பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அயனிப்‌ பிணைப்பு

120 அயனிப் பிணைப்பு னிப் பரிமாற்றி, ஹைட்ராக்சில் அயனிகளைப் பரி மாற்றியாகக் கொண்ட எதிரயனிப் பரிமாற்றி. Na* Ct H,O HCHH₂O R'OH HO அயனிப்பரிமாற்றிகளால் நீரை மென்னிராக்கல். HR- நேரயனிப் பரிமாற்றக் கலம்.R OH - எதிரயனிப் பரிமாற்றக் கலம். இவ்விரு அயனிப் பரிமாற்றிகளும் இரண்டு குழாய் களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். முதலில் நீர் நோயனிப் பரிமாற்றக் குழாய் வழியாகச் செலுத்தப் பட்டுப் பின்னர் எதிரயனிப் பரிமாற்றக் குழாய் வழயாகச் செலுத்தப்படும். அயனிப் பரிமாற்ற நிறச்சாரல் பிரிகை. அயனிப் பரிமாற்றத்தால் நிகழும் நிறச்சாரல் பிரிகை (chro- matography) அயனிப் பரிமாற்ற நிறச்சாரல் பிரிகை எனப்படும். இந் நிறச்சாரல் பிரிகைக் குழாயில் 10m அளவு விட்டமுள்ள அயனிப் பரிமாற்றிகள் நிரப்பப்பட்டிருக்கும். குழாயின் முடிவில் பிரிக்கப் பட்ட பொருள்களின் செறிவைக் கணக்கிடக் காணி (detector) உள்ளது. அயனிப் பரிமாற்ற நிறச்சாரல் பிரிகை ரெண்டு காரணங்களால் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. 1) ரெசின்களின் இயற்பண்புகளான மென்மைத் தன்மையும், அயனிகள் பரவும் தன்மையும் 2) கனிம் அயனிகளைக் கண்டறிய நுணுக்கமான காரணிகள் இல்லாதது. இவ்வாறிருந்தும் நேரயனி ரெசின்கள் பல காலமாக அமினோ அமிலங்களைப் பகுத்தறிய உதவி வருகின்றன. மேலும் மின்பகுளிகளிலிருந்து குரோமேட்டு களைத் திரும்பப் பெறவும், அமில நீர்மங்களிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுப்பதிலும், ஸ்ட்ரெப் டோமைசின் (streptomycin) தயாரிப்பிலும், பார் மால்டிஹைடிலிருந்து ஃபார்மிக் அமிலத்தைப் (formic acid) பெறவும், சர்க்கரைப் பாகைச் சுத்தம் செய் வதிலும், மதிப்பு மிக்க உலோகங்களைப் பயனில்லாப் பொருள்களிலிருந்து பெறுவதற்கும், நிக்கோட் டினைப் (nicotine) புகையிலைப் புகையிலிருந்து பெறுவதற்கும், பியூட்டைல் ஆல்கஹால் (butyl alco hol) கொழுப்பு அமிலங்களுக்கு (fatty acids) இடை யில் நடைபெறும் வினைகளுக்கும், கதிரியக்க ஓரிடத் தனிமங்களை (radioactive isotopes) அணுப்பிளவு வினையின் (atomic fission) வழி பெறுவதற்கும் அயனிப் பரிமாற்ற வினை பயன்படுகிறது. நூலோதி 1. Hawley G., Gessner, The Condensed Chemical Dictionary, Tenth Edition, Galgotia Book Source Publishers, New Delhi. 1984. 2. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. அயனிப் பிணைப்பு சேர்மங்களில் உள்ள வேதிப் பிணைப்புப் (chemical bond) பற்றிய விளக்கம், அணு அமைப்புப் பற்றி நீல்ஸ் போரின் (Niels Bohr) கொள்கை விளக்கத்திற் குப் பின்புதான் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. முதன் முதல் பெர்சீலியஸ் (Berzelius) என்பவர்தான் வேதிப் பிணைப்புப் பற்றி விளக்கம் அளித்தார். கெக்குலே (Kekule), லெ பெல் (Le Bel), வாண்ட் ஹாஃப் (Van't Hoff) போன்றோர்கள் சில மாற்றங் களுடன் வேதிப்பிணைப்பை ஆய்வு செய்தனர். இறுதியில் கோசல் (Kossel), லுாயிஸ் (Lewis), லாங் மியூர் (Langmuir) போன்றவர்களின் விளக்கத்தால் வேதிப்பிணைப்புப் பற்றிய கருத்து முழுமை அடைந் தது எனலாம். ஒரு சேர்மத்தை உருவாக்க அணுக்களுக்கு இடை யே பிணைப்பு ஏற்படவேண்டும். ஓர் அணுவில் (அல்லது அணுக்களின் தொகுப்பில்) இருந்து மற் றோர் அணுவிற்கு (அல்லது அணுக்களின் தொகுப் பிற்கு) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலெக்ட் ரான்கள் மாறுவதால் ஏற்படும் பிணைப்பு - அயனிப் பிணைப்பு (electrovalent bond) எனப்படும். எலெக்ட் ரான்களை இழக்கும் அணுவின் வெளிச் சுற்றுப்பாதை யிலிருந்து (outer orbit) எலெக்ட்ரான்கள் இழக்கப் படுவதால் அணுவில் உள்ள நேர்மின் சுமை உ கிறது. இதன் விளைவாக இவ்வணு (அலலது அணுத் தொகுப்பு) நேர்மின் சுமையைப் (positive charge) பெறுகிறது. மாறாக எலெக்ட்ரான்களை ஏற்கும் அணுவில் (அணுத் தொகுப்பில்) எலெக்ட்ரான் ஏற் பால் எதிர்மின் சுமை (negative charge) உண்டாகிறது. உண்டா