அயனிப் பரிமாற்றம் 119
வலைப் பின்னல் ரெசின்கள் (macroreticular resins) அல்லது பெருந்துளையுள்ள ரெசின்கள் (macropo- rous resins) என்றும் அழைக்கப்படும். இவற்றின் வழியே அயனிப் பரிமாற்றக் கரைசல்கள் எளிதில் செல்லும்; அயனிப்பரிமாற்றமும் வேகமாக நிகழும். நுண்நோக்கியின் வழியாக நோக்கும்போது இந்த ரெசின்களின் துகள்கள் ஒளி ஊடுருவாத்தன்மை கொண்ட கடினத் துகள்களாகக் காணப்படுகின்றன. இவை அதிக அளவில் குறுக்கிணைக்கப்பட்ட துகள் களைக் கொண்டுள்ளன. இவ்வகை ரெசின்கள் பெரும்பாலும் நீர் அல்லாத கரைப்பான்களுக்குத் தான் (nonaqueous solvents) பயன்படுகின்றன. பெருந்துளையுள்ள ரெசின்கள் மற்ற அயனிப் பரிமாற்றிகள். செல்லுலோஸ், டெக்ஸ்ட்ரான் (dextran) போன்றவற்றிலிருந்து பெறப்படும் அயனிப்பரிமாற்றிகள் உயிர்வேதியிய லில் மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன. மூலக்கூறு சல்லடைகள் (molecular sieves), அலு மினோ சிலிக்கேட்டுகள் போன்ற சில செயற்கைக் கனிம அயனிப்பரிமாற்றிகளும் இதில் அடங்கும். முக்கியமாக இவற்றில் மூலக்கூறு சல்லடைகள், உறிஞ்சிகளாகவும் (absorbents), வினையூக்கிகளாக வும் செயல்படுகின்றன. தனிம மீள் வரிசை அட்ட வணையில் 4, 5, 6 வது தொகுதி தனிமங்களின் நீரே றிய ஆக்சைடுகளும் அவற்றின் கலவைகளும், மற்றக் கனிம அயனிப் பரிமாற்றிகளாகப் பயன்படுகின்றன. மேற்சொன்ன அயனிப் பரிமாற்றிகள் குறிப் பிடத்தக்க அயனிப் பரிமாற்றத் திறனைக் கொண் டுள்ளன. எடுத்துக்காட்டாக நீரேறிய ஆன்ட்டிமனி ஐந்தாக்சைடு, சோடியம் அயனிகளை வெகுவாகக் கவர்கிறது. நீரேறிய டின் டை-ஆக்சைடு நேர், எதிர் அயனிகளைப் பரிமாறச் செய்யும் இயல்புமிக்கது. சிர்கோனியம் ஃபாஸ்ஃபேட், Rb, Cs, Sr, Ba அயனி களை அதிக அளவில் பரிமாற்றுகிறது. பிரித்துணர்திறன். பாலிஸ்டைரீன் ரெசினைக் கொண்டு கார, காரமண் உலோகங்களை அயனிப் பரிமாற்றத்திற்குட்படுத்தும்போது அதன் பிரித் துணர்திறன் (selectivity) கீழ்க்கண்டவாறு அமை கிறது. 2+ 2+ Li*<<Na* <K*<Rb*<Cs Logo Mg<Ca<Sr<Ba 9+ அயனிப் பரிமாற்றம் 119 சீசியம், வித்தியம் அயனியைப் போல் நான்கு மடங்கு அதிகமாக ரெசினுடன் பிணைக்கப்படுகிறது. தகுந்த எதிரயனிப் பரிமாற்ற ரெசினில் ஹாலைடுடன் கீழ்க் கண்டவாறு பிரிக்கப்படுகிறது. F<CI<Bŕ<I ஆக்சி எதிரயனிகளால் பிரித்துணர்திறன் கீழ்க்கண்ட வாறு அமைந்துள்ளது. 2 NO," <NO; <C10" <C10, <C10, <$0,< SO.⁹- ஹைட்ரஜன், ஹைட்ராக்சில் அயனிகள் ரெசினி லுள்ள வினைப்படு தொகுதியின் (functional group) அமில, காரப்பண்புகளைப் பொறுத்து அதிகமா கவோ குறைவாகவோ மாற்றப்படுகின்றன. இரண்டு விதமான எதிரயனி அயனிப்பரிமாற்றிகள் வழக்கத் தில் உள்ளன. அவற்றில் முதல் வகையில் உள்ள வினைப்படு தொகுதி -N (CH,);+; இதன் ஹைட் ராக்சைடு வீரியமிக்க காரம். ஆகவே ஹைட்ராக்சில் அயனிகள் ஃபுளுரைடு அயனிகளைவிடக் குறைவா கவே ரெசினால் பரிமாற்றப்படுகின்றன. இரண்டா வது லகையில் உள்ள வினைப்படு தொகுதி-N (CH;) C,H, OH +. இதன் ஹைட்ராக்சைடு வீரியம் குன் றிய காரம். எனவே ஹைட்ராக்சில் அயனிகள் அதிக அளவில் பரிமாறப்படுகின்றன. மென்னீராக்கம். கடின நீரில் கால்சியம், மக்னீசி யம் அயனிகள் உள்ளன. இவற்றைச் சோடியம் அய னியால் பரிமாற்றம் அடையச் செய்து மென்னீராக்க லாம். கடின நீரைக் காற்றுக் குமிழ்கள் இல்லாமல் நிரப்பப்பட்ட நேரயனிப் பரிமாற்றிகள் உள்ள குழா யின் வழியாகச் செலுத்தும் போது அதிலுள்ள கால் சியம், மக்னீசியம் போன்ற அயனிகள் சோடியம் எனவே அயனியால் பரிமாற்றம் அடைகின்றன. குழாயிலிருந்து வெளிவரும் நீர் சுத்தமான மென்னீ ராக இருக்கிறது. முழுவதும் அயனிப் பரிமாற்றம் அடைந்தபின், சோடியம் குளோரைடு கரைசலை நேரயனிப் பரிமாற்றியினுள் செலுத்தி மீண்டும் நிலையில் பழைய அயனிப் பரிமாற்றியைப் பெறலாம். அயனிப்பரிமாற்றியின் மூலம் நீரில் கரைந்துள்ள உப்புகளை முழுவதுமாக நீக்கி விடலாம். இவ்வாறு பெறப்படும் உப்பு நீக்கப்பட்ட (desalted) அல்லது அயனி நீக்கப்பட்ட (deionised) நீரானது காய்ச்சி வடித்த நீருக்கு (distilled water) நிகரானதாகும். இரண்டு அயனிப்பரிமாற்றிகள் அயனி நீக்க வினை களுக்கு உதவுகின்றன. அவை ஹைட்ரஜன் அயனி களப்ை பரிமாற்றப் பொருளாகக் கொண்ட நேரய