அயனசலனமும் அச்சலைவும் 111
சிஃப்யூசு P PA Vo P Pz டிரேகா P E அயனசலனமும் அச்சலையும் 111 B bode pas 10.2 படம் 2 முறையே கி.மு.3,000, கி.பி.2,000, கி.பி.7,000, கி.பி. 14,000 ஆண்டுகளில் வடதுருவப் புள்ளியின் இடங்கள், P.இன் அருகில் D என்று குறிக்கப்பட் டுள்ள விண்மீன் டிரேகோனிஸ்; P, இன் அருகில் P என்று காட்டியுள்ளது துருவ விண்மீன்; P, இன் பக்கத்தில் C என்று காட்டியுள்ள விண்மீன் -சிபை; Pபுக்கருகில் V என்று காட்டப்பட்டுள்ளது. அபிஜித் சுமார் கி.பி.27800ஆம் ஆண்டில் மீண்டும் துருவ விண்மீன் வடதுருவத்தின் அருகில் காணப்படும். பூமியின் 'சுழலச்சு, அதன் நடுக்கோட்டுத் தளத் திற்குச் செங்குத்தாக உள்ளது. சுழலச்சின் அயன சலனத்தின் விளைவாகப் பூமியின் நடுக்கோட்டுத் தளம் மெல்ல நகர்கிறது. எனவே அது தோற்றப் பாதையை வெட்டும் புள்ளிகளான மேடமுதற்புள்ளி (y)யும், துலாமுதற்புள்ளி (-) யும் மேற்கு முகமாக மெல்ல நகர்கின்றன. Y இன் இந்த இடமாற்றத்தையே மேட முதற்புள்ளியின் அயனசலனம் என்கிறோம். படம்-3இல் CD என்பது சூரியனின் தோற்றப் பாதை வட்டம்; ABஅதன் அச்சுக்கோடு; EQ என் பது ஒரு நேரத்தில் வான நடுக்கோட்டின் இருப்பிடம். P என்பது வானத்துருவம்; E,Q, -ம் CD-யும் வெட் டும் புள்ளி மேட முதற்புள்ளி Y 1. சில நூற்றாண்டு களுக்குப் பின்னர் பூமியின் சுழலச்சு வானக் கோளத்தை வெட்டும் புள்ளி P. அதற்கான வான நடுவரை E,Q. இது CD-யை Y,இல் வெட்டுகிறது. படம் 3 தற்போதைய மேடமுதற்புள்ளியே Y ஆகும். சில நூற்றாண்டுகளில் மேடமுதற்புள்ளி தோற்றப்பாதை யில் மேற்கு நோக்கி, 7, இலிருந்து Y-க்கு நகர்ந் துள்ளது. ஆண்டொன்றுக்குச் சராசரி 50″, 2 அளவு இம்மாற்றம் நடைபெறுவதாகக் கணக்கிட்டுள்ளனர். சூரியன், சந்திரன் மட்டுமன் றிச் சுக்கிரன் (Venus), செவ்வாய் (Mars), சனி (Saturn) போன்ற கோள் களும் (planets) பூமியை ஈர்க்கின்றன. இதனால் பூமி யின் மையமானது தோற்றப்பாதைத் தளத்திலிருந்து சுமார் 0" . 1. விலகுகின்றது. இதன் விளைவாகத் தோற் றப் பாதைத் தளமே மாறுபடுகின்றது. சூரியன், சந்திரன், கோள்கள் ஆகியவற்றால் ஏற்படும் அயன சலனங்களை ஒன்று சேர்த்துப் பெறுவது பொது அயனசலனம் (general precession) எனப்படும். சூரியனும் சந்திரனும் பூமியின் மீது ஈர்ப்பு விசை களைச் செலுத்தி வந்தாலும் இவ்விசைகளின் அளவு எக்காலத்தும் ஒரே சீராக இருப்பதில்லை. இத னால் அயனசலனத்தின் அளவும் ஒரு சீராக இருக் காது. சந்திரனின் லிசையில் சீரற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. சூரியனுடன் ஒப்பிடுகையில், சந்தி ரன் மிகச் சிறியது என்றாலும், பூமிக்கு மிக அருகில் இருப்பதால் அதன் ஈர்ப்புவிசை அதிக முக்கியத்து வம் பெறுகிறது. மேலும் சந்திரனின் ஈர்ப்புவிசை பூமியின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு அள வினைக் கொண்டுள்ளது. இக்காரணங்களினால்