அமைலாய்டு மிகை 101
மத்தின் மூலம் வேறுபாடுகள் தோன்றுவதுண்டு. இத்தன்மையைப் பற்களின் அமைப்பில் காணமுடி யும். கோரைப்பற்கள் (canines), வெட்டுப்பற்கள் (incisors), முன்கடைவாய்ப் பற்கள் (premolars), கடைவாய்ப் பற்கள் (molars) ஆகியவை ஒன்றை யொன்று ஓரளவு ஒத்திருந்தாலும் பெரிதும் வேறு படுகின்றன. ஆனால் இவை யாவும் தொடக்ககால ஊர்வனவற்றின் எளிய கூம்புப் பற்களிலிருந்து (conical teeth) தோன்றியவையே. அமைப்பொற்றுமைக்கும் செயலாற்றுமைக்கும் (Ana- logy) உள்ள வேறுபாடு. அமைப்பொற்றுமைக்கும் செய லொற்றுமைக்கும் அடிப்படை வேறுபாடுகள் உண்டு. செயலொற்றுமை என்பது பிறக்க முறையாலும் கட்டமைப்பாலும் (structure) வேறுபட்ட உறுப்புகள் ஒரேவகைப் பணியைச் செய்யும் நிலையாகும். பறவை களில் காணப்படும் சிறகின் அமைப்பை ஆராய்ந்து பார்த்தால் மற்ற விலங்குகளின் முன்னங்காலின் அமைப்போடு அது ஒத்திருப்பதைக் காணலாம். எனவே முன்னங்கால்கள் பரிணமித்துச் சிறகுகளாக மாறின எனக் கூறலாம். இதன் அடிப்படையில் விலங்குகளின் முன்னங்கால்களும் பறவைகளின் சிறகு களும் அமைப்பொத்த உறுப்புகளாகக் கருதப்படு கின்றன. ஆனால் பூச்சிகளின் இறக்கைகளையும் பறவைகளின் சிறகுகளையும் அமைப்பொத்த உறுப்பு களாகக் கொள்ள இயலாது. ஏனெனில், பூச்சி இறக்கைகளின் பிறக்க முறையும் கட்டமைப்பும், பறவைச் சிறகுகளின் பிறக்க முறையிலிருந்தும் கட்ட மைப்பிலிருந்தும் முற்றிலும் வேறுபடுகின்றன. 1 2 படம் 5. (1) இறக்கை (பூச்சி) (2) சிறகு (பறவை). பூச்சிகளின் இறக்கைகள், உடல் தோலின் புறவளர்ச் சியின் (outgrowth) மூலம் தோன்றியவையாகும். பறவையின் சிறகுகளுடன் ஒப்பிடும்போது, பூச்சி இறக்கைகள் வேறுபட்ட தோற்றமுடையனவாக இருப்பினும் ஒரேவகைச் செயலை, அதாவது பறக் கும் செயலைச் செய்வதால், அவை செயலொத்த உறுப்புகள் (analogous organs) ஆகும். அமைலாய்டு மிகை 101 இதைப்போலவே தலைக்காலி மெல்லுடலிகளின் (cephalopod molluscs) கண்களும் மனிதனுடைய கண்களும், தோற்றத்தால் வேறுபட்டாலும் ஒரே பணியினைச் செய்வதால் அவ்வுறுப்புகள் செய லொத்த உறுப்புகளாகும். உயிரின வகைப்பாட்டியலில் அமைப்பொற்றுமையின் பங்கு. இன்றைய வகைப்பாட்டியல் (classification), உயிரினங்களின் உள்ளுறுப்புத் தன்மைகளையும் anatomical characteristics) உடற்செயலியல் தன்மை களையும் (physiological characteristics) அடிப்படை யாகக் கொண்டே அமைந்துள்ளது. பல்வேறு இனங் களின் உறுப்புக்களில் ஒற்றுமை காணப்படுவதிலிருந்து அவை ஒரு மூதாதையர் வழி பரிணமித்துள்ளன எனக் கொள்ளலாம். அந்த வகையில், அமைப் பொற்றுமை, வகைப்பாட்டியலில் உயிரினங்களுக் கிடையேயுள்ள இனத்தொடர்பினை வெளிப்படுத்து வதில் பெரும் பங்கு கொள்கிறது. செயலொற்றுமை முறையில் அமைக்கப்படும் வகைப்பாட்டியல், பரி அடிப்படையில் அமையாமல், செயற்கை முறையில் அமைந்த ஒன்றாகவே தோன்றுகிறது. ணாம் நூலோதி ந.இரா. 1. Dobzhansky. T., Hecht, M. K., and Streere. W. C., Evolutionary Biology, Vol. 6, Educatio- nal Division/Meredith Corporation, New York, 1972. 2. Eaten, T. H., Comparative Anatomy of the Vertebrates, Harper & Row Publishers, New York, 1959. 3. Nasan, A., Text Book of Modern Biology, John Wiley & Sons, Inc., New York, 1965. 4. Newman, H.H., Evolution. Genetics and Eugenics, The University of Chicago Press, Chicago, 1921. 5. Simpson, G. G., Principles of Animal Taxonomy, Oxford Book Company, New York, 1965. 6. Willmer, E. N., Cytology and Evolution, Acade- mic Press. New York, 1960. அமைலாய்டு மிகை அமைலாய்டு (amyloid) என்பது சில இயல்பற்ற நிலைகளில் தோன்றும் ஒருவிதப் புரதச்சத்து ஆகும். .