126 அயான்த்தைனா
126 அயான்த்தைனா மின்னூட்டம் சுழியாகும். அணு எண், (atomic number) அணுவிலுள்ள எலக்ட்ரான் எண்ணிக்கை யையோ அன்றி அணு உட்கருவிலுள்ள புரோட் டான் எண்ணிக்கையையோ குறிப்பிடும். அணுவி லிருந்து ஒன்று அல்லது இரண்டு எலக்ட்ரான்கள் வெளியேற்றப்பட்டால், அது நேர்மின்னூட்டம் கொண்ட அயனியாக மாற்றப்படுகின்றது. அணுவின் உட்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள், பல சுற்றுப் பாதைகளில் அமைந்துள்ளன. சுற்றுப் பாதைகளில் ஆற்றல்களுக்கு ஏற்ப எலக்ட்ரான்களின் பிணைப்பாற்றல் இருக்கும். காட்டாக, ஹைட்ரஜன் அணுவில் முதல் சுற்றுப்பாதையில் (n=1) உள்ள எலக்ட்ரானின் பிணைப்பாற்றல் 13.6 எலக்ட்ரான் வோல்ட் (eV) ஆகும். இப்பிணைவாற்றல் சுற்றுப் பாதை எண்ணின் (n) இருமடிக்கு எதிர்விகிதத்தில் இருக்கின்றது. இரண்டாம் சுற்றுப்பாதையில் உள்ள எலக்ட்ரான் 13.6/22; eV= 3.4 பிணைப்பு ஆற்றல் கொண்டுள்ளது என்றும், மூன்றாம் சுற்றுப் பாதையில் உள்ள எலக்ட்ரான் 13.6/32; eV= 1.51 eV பிணைப்பாற்றல் கொண்டுள்ளது என்றும் நிறுவலாம். வெப்பமூட்டியோ அல்லது இடையீட்டுவினை புரியச் செய்தோ அணுவின் ஆற்றலை அதிகரிக் கலாம். தகுந்த அளவு ஆற்றல் கிடைக்கக்கூடியதாக இருந்தால் ஒரு பாதையிலுள்ள எலகட்ரான் அடுத்த பாதைக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றது. வெளிச் சுற்றுப் பாதையில் உள்ள எலக்ட்ரானுக்குத் தகுந்த அளவு ஆற்றல் ஊட்டப்பட்டால் அது அணு வை விட்டு வெளியேறிவிடும். இதற்கு முதல் அயனி மின்னழுத்தம் (first ionisation potential) என்று பெயர். அழுத்தம் மிகக் குறைவாகவே தேவைப் படுகிறது. அணுவின் ஆற்றல் அதிகரிக்க அதிகரிக்க, வெளிச் சுற்றுப்பாதை எலக்ட்ரான்களைத் தொடர்ந்து, உள்பாதையில் உள்ள எலெக்ட்ரான்களும் வெளியே வரும். இறுதியாக அணு, அணுக்கரு தனியாகப் பிரிக்கப்பட்ட நேர் (+) அயனியாகிவிடும். அதிக வெப்ப நிலையில் உள்ள சூரியனிலும், பிற விண் மீன்களிலும் அணுக்கள் இது போல் அயனிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. அயனி ஆற்றல் என்பது சுற்றுப்பாதையிலுள்ள எலக்ட்ரானை அணுவின் வெளியே கொ ணரத் தேவைப்படும் ஆற்றல் ஆகும். இது அணு எண்ணிற் கும் சுற்றுப் பாதை எண்ணிற்கும் தக்கவாறு மாறு படும். பொதுவாக மந்த வளிமங்களுக்கு அயனி ஆற்றல் அதிகம்.மந்தவளிம அணுக்களில் சுற்றுப் பாதைகள் எலக்ட்ரான்களால் நிரப்பப்பெற்று முழுமை பெற் றுள்ளன. இதன் காரணமாகவே மந்த வளிமங்கள் வேதியியல் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. அணுவுக்கு ஒரே ஒரு வெளி எலக்ட்ரான் கொண்ட சோடியம், பொட்டாசியம் லித்தியம் ஆகியவை தனிம அட்டவணையில் முதல் தொகுதி யைச் சேர்ந்தவை. இவற்றின் எலக்ட்ரான்கள் மிகக் குறைந்த அயனி ஆற்றல் கொண்டலை. அயனி மின் அமுதத்தின் பயன்கள். 1. அயனி மின் அழுத்தம் அதிகம்கொண்டமந்தவளிமங்கள்(ஆர்கான், செனான்,ஹீலியம், கிரிப்டான் போன்றவை) மின் விளக்குக் குமிழ்களில் இழைகளைப் பாதுகாக்க நிரப் பப்படுகின்றன. உலோகங்கள் உருக்கப்படும்பொழுது அவை உலைகளில் நிரப்பப்படுகின்றன. உலோகம் ஆக்சைடாக மாறாமல் அவை பாதுகாக்கின்றன. 2. ஒளி விழுந்தால் மின்சாரம் நல்கும் ஒளிமின்கலங் களில் (photo electric cells) சீசியம் ஆக்சைடு (caesium oxide) பயன்படுத்தப்படுகிறது. எத்துணை குறை வான ஒளி ஆற்றலிலும், இம் மின்கலம் மின்சாரம் கொடுக்கும். 3. ரேடியோ வால்வுகளிலும், X- கதிர்க் குழாய்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி களிலும், எலெக்ட்ரானை வெளியிடும் டங்ஸ்டன் இழைகள் உள்ளன. 1000°C வெப்ப நிலைக்கு மேல் எலக்ட்ரான்கள் வெளிவருகின்றன. இவ்விழைகளில் அயனி அழுத்தம் மிக அதிகமாகவும் இருக்கக் கூடாது; மிகக் குறைவாகவும் இருக்கக் கூடாது. உலோக இழைகளின் மீது ஆக்சைடு பொருள்கள் பூசப்பட்டுள்ளன. இவை எலக்ட்ரான் உமிழும் வெப்ப நிலையைக் குறைக்கும். உவோக இழை களைச் சூடான தட்டிலிருந்து வறுத்து எடுக்கிறார். கள். இழைகளில் ஒட்டியுள்ள எண்ணெய்ப் பசையும் வெளிப் பொருள்களும் நீக்கப்படுவதால், எலெக்ட் ரான் வெளிவரும் வெப்பநிலை குறைகின்றது. நூலோதி எஸ்.இல. 1. McGraw-Hill Encyclopaedia of Science & Tech- nology McGraw-Hill International Book Company New York, 1978. அயான்த்தைனா அயான்த்னதனா (ianthina) ஒரு கடல் வாழ் மெல் லுடலியாகும். இது மெல்லுடலிகளுக்கே உரித்தான