பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 அயனியாக்கம்‌

122 அயனியாக்கம் அணுக்கட்டமைப்பு ஆற்றல். நேர் அயனிகளையும் எதிர் அயனிகளையும் பிணைத்து ஒரு கிராம் மோல் படிகத் திண்மத்தை உண்டாக்கும் போது வெளியிடப் படும் ஆற்றல் அணுக்கட்டமைப்பு ஆற்றல் (lattice energy) ஆகும். இவ்வாற்றல் அதிகமாக இருந்தால் வலுவான அயனிப் பிணைப்பு உருவாகும். இவ் வாற்றலைபார்ன் ஹேபர் (Born Haber cycle) - பார்ன் லாண்டே சமன்பாடு கொண்டு விளக்கலாம். எலெக்ட்ரான் ஈர்ப்புத்தன்மை, இது ஓர் அணு எலெக்ட்ரானை ஈர்க்கும் தன்மையின் ஆற்றல் அள வீடு (electronegativity) ஆகும். ஒரு சேர்மத்தில் உள்ள அணுக்களின் மின்னணுக் கவர் ஆற்றல்களுக்கு இடையே வேறுபாடு அதிகமாக இருந்தால் அயனிப் பிணைப்பு எளிதாகத் தோன்றும். அயனிச் சேர்மங்களின் பண்புகள். இவை திண்ம நிலையில் அயனிகளாகவே உள்ளன. அயனிச் சேர் மங்களின் உருகு நிலையும் கொதி நிலையும் மிக அதிகமாக உள்ளன. இவை உ உருகிய நிலையில் அல் லது கரைசலில் மின்னாற்றலைக் கடத்தும் திறன் உடையன; நீர், ஆல்கஹால் போன்ற முனைவுள்ள கரைப்பான் (polar solvents) களில் கரைகின்றன. கரைசல்களில் வினைகள் மிக விரைவாக நடைபெறும். ஒத்த எலெக்ட்ரான் அமைப்புக் கொண்ட அயனிச் சேர்மங்கள் ஒத்த வடிவுடன் (isomorphism) அமை கின்றன. நூலோதி எம். 1. Cotton, Albert F. and Wilkinson, Geoffrey., Advanced Inorganic. Chemistry, Third Edition, Wiley Eastern Limited, New Delhi, 1979. அயனியாக்கம் அணு மின் ஏற்றம் அற்றது. அணுவிலிருந்து ஓர் எலெக்ட்ரானை எடுத்துவிட்டால், எஞ்சிய அணுவின் மின் ஏற்றம் நேர்குறி உடையதாக இருக்கும். இந்த அணு அயனி என்று குறிப்பிடப்படுகிறது. எனவே அயனி என்ப பது மின் நடுநிலை இழந்த அணு வாகும். உட்கரு, எலக்ட்ரான்களை இழுத்துக் கொண்டிருப்பதால், எலக்ட்ரானை வெளியேற்ற ஆற்றல் தேவை. இந்த ஆற்றலுக்கு அயனியாக்க ஆற்றல் (ionisation energy) என்று பெயர், அயனி யாக்க ஆற்றல், கருவிலிருந்து அயனி உண்டாக்க வெளியே வரும் எலக்ட்ரானின் தொலைவு, கருவின் மின் ஏற்றம், தனிமத்தின் தன்மை இவற்றிக்கேற்ப மாறுபடுகிறது. மேலும் தனிமத்தைச் சுற்றியுள்ள ஊடகமும் இவ்வாற்றலை நிலைப்படுத்துகின்றது. பொதுவாகக் காற்று, மரம் போன்றவை மின் சாரத்தைக் கடத்துவதில்லை. ஆனால் கொடி மின் னலும் இடியும் ஏற்படும் தருணங்களில், திறந்த வெளியில் மின்னல் தாக்கி, விலங்குகளும் மக்களும் மடிகின்றனர். மழை பெய்யும்போது மரத்திற்கு அருகில் நிற்பவர்களும் தாக்கப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அணுக்கள் அயனிகளாக மாற்றப்படு கின்றன. அயனிகளுக்கு மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உண்டு. அணு மின் ஏற்றம் அற்ற துகள் ஆகும். அணு லில் நேர் மின் ஏற்றம் (+ve charge) அதிகமாக இருந்தால், இது நேர் (+) அயனி; புரோட்டானைவிட எலக்ட்ரான் அதிகமாக இருந்தால் எதிர் (-) அயனி. இதை அயனி எனப் பெயரிட்டு முதலில் அழைத்தவர் மைக்கேல் பாரடே (Michael Faraday). அபனிகளை உண்டாக்கும் முறைகள் மோதுதல் (ionisation by collision). பாதரச விளக்கு, நியான் விளக்கு, பொன்னொளி வீசும் சோடிய வளிம விளக்கு ஆகியவற்றைக் காண்கிறோம். இக்குழாய்களுள், குறைந்த அழுத்தத்தில் பாதரச வளிமமோ, நியான் வளிமமோ, சோடிய வளிமமோ நிரப்பப்பட்டுள்ளது. மின்வாய்களுக்கு (electrodes) நடுவே மின்அழுத்தம் (electric voltage) கொடுக்கப் பட்டால் வளிமத்தின் மூலக்கூறுகளும், அணுக்களும் உராய்வால் மின் ஏற்றம் கொண்டு, ஒன்றன் மீது ஒன்று மோதுகின்றன. மோதும் அதிர்ச்சியில் சில எலக்ட்ரான்கள் சிதறி, எதிர் (-) அயனிகளாக வெளிவருகின்றது. அணு அல்லது மூலக்கூறின் எஞ்சிய பகுதி அதிகமான நேர்மின் ஏற்றம் கொண்ட நேர் (+) அயனியாகும். இவ்விரு அயனிகளும் ஒன்று சேரும்போது குழாய் ஒளிர்கின்றது. ஒளிரும் குழாய் களில் ஒளிர்வை அளிப்பது அயனி பிரிந்து சேரும் செய்கையாகும். க்ரூக்ஸ் குழாய்களே (Crooke's tube) அயனிகளின் பல பண்புகளை விளக்கின. குழாயின் உட்சுவர்மீது வேதியியல் பொருள்கள் பூசப்பட்டிருந் தால், பல வண்ணங்களைப் பெறலாம். அயனிகளை ஏதாவது ஒரு திண்மப்பொருள் தடுத்து நிறுத்தினால் திண்மப்பொருள் சூடு அடைகின்றது. திண்மப் பொறு ளின் நிழலை எதிர்ப்பக்கம் காணலாம். சுழலும் சக்கரம் ஒன்றை அயனிகளின் பாதையில் வைத்தால் சக்கரம் சுழல்கின்றது. இந்த ஆய்வுகள் அயனிகளுக்கு ஆற்றல் உண்டு எனபதையும் காட்டுகின்றன. குழாய் ரு