124 அயனியாக்கம்
124 அயனியாக்கம் ஆண்டு பெற்றார். அளித்தார். இதற்காக நோபல் பரிசு ஒளி கொண்டு அயனிகளை உண்டாக்க, ஒளி யின் ஆற்றல் படிதாண்டும் ஆற்றலைவிட (threshold energy) அதிகமாக இருக்க வேண்டும். எனவே ஒவ்வோர் உலோகத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அலை நீளத்திற்கும் குறைவான அலை நீளம் கொண்ட ஒளியே,ஒளி அயனிகளை உண்டாக்கும். வெளிவரும் எலக்ட்ரான் (எதிர் (-) அயனி) கொண்டுள்ள ஆற்றல், அவை மீது விழும் ஒளியின் அதிர்வுஎண்ணிற்கேற்ப (frequency) அதிகரிக்கின்றது. ஓர் ஒளி அலை,ஓர் எலக்ட்ரானையேவெளியேற்றும். எனவே வெளிவரும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஒளிக்கற்றையின் அடர்த்திக்கேற்ப (intensity) மாறு படுகின்றது. இவ்விளைவின் அடிப்படையில் ஒளி மின்கலன் கள் (photo electric cells) அமைக்கப்பட்டுள்ளன. குறை கடத்திகளின் (semi conductors) துணையால் இம் மின்கலங்கள் மிகச் சிறிய வடிவில் அமைக்கப் பட்டுள்ளன. ஒளிக் கதிரின் ஆற்றல் + படிதாண்டும் ஆற்றல் = எலக்ட்ரானின் இயக்க ஆற்றல் - (Light energy Threshold energy + K. E. of eelctrons) ஒளி அயனிகளை உண்டாக்கும் பொருளின் வெளிப்பரப்பு (Surface) மிகத் தூய்மையாக இருக்க வேண்டும். எந்த ஒளி ஆற்றலுக்கும் தகுந்த தனிமத் தைப் பொறுக்கி எடுக்கலாம். தொலைக் காட்சி, ஒளி அயனிகளை அடிப்படையாகத்தான் கொண்டு இயங் குகிறது. அண்டக் கதிர்கள் (cosmic rays). அண்ட வெளி யில் சூரியனுக்கு அருகாமையில் வெப்பநிலை 10,00, 000°C (பத்து இலட்சம் டிகிரி செலிசியஸ்). இந்த வெப்ப நிலையினால், வெப்ப அயனிகள், சூரியனிலி ருந்து வெளிவருகின்றன. அயனிகள் வளிமப்பொருள் கள் மீது மோதும்பொழுது மூலக்கூறுகளும், அணுக் களும் அயனிகளாகப் பிரிகின்றன. அண்டவெளியி லிருந்து அயனிக் கூட்டங்கள் பூமியையும் ஏனைய பகுதிகளையும் நோக்கி, இரவும்,பகலும் தாக்கிய வண்ணம இருக்கின்றன. பூமியின் காந்தமண் இவற்றைத் திசைமாற்றி நம்மை நேராகத் தாக்காத வண்ணம் செய்கின்றது. கடலுக்கடியிலும் இந்த அயனிக் கூட்டங்கள் பரவியுள்ளன. காற்று மண்டலத்தில் உயரம் அதிகரிக்க அதி கரிக்க இவற்றின் செறிவு அதிகரிக்கின்றது. மிக உயரத்தில் காற்று மண்டலத்தின் அடர்த்தி குறை வதால் அயனிச் செறிவு குறைவுபடுகின்றது. காற்று மண்டலத்திலுள்ள அயனிகளின் அளவைப் பலூன் ஏந்திச் செல்லும் கருவிகளும், செயற்கைக் கோள் களும் காட்டுகின்றன. ஹைதராபாத்திலிருந்து பலூன்கள் காற்று மண்டல ஆராய்ச்சிக்குச் செலுத் தப்படுகின்றன. மின் மண்டலத்தால் அயனிகள். மின்னல் தாக்கும் பொழுது. முள் கம்பி வேலிகள் மீது நீலநிற நாக்கு கள் போல் நெருப்பு பாய்வதைக் காண்கிறோம். மின் கம்பிகளிலிருந்து சில தருணங்களில் நெருப்புப் பொறிகள் வெளிவருகின்றன. இடி தாங்கிகள் கூர்மையான நுனிகளைக் கொண்டுள்ளன. கூர்மை யாக உள்ள உலோகப் பகுதி மிகப்பெரிய மின் மண் டலத்தைக் (intense electric field) கொண்டுள்ளது. படம் 2. கூர்மையாக கரிக்கோல் ஒளிவில் கரிக்கோல் திரைப்படக்கருவியில் ஒளியூட்டுவதற்காக, இரண்டு கரிக் கோல்கள் உள்ளன. இக் கரிக் கோல்களை மின் அழுத்தம் கொடுக்கும் மின்கல அடுக்குடனோ அல்லது வீட்டு மின் சுற்றுடனோ இணைத்தால் கோல் முனைகளுக்கிடையில் ஒளிப் பிழம்பு தோன்றுகின்றது. கூரிய முனையில் ஏற்படும் மின் மண்டலம் காற்றின் மூலக்கூறுகளையும் அணுக் களையும் அயனிகளாக மாற்றுகின்றது. அயலிகள் வேகமாகச் சென்று ஏனைய அணுக்கள் மீது மோதி, அவற்றின் எலக்ட்ரான் பயண வழிகளை (orbits) மாற்றுகின்றன. அறுபட்ட மின் கம்பிகளை முறுக்கி, அவற்றின் மீது மின் கடத்தாத நாடாக்களைச் (insulation tape)