத்த அமைப்புடைய பண்புகள் இரு வேறுபட்ட இனங்களில் தோன்றக்கூடும். இங்கு, அமைப்பொற் றுமை இருப்பதால் மட்டுமே அவ்வுறுப்புகள் பரிணா மத்தின் மூலம் ஒரு பொது மூதாதையர் வழி தோன்றி யுள்ளன என்ற கொள்கை மறுக்கப்படுகிறது. அமைப்பொற்றுமை பற்றிய பழங்கருத்துக்கள். உறுப் புகள், பலவேறுபட்ட விலங்குகளில் ஒரே தன்மை யினவாகக் காணப்படும் நிலையினை பெலன் (Belen, 1555) என்பவர் உணர்ந்திருந்ததாகத் தெரி கிறது. இதன் பிறகு ஓவன் (Owen, 1804-1892) காலத் தில் மற்றொருவிளக்கம் கூறப்பட்டது. அவர் கருத்துப் படி அமைப்பொத்த உறுப்பு (homologous organ) என்பது பல்வேறு வகையான விலங்குகளில் உருவில் வேறுபட்டு, ஒரே வகையாகச் செயல்படும் உறுப்பு களாகும். இக்கருத்து ஏற்கத் தகுந்ததன்று. காரணம், இவருடைய 'ஒருவகை' (same) அல்லது 'வேறுபட்ட (different) என்ற நிலைகள் தெளிவாக விளக்கப் படாமல் இருப்பதேயாகும். . இதன் பிறகு டார்வின் (Darwin, 1859), அமைப் பொத்த உறுப்பு, என்பதற்குத் தெளிவான வரை யறையைக் கண்டார் இவர் கூற்றுப்படி, ஒத்த 'பண்புகளையுடைய இத்தகைய உறுப்புகள் ஒரு பொது மூதாதையரிடமிருந்து பரம்பரை பரம்பரை 'யாக வந்தவையாகும். இக்கருத்தினையே டார்வினுக் குப்பிறகு வந்தவர்கள் ஆதரித்துக் கையாளுகின்றனர். அமைப்பொத்த உறுப்புகள். பல்வேறு விலங்குகளில் காணப்படும் அமைப்பொத்த உறுப்புகள் ஒரு குறிப் பிட்ட செயலையே செய்யவேண்டுமென்ற நியதி யில்லை. எடுத்துக்காட்டாக, மனிதனுடைய கையி னைக் காணலாம். பறவையின் சிறகு, தவளையின் முன்னங்கால் ஆகியவற்றின் உள்ளமைப்பை ஆராய்ந்து பார்க்கும்போது இவ்வுறுப்புகள் யாவும் சில பொதுவான அடிப்படை அமைப்புகளைப் பெற்றி ருப்பதைக் காணலாம். மனிதனின் கைகள், வேலை செய்வதற்கும், பறவையின் சிறகுகள் பறப்பதற்கும், தவளையின் முன்னங்கால்கள் தாவிச் செல்வதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறு செயலால் வேறுபட்டும் அமைப்பால் ஒரு தன்மைத்தாகவும் காணப்படும் திமிங்கிலத்தின் துடுப்புக்கை, தவளையின் முன்னங் கால், பறவையின் சிறகு. மனிதனின் கை ஆகியவை அனைத்தும் அமைப்பொத்த உறுப்புகளாகும். அற்றுப்போன மீன்களின் (extinct fishes) துடுப் பில் காணப்படும் உள்ளமைப்பிலிருந்தே மனிதன் உள்ளிட்ட தரையில் வாழும் அனைத்து முதுகெலும்பி களின் கைகால்களின் உள்ளமைப்பும் பரிணமித்திருக்க வேண்டும். எனவே, அற்றுப்போன மீன் மூதாதைய ரிடமிருந்தே பரிணாம வழிமூலம் இத்தகைய பொதுத் 7 அமைப்பொற்றுமை (விலங்கியல்) 99 2 படம் 1. அமைப்பொத்த உறுப்புகள் 1. திமிங்கிலம் (துடுப்புக்கை), தவளை (முன்னங்கால்) 3. பறவை (சிறகு), 4. மனிதன் (கை). தன்மைகளைப் பெற்று, அமைப்பொத்த உறுப்புகள் வெவ்வேறு பணிகளைச் செய்கின்றன. பாலூட்டிகளின் தைராய்டு சுரப்பியும் தாம யற்ற முதுகெலும்பியான பெட்ரோமைசானின் (petro- myzon) அம்மோசீட்டஸ் வேற்றிளரியின் (ammococtes larva) தொண்டை வரிப்பள்ளமும் (endostyle) வெவ்வேறு பணிகளைச் செய்தாலும் பிறக்க முறை ஒன்றாக இருப்பதால் இவ்விரண்டும் அமைப்பொத்த உறுப்புகளே. சிக்கல் மிகுந்த மற்றோர் அமைப்பொற்றுமையைப், பாலூட்டிகளின் நடுச்செவி எலும்புகளான சுத்தியல் எலும்பு (malleus), பட்டறை எலும்பு (incus), அங்க வடி எலும்பு (stapes) ஆகியவற்றில் காணலாம். இவ்லெலும்புகள் யாவும் மீன் மூதாதையர்களின் சில தாடை எலும்புகள் பரிணாம மாற்றமுற்றுத் தோன்றியவையாகும். மீன்களில் உட்செவி காணப் படுகிறது. இது, புறப்பகுதியுடன். ஒரு தொண்டைச் செவுள் பிளவு (pharyngeal gill slit) மூலம் இணைக் கப்பட்டுள்ளது. இதுவே, உயர்பாலூட்டி விலங்கு களில் நடுச்செவியாகப் பரிணமித்துள்ளது. பல இரு வாழ்விகளிலும் (amphibians) ஊர்வனவற்றிலும் (reptiles) தொண்டைச் செவுள் பிளவுத் துளை செவிப்பறைச் சவ்வினால் மூடப்பட்டுள்ளது. இச்சவ் வுடன், மாற்றமடைந்த ஒரு சிறு தாடை எலும்பு இணைந்துள்ளது. இவ்வெலும்பே, உயர்விலங்குகளில் நடுச்செவியின் அங்கவடி எலும்பாகப் பரிணமித்து உள்ளது.