பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அமைலாய்டு மிகை

106 அமைலாய்டு மிகை கூறு (B-component) என்று சொல்லுவார்கள். இது உள்ளது ஐந்து பக்கங்களுடன் நடுவில் ஓட்டை போன்ற ஓர் அமைப்பாகக் - காணப்படும். இதன் வெளிப்புற அளவு 9 நானோ மீட்டர் (nanometer) ஆகவும், உட்புற அளவு 4 நானோமீட்டர் ஆகவும் இருக்கும். ஒவ்வோர் ஐம்முக அமைப்பும் ஐந்து உருண்டையான சிறிய அமைப்புகளால் ஆனது. ஒன்றன் மீது ஒன்றாக இந்த அமைப்புகளை அடுக்கி வைத்தால் இவை சிறு அடைகளாகத் தோன்றும். இந்த இரண்டாவது அமைப்பில், அமினோ அமில நிலையை ஆய்வு செய்தால், இது இழையப் புரதச் சத்திலிருந்து வேறுபட்டது என்று தெரியும். மேலும், இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு புதிய பொருள், சாதாரண மணிதர்களின் ஊன் நீரில் இருக் கும் ஒரு பொருள் போன்றது. அதாவது, 9.5 பி (பிஸ்) அவ்பா ஒன் கிளைக்கோ புரோட்டின் (9.55 EXI glycoprotein) போன்று உள்ளன. மேற்கூறியவற்றிலிருந்து அமைலாய்டின் உருப் பெருக்கித் தோற்றத்திற்கான விளக்கம் தெரிகிறது. அதாவது அமைலாய்டு இழையங்களின் வே தியியல் பண்பு சார்ந்த இயற்பியல் கூறுகளால் சேர்க்கை ஏற்படும் அமைலாய்டு இழையங்கள் X-கதிர் படிக ஆய்வு முறை (X-ray crystallography) மூலம் குறுக் கிவ் அமைந்த வனைபுத் (cross beta) தகட்டு உருவம் (plated sheet) ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து ஒரு தனியான அமைப்புடன் காணப்படும். ஏதேனும் ஓர் இழையத்துடன் கூடிய புரதம் பீட்டா தகட்டு உருவம் அமைப்பைத் தோற்றுவிக்க நேர்ந் தால் இதை அமைலாய்டு என்றே கூறலாம். இது போல் வேதியியல், இயற்பியல் சேர்க்கை அமைலாய் டிற்குத் தனி உருப்பெறு அமைப்புக் கொடுக்கிறது. அதாவது முனைப்படுத்தப்பட்ட உருப்பெருக்கி (pola- rised microscope) சில தனியான அமைப்புகளைக் காட்டுகிறது. மேலும் இந்த இழையச் சேர்க்கையில் மிகுந்த ஒழுங்குபாடும், ஒன்றையடுத்து ஒன்று அமைந் திருக்கும் தன்மையும், காங்கோ சிவப்புச் சாயத்தை அமைலாய்டு மேலே ஊற்றினால் சாயத்திலிருந்து இரட்டை அணுக்கள் இழையத்துடன் சேர்ந்து மிகத் தீவிரமான இரட்டை @alamu (birefringence) தோற்றுவித்தலும் காணப்படும். குளுகோகானும் (glucagon), இன்சுலினும், வேதியியல் முறைப்படி மாற்றப்பட்டால் பீட்டா தகட்டு உருவ இழையங்களைத் தோற்றுவிக்கலாம். இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அமை லாய்டு மிகை அதிகம் காண்பதன் காரணம் விளங் குகிறது. இதனால் எந்த நோய் இருப்பினும் அமை லாய்டு சேர்க்கை ஒரு பொதுக் காரணத்தினால் தான் உண்டாகிறது என்பது விளங்குகிறது. அமைலாய்டு தோற்றம். அமைலாய்டில் இரண்டு விதப் பிரிவுகள் இருப்பதைப் பார்த்தோம். அதா வது, அமைலாய்டு (AIO), அமைலாய்டு (AUO). இவை மூன்று வகைப் புர தங்களால் ஆனவை. ஒன்று, மெல்லிய, ஆனால் முழுமையான பாலிபெப்ட்டைடு (polypeptide). இரண்டாவது, அமைனோ புரதம் உள்ள மெல்லிய சங்கிலி. மூன்றாவது இரண்டும் சேர்ந்தது. மைலோமாவுடன் கூடிய அமைலாய்டுமிகையில், பென்ஸ்ஜோன்ஸ் புரதம் 92 விழுக்காடு காணப் படுகிறது. சேர்க்கை முறை ஆய்வுகளால், பென்ஸ் ஜோன்ஸ் புரதத்தின். புரதப்பொருளை உடைப்ப தனால் அமைலாய்டு போன்ற இழையங்களை உருப் பெருக்கி வழியாகவும் படிக ஆய்வு வழியாகவும் அமைலாய்டின் தனித்தன்மை இருப்பதை அறி கிறோம். அமினோ அமில ஆய்வுகளும், அமைலாய்டில் இருப்பது போன்ற மெல்லிய சங்கிலிகள் இருப்ப தாகத் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஐ. ஓ. வின் மூலக்கூறு எடை 5000 இலிருந்து 18,000 டால்ட்டன்கள் (dalton) ஆகும். இது அமைலாய்டு அல்லாத மெல்லிய சங்கிலிகளின் எடையை விடக் குறைவாக உள்ளது. இதனால் மெல் லிய சங்கிலிப் புரதங்கள் உடைபட்டுவிடுகின்றன. இந்த மாற்றம் லைசோசோமிய நொதிகளால் ஏற் படுகிறது. ஆயினும் இந்த இழையங்கள் தனியாகவே தயாரிக்கப்படலாம். லைசோசோம்கள் மெல்லிய சங்கி லிகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். உடலெங்கும், காணப்படும் அமைலாய்டு சேர்க்கை, சாதாரணமாக நோயுடன் கூடியதாக இருக்கும். அரிதாக, நோய் நிலை இல்லாமலும் இருக்கலாம். மரபுவழி வரும் மத்திய தரைக்கடல் காய்ச்சல் எனப்படும் நோயை இம்மாதிரியான இரண் டாவதாகத் தோன்றும் அமைலாய்டு சேர்க்கையில் காணலாம். இந்நிலைகளில் எல்லாம் அமைலாய்டு ஏ காணப்படுகிறது. (ஏ. யூ.ஓ).இம்மாதிரி அமைலாய்டு ஏ புரதச் சத்தைச் செயற்கை முறையில் சிறு விலங்கு களுக்குத் தோற்றுவிக்கலாம். அதாவது கேசின் (case- in), ப்ராய்ண்ட் மருந்து (Freund's adjuvant) ஆகிய வற்றை ஊசிமூலம் சிறு விலங்குகளுக்குச் செலுத்தி னாலும், வேறு ஆய்வு முறைகளைக் கையாண்டா லும், செயற்கை முறையில் இதனைத் தோற்றுவிக்க லாம். நோயாளிகன் புரதச் சத்தில் அமினோ அமிலங்களின் அமைப்பில் சில மாறுபாடுகள் இருக்கும். இந்த அமைப்பு மெல்லிய சங்கிலி பாலி பெப்ட்டைடில் இருப்பது போல் இராது. ஆனாலும், இதைப்போன்று அமைலாய்டு இழையங்களுக்கு