அயனிப் பிணைப்பு 121
அயனிப் பினைப்பு 121 இவ்வாறு எலெக்ட்ரான் (கள்) இழப்பால் அல்லது ஏற்பால் ஏற்படும் மின் சுமை கொண்ட அணு (அணுத் தொகுப்பு) அயனி (ion) எனப்படும். இவ் வாறு உருவான அயனிகள் மந்த வாயுக்களை ஒத்த, நிலையான எலெக்ட்ரான் அமைப்புகளைப் பெற்ற பின் மேலும் எலெக்ட்ரான்களைப் பொதுவாக ஏற்பதும் இழப்பதும் இல்லை. எனவே அயனிப் பிணைப்பிற்கு உள்ளாகும் ஓர் அணுவின் இணை திறன் எண் என்பது, மந்த வளிம எலெக்ட்ரான் அமைப்பைப் பெற அந்த அணுவினால் இழக்க அல்லது ஏற்க வேண்டிய எலெக்ட்ரான்களின் எண் ணிக்கை ஆகும். ஒரு கரைசலில் மின் புலத்தைச் செலுத்தும் போது எதிர் மின்சுமை (anion) கொண்ட அணு (அல்லது அணுத்தொகுதி) நேர் மின்வாயை (anode ) நோக்கியும், நேர் மின்சுமை (cation) கொண்ட அணு (அல்லது அணுத்தொகுதி)எதிர் மின்வாயை (cathode) நோக்கியும் நகரும். எனவே இவை முறையே எதிர யனி (எதிர் மின்சுமை உள்ள அணு அல்லது அணுத் தொகுதி) என்றும், நேரயனி (நேர் மின்சுமை உள்ள அணு அல்லது அணுத்தொகுதி) என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த எதிரான மின்சுமை கொண்ட அயனிகளுக்கு (நேரயனி, எதிரயனி) இடையே உள்ள நிலைமின்கலர்ச்சி விசையால் (electrostatic attractive force) இவ்வயனீகள் ஒன்றாகப் பிணைக்கப்படும். இப் பிணைப்பைத்தான் அயனிப் பிணைப்பு (ionic bond) என்கிறோம். இந்தப் பிணைப்பிற்குக் காரணமான நிலைமின் கவர்ச்சி விசை எல்லாத் திசைகளிலும் பரவியிருப்பதால் இப்பிணைப்புக்குத் திசைப்பண்பு (directional property) இல்லை. மேற்கூறிய உண்மைகளைச் சோடியம், குளோ ரின் ஆகிய இரண்டும் கூடிச் சோடியம் குளோரைடு உண்டாவதைக் கொண்டு விளக்கலாம். சோடிபத் தின் எலெக்ட்ரான் அமைப்பு முறை 2, 8, 1. குளோ ரின் எலெக்ட்ரான் அமைப்பு முறை 2, 8,7. இவ் விரு அணுக்களையும் ஒன்று சேர்க்கும்போது சோடி யம் அணு ஓர் எலெக்ட்ரானை இழப்பதாலும், குளோரின் அணு ஓர் எலெக்ட்ரானை ஏற்பதாலும் அவற்றின் எலெக்ட்ரான் அமைப்பு முறை 2, 8 என் றும், 2,8,8 என்றும் மாறி நிலைத்தன்மையுள்ள Na+ (நேரயனி) CI (எதிரயனி) என்ற எதிரான மின்சுமை கொண்ட அயனிகள் தோன்றுகின்றன. எதிரான மின் சுமைகள் எதிர் அயனியும்,நேர் அயனி யும் மின்னிலையியல் கவர்ச்சி விசை காரணமாகப் பிணைக்கப்பட்டுள்ளன. இப்பிணைப்பு அயனிக் அயனிப் ஏற்படுவதால், அது ளுக்கு இடையே பிணைப்பு எனப்படும். அ.க-2-16 Na + Cl சோடியம் குளோரின் (அல்லது) (Na) + (CI)" 2. 8 2, 8, 8 Na Ci சோடியம் குளோரைடு இவ்வயனிப் பிணைப்பால் திண்ம நிலையில் அயனி கள் அனைத்தும் ஓர் ஒழுங்கு முறையில் கட்டுண்டு உள்ளன. ஒரு (மின் ஊடகத் தகை எண் - dielectric constant - அதிகமாக உள்ள) கரைப்பானில் அயனிகள் ஒவ்வொன்றும் கரைப்பான் மூலக்கூறுகளால் கட் டுண்டு இருப்பதால், அயனிப் பிணைப்பு வலுவிழந்து விடும். எனவே கரைசல்களில் அயனிச் சேர்மங்கள் பிரிகை (dissociation) அடைந்து, அயனிகள் தன்னிச் சையாக நகர்கின்றன. Na Cl -> Na + Cl இவ்வயனிப் பிணைப்பை BeF, (பெரிலீயம் ஃபுளோ ரைடு), Li, 0 (லித்தியம் ஆக்சைடு), CaO (calcium oxide), MgCl, (magnesium chloride) போன்ற எடுத் துக்காட்டுகளைக் கொண்டும் விளக்கலாம். அயனிப் பிணைப்பு உருவாகச் சாதகமான கார ணிகள்: தனிம வரிசை அட்டவணையில் (periodic table) இடப்புறம் (left) உள்ள உலோகத் தனிமங் களுக்கு எலெக்ட்ரான்களை இழக்கும் பண்பு இருப்ப தால் அயனிச் சேர்மங்களில் உலோகத் தனிம அணுக் களும், உலோகமற்ற தனிம அணுக்களும் அயனிப் பிணைப்பால் பிணைக்கப்பட்டுள்ளன. அயனிகளுக்கு இடையே அயனிப் பிணைப்புகள் உருவாதல் அயனிகள் எளிதில் உருவாவதற்குச் சாதக மான காரணமாகும். அயனியாக்கும் ஆற்றல். வாயு நிலையில் நிலவும் ஓர் அணுவில் இருந்து ஓர் எலெக்ட்ரானை முற்றி லும் நீக்கத் தேவைப்படும் ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல் (ionisation potential) ஆகும். எனவே, இவ் வாற்றல் குறைவாக இருப்பதால் எளிதில் அயனி உருவாகும். இதன் விளைவாக அயனிப் பிணைப்பும் எளிதில் உண்டாகும். எலெக்ட்ரான் பற்று. வாயு நிலையில் உள்ள மின் சுமையற்ற ஓர் அணுவுடன் ஓர் எலெக்ட்ரானைச் சேர்த்து ஓர் எதிர் அயனியை உருவாக்கும் போது வெளியிடப்படும் ஆற்றல் எலெக்ட்ரான் பற்று (elect- ron affinity) ஆகும். ஹாலோஜன்களுக்கு (halogens) எலெக்ட்ரான் பற்று மிக அதிகமாக இருக்கின்றது. ஆதலின் ஹாலோஜன் தனிமங்கள் எளிதில் எதிர யனிகளை உண்டாக்குகின்றன.