அயனியாககம 123
இடப் களின் குறுக்கே காந்த மண்டலத்தைச் செலுத்தினால் எதிர் (-) அயனிகள் ஒரு புறமாகவும், நேர் (+) அயனிகள் எதிர்ப் புறமாகவும் இடப்பெயர்ச்சி அடை கின்றன. எதிர் (-) அயனிகள் எளிதாக பெயர்ச்சி அடைகின்றன. நேர் (+) அயனிகள் குறை வாகவே டம் பெயர்கின்றன. எனவே எதிர் (-) அயனி பெரும்பாலும் எலக்ட்ரான் கூட்டமாக இருக் கும் என்றும், நேர் (+) அயனிகள் அணு அல்லது மூலக்கூறின் எஞ்சிய பகுதி என்றும் கொள்ளப்பட் டது. குழாயிலுள்ள எதிர் (-) அயனிகள் ஒரு கடி னமான பொருளால் தடுக்கப்பட்டால், X கதிர்கள் வெளி வருகின்றன. கதிர் இயக்கம் (radioactivity). கோபால்ட், ரேடி யம், இரிடியம் ஆகிய உலோகங்கள் இயல்பான சூழ் நிலையில் ஆல்ஃபா கதிர்கள் (alpha rays), பீட்டா கதிர்கள் (beta rays), காமா கதிர்கள் (gamma rays) ஆகியவற்றை வெளிவிடுகின்றன. ஆல்ஃபா கதிர் என்பது ஹீலியம்அணுவின் கரு. இது நேர் (+) அயனி; பீட்டா கதிர் என்பது எலக்ட்ரான். காமா கதிர்கள் X கதிர்களைவிடக் குறைந்த அலை நீளம் கொண்ட மின் காந்த அலைகள். இம் மூன்று கதிர்களும், வளிமப் பொருள்களை அயனிகளாக்க வல்லன. ஆல்ஃபா அயனி காமா ரேடியம் படம் 1. அயனி பீட்டா வெப்ப அயனிகள் (Thermions). சூடேற்றப்பட்ட பரப்பிலிருந்து நீர் ஆவியாவதுபோலச் சூடேற்றப் பட்ட உலோகப் பரப்பிலிருந்து வெளிப்புற எலக்ட் ரான்கள் (valence electrons) வெளியேறுகின்றன. டங்ஸ்டன் (tungsten) இழை 1100°C சூடேற்றப்பட் டால் எலெக்ட்ரான்கள் வெளிவருகின்றன.ஓர் எலக் ட்ரானை உலோகத்திலிருந்து வெளியேற்றச் செய்யப் அயனியாக்கம் 123 படும் மிகக் குறைந்த வேலையை வேலைச் சார்பலன் (work function) என்று அழைக்கிறோம். இதைவிட அதிக ஆற்றல் உலோக இழைக்குக் கொடுக்கப் பட்டால், எலக்ட்ரான்கள் அதிக வேகமாக வெளி வருகின்றன. கொடுக்கப்பட்ட ஆற்றல் # படிகடக்கும் ஆற்றல் + எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் Input Energy = Work function + K.E. of Electrons எலெக்ட்ரான் வால்வுகளிலும், தொவைக் காட்சிக் குழல்களிலும், சி.ஆர்.ஓ (CRO) குழல் களிலும் சூடேற்றப்பட்ட இழைகளிலிருந்து எலெக்ட் ரான்கள் வருகின்றன. மின் விளக்குகனிலும் இழை கள் சூடேறும்பொழுது எலக்ட்ரான்கள் வெளி வருகின்றன. எலக்ட்ரான்கள் எதிர் (-) அயனி க எனவே, இழை நேர் (+) அயனிக் கூட்டம் கொண்டுள்ளது. இழைகளின் மீது ஆக்சிஜன் வளி மத்தைக் கூட்டுப் பொருளாகக் கொண்ட (oxide com pound) வேதியியல் கலவை பூசப்பட்டால் எலக்ட் ரானகளைச் சிறிது குறைவான வெப்பநிலையிலேயே பெறலாம். உலோக இழைகள் நெருப்பில் வாட்டப் பட்டிருந்தால் (baked) எலக்ட்ரான்கள் விரைவாக வெளிவருகின்றன. அயனிகளை உண்டாக்க இம்முறை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. இது எளிய முறை. எந்த ஆற்றல் கொண்ட அயனிகளையும் உண்டாக்கலாம். X-கதிர் குழாய்களும், எலக்ட்ரான் நுண்ணோக்கி களும் இம்முறையைப் பயன்படுத்துகின்றன. ரிச்சர்ட்சன் (Richardson) என்பவர் வெப்ப நிலைக்கும். வெளிவரும் எலக்ட்ரான் எண்ணிக் கைக்கும் உண்டான தொடர்பை ரிச்சர்ட்சன் சமன் பாடு (Richardson equation) கொண்டு விளக்கினார். எலக்ட்ரானை எளிதாக வெளியிடும் பல கங்கள் ஆராயப்பட்டுள்ளன. உலோ ஒளி அயனியாக்கம் (Photo ionisation). அணு விலுள்ள எலக்ட்ரான்கள் அணுப்பிணைப்பிலிருந்து வெளிவர ஒளி ஆற்றலையும் பயன்படுத்தலாம். செலினியம், டெல்லூரியம், துத்தநாகம், காட்மியம் ஆகிய உலோகப் பரப்புகளின் மீது குறிப்பிட்ட அலை நீள ஒளி படும்போது எலக்ட்ரான்கள் உலோகப் பகுதியில் வெளிவருகின்றன. எஞ்சிய நேர் (+) அயனிகள் அதிகமாக இருக்கும். ஒளிமின் விளைவைக் (photo electric effect) கண்டுபிடித்த பல் ஆண்டுகளுக்குப்பின், இவ்விளைவு குறித்த விளக்கத்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம்