பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயனியாக்க மின்னழுத்தம்‌ 125

கூர்நுனி அயனிகள் மின் கம்பி முறுக்கப்பட்ட கம்பி அறுபட்ட மின் கம்பி படம் 3 சுற்றாமலேயே பயன்படுத்துகிறோம். இப்பகுதியும் காற்றை அயனிகளாகப் பிரிக்கின்றது. அயனி மண்டலம் (Ionosphere). வெப்பம். ஒளி, மோதல், மின் மண்டலம் ஆகிய இவை யாவும் ஒன்று அயன் + மண்டலம் அயனியாக்க மின்னழுத்தம் 125 சேர்ந்து, காற்று மண்டலத்தின் மேற்பகுதியில் உள்ள அடர்த்தி குறைவான பகுதியை அயனிகளாக மின் பகுப்பு செய்து விடுகின்றன. கோள்களுக்கிடையே உள்ள காந்த மண்டலம், அயனிகளைக் கொள்கலத் திற்குள் இருப்பதைப்போல் அடைத்து வைக்கின்றன. அயன் மண்டலம் லானொலி அலைகளை எந்த நிலையத்திலிருந்தும் பெற்று, உலகின் பல பகுதி களிலும் பாயுமாறு திருப்பி அனுப்புகின்றது. அயனமண்டலம், ஒரு குடைபோல் அமைந் துள்ளது. ரேடியோ மின்காந்த அலைகள் அயன் மண்டலத்தின் மீது விழுந்தால், அயனிகள் ஒன்றை ஒன்று நெருங்குகின்றன. ஒரே மின் ஏற்றம் கொண்ட அயனிகள் ஒன்றை ஒன்று உந்துகின்றன. அயன் மண்டலம் விரிவடைந்து, வானொலி அலைகள் எதிர் திருப்பப்படுகின்றன. இடி மின்னல் உள்ள நாள் களில் வானொலியில் பல வகையான ஒலிகள் ஏற் படுகின்றன. பகலைவிட, இரவில் வானொலி நன் றாகக் கேட்கின்றது. அயனமண்டலம் இயற்கை நமக்களித்த பல வசதிகளில் ஒன்றாகும். ரேடியோ அலைகள் நீளமானவை. அவற்றின் அலைநீளம் 20 மீட்டர். 40 மீட்டர், 300 மீட்டர் என்று மீட்டர் கணக்கில் உள்ளன. ஆனால் தொலைக் காட்சிப் படங்களைக் காணப் பயன் படுத்தப்படும் நுண் அலைகள் (micro waves) சில செ.மீ. அலைநீளம் கொண்டவை. இவை அயனி மண்டலத்தில் புகுந்து மேலே சென்றுவிடும். எனவே தொலைக் காட்சி நிலைய நுண் அலைகளை நேரா கவே பயன்படுத்த வேண்டியுள்ளது. தொலைக் காட்சி நிலையத்தின் நிகழ்ச்சிகளைக் குறுகிய தொலைவில் மட்டுமே காண முடியும். அல்லது செயற்கைக் கோள்களின் மீது பட்டு மீளச் செய்ய வேண்டும். இதுவே செயற்கைக் கோள் வழி செய்தி அனுப்புதல். எஸ்.இல. வானொலி அலைகள் படம் 4 எதிர் பலிப்பு நூலோதி 1. G.A.G.Bennet, Electricity and Modern Physics', ELBS, Great Britain, 1974. 2. GREIG, 'Electrons in metals and semi conduc- McGraw-Hill International Book Com- tors, pany, New York, 1969. அயனியாக்க மின்னழுத்தம் அணுவினுள் நேர்மின்னூட்டமும் எதிர் மின்னூட்ட மும் சம அளவில் உள்ளன. அணுவின் மொத்த