108 அமைலாய்டு மிகை
108 அமைலாய்டு மிகை காணப்படும்.தைமோசின் (thymosin) கொடுக்கப் பட்டால் கேசின் சிரைவழி கொடுக்கப்பட்ட சுண் டெலிகளுக்கு அமைலாய்டு தோன்றுவது தடைப் படுகிறது. இவையாவும் 'டி செல்கள் அமைலாய்டு தோற்றத்திற்குக் காரணமாய் உள்ள வேலையில் ஈடுபடுகின்றன என்பதைக் காட்டுகின்றன. அன்றி யும் 'டி' செல்லின் வேலையை நிறுத்தி வைத்து அமை லாய்டு தோன்றுவதற்கு ஊக்கமளிக்கக்கூடிய வேலை யைச் செய்யாமல் அழுத்துகின்றன. தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பிகள் இருந்து வந்தால் காப்பு முறை கள் சரிவரச் செயல்பட உதவும் இயக்கிகள் மாறு பட்ட முறையில் செயல்பட்டுக் காப்புச் சகிப்புத் (immune tolerance) தோன்றி அமைலாய்டு தோற் றத்தைக் காணலாம். அமைலாய்டு சேர்க்கையினால் திசுக்களிலும் உறுப் புகளிலும் ஏற்படும் மாற்றங்கள். எல்லா உறுப்பு களிலும் எல்லாச் சமயங்களிலும் ஒரே மாதிரியாக அமைலாய்டு சேர்க்கையைக் காணமுடியாது. இத னால் ஒவ்வோர் உறுப்பையும் தனித்தனியே விளக் கிக் கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சில பொதுவாக அமைலாய்டு சேர்க்கையில் அமைப்புகள் தனியாக இருக்கின்றன. குறைந்த அளவு களில் அமைலாய்டு இருக்கும் வரை, திசுக்களிலோ, உறுப்புகளிலோ, அமைலாய்டு இருக்கும் நிலையில் மாற்றம் ஏற்படுவதில்லை. திசுவையோ, உறுப்பை யோ வெட்டி, வெட்டிய பாகத்தின் மேல் அயடின் சல்ஃப்யூரிக் அமிலத்தை (iodine in - sulphuric acid) ஊற்றினால் நிற மாற்றங்கள் ஏற்பட்டு லாய்டு இருப்பது தெரியவரும். அமைலாய்டு அதிக அளவில் இருக்குமேயானால் அந்த உறுப்பு அழுத்த மாகவும், ரப்பர் போன்றும், மெழுகு போன்றும் வெண்மை கலந்து கருப்பு நிறத்துடன் காணப்படும். அமை உருப்பெருக்கி வழியாகத் தெரியும் மாற்றங்கள். அமைலாய்டு சேர்க்கை உயிரணுக்களுக்கு இடையே தான் தொடங்கும். இது, உயிரணுவின் அடித்தளத் திசுவின் அருகே தொடங்குகிறது. காங்கோ சிவப்புச் சாயம் ஊற்றி முனைவாக்கும் (polarising) உருப் பெருக்கி மூலம், எளிதில் பார்க்க முடியாத அமை லாய்டைப் பார்க்கலாம். காலப்போக்கில், லாய்டு சேர்க்கை மிகுந்து உருண்டை வடிவம் உள்ள திரள்கள் ஒன்று சேர்ந்து அருகிலுள்ள உயிரணுக் களின் மேல் அழுத்தும். நாளாவட்டத்தில் இந்த மாறுதல்கள் மிக அதிகமாகி அமைலாய்டு திரள்கள் உயிரணுக்களைச் சுற்றிக்கொண்டு கடைசியில் உயிரணுக்களையே அழித்து விடும். அமை அமைலாய்டு இருப்பதை நோய் அறிகுறிகள் மூலம் உணர்ந்தாலும் அமைலாய்டுமிகை உறுப்பு அமைப்பு உருப்பெருக்கி வழியே அறிந்து கொண் டால்தான், உறுதியாகவும் முடிவாகவும் அமைலாய்டு சேர்க்கையை அறிந்து கொள்ளலாம். திசு ஆய்வு. எந்த உறுப்பில் அமைலாய்டு இருப் பதாகக் கருதப்படுகிறதோ அந்த உறுப்பிலிருந்து திசுக்களை ஒரு மெல்லிய சிரைவழி வெளியே எடுத்து, அதைத் தகுந்தாற்போல் பதப்படுத்தி நுண்ணோக்கி மூலம் பார்க்கலாம். உடலெங்கும் அமைலாய்டுமிகை இருப்பின், சிறுநீரகம், பெருங்குடல், ஈரல் முதலிய வற்றிலிருந்து திசுக்களை எடுத்து உருப்பெருக்கி மூலம் பார்க்கலாம். ஈரல், பெருங்குடல் முதலியவை பெருவாரியான நிலைகளில் அமைலாய்டு இருப்பதைக் காட்டும். சில வேளைகளில் இந்த இடங்களில் இருக் கும் அமைலாய்டு, இரத்தக் குழாயினருகில் மட்டுமே இருக்கலாம். இவற்றைக் காங்கோ சிவப்புச் சாயத்தை ஊற்றி, முனைவாக்க ஒளி உருப்பெருக்கி மூலம் காணலாம். சில சமயங்களில் மெல்லிய சிரையிலிருந்து எடுக்கப்பட்ட திசுக்களில், அமைலாய்டைக் காண முடியாமல் இருக்கலாம். இது, எடுக்கப்பட்ட அந்தச் சிறிய அளவு திசுவில் அமைலாய்டு இல்லாத காரணத் தினால் இருக்கலாம். அதனால் நோயாளிக்கு அமை லாய்டுமிகை இல்லை என்று கூறிவிட முடியாது. சில நோயாளிகளின் ஊன் நீரில் அல்லது சிறுநீரில் எம் (M) புரதச் சத்து மிகுந்து காணலாம். இதை, நோயாளிக்குப் பிளாஸ்மா உயிரணுவில் ஏதோ ஒரு மாற்றத்தினால் ஏற்படுவது என்று கொள்ளலாம். ஆனாலும் இம்மாற்றத்திற்கு யாதொரு காரணமும் தெரியாவிடில், இது அமைலாய்டுமிகை இருப்பதால் தான் என்று அறிந்து கொள்ளலாம். அமைலாய்டு சில சமயங்களில், உடலுக்குள்ளே மறுபடியும் உறிஞ்சப்பட்டிருக்கும். செயற்கை முறை களில்,எடுத்துக்காட்டாக, சிரைகளின் வழியாகக் கேசி னைச் சிறு விலங்குகளுக்குச் செலுத்துவதை நிறுத்தி னால், அமைலாய்டு திரும்ப ஈரலிலும் மண்ணீரலிலும் உறிஞ்சப் படுவதைக் காணலாம். ஆனால், இதனைச் சிறுநீரகத்தில் காணமுடியாது.அமைலாய்டு சேர்க்கை மற்ற இடங்களில் மேலும் குறையும்போது, இங்கு மிகு வதைக் காணலாம். இதைப்பற்றி ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனிதரிடமும் இவ்வாறு மாறு தல்கள் இருக்கின்றனவா என்பது சரிவரத் தெரிய வில்லை. நோயின் அடிப்படையில் தோன்றும் அமை லாய்டு சேர்க்கையில், தொற்று நோய் நிலைகள், புதுக்கட்டிகள் முதலியவற்றை நீக்கினால், அமை லாய்டு குறைவதையும் மறைவதையும் சிவர் கண்டுள் ளனர். இதைப்போன்று நீக்கக்கூடிய அடிப்படை நோய் இருந்தால்தான், அமைலாய்டு சேர்க்கை குறைய அல்லது மறைய முடியும் என்பது தெளிவு. மற்ற எல்லாவித அமைலாய்டு சேர்க்கையிலும்