பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோடின்‌ 129

அயோடின் 129 இக்கனிமத்தின் உட்கூறுகள் வெவ்வேறு வெப்ப நிலைகளில் பல்லுருக்க (polymorphous) ளாகின்றன. 137°C-க்குக் கீழ் மையர்சைட்டு ஸ்பாலரைட்டு (sphalerite) வகையும்,J37°C-146°C இடைவெளியில் அயோடைரைட்டு-உர்ட்சைட்டு (wurtzite) வகையும், 146°C-க்கு மேல் ஆல்பா அயோடைரைட்டு-(&-Agī) பருஞ்சதுர (cubie) வகையும், அதிக அழுத்தத்தில் அயோடினுக்குப் பதில் புரோமின் சேர்ந்த அயோடின் புரோமிரைட்டு (iodian (iodian bromyrite) வகையும் கிடைக்கும். குப்ரோ- அயோடார்ஜிரைட்டு (cupro-iodoar- gyrite) என்பது செம்பு (15,91%), வெள்ளி (25.58%), அயோடின் (57.75%) ஆகியவற்றின் சேர்மம். இது மார்ஷைட்டு (marshite) க்கும் மையர்சைட்டுக்கும் இடைப்பட்டதென்பர். ட்டோக்கார்னலைட்டு (tocarnalite) என்பது பாத ரசம் கொண்ட கனிமம் ஆகும் (பாதரசம் 3.90%; வெள்ளி 33.80%; அயோடின் 41.77%). அயோடை ரைட்டுடனும் சின்னபாருடனும் அடர் மஞ்சள் பொடியாகக் காணப்படும் இக்கனிமம் சூரியஒளியில் கருப்பு நிறமடையும். சு அயோடைரைட்டு உருகும் போது அடர் ஆரஞ்சு நிறமும் குளிரும்போது வெளிர் மஞ்சள் நிறமும் பெற் றிருக்கும். அடர் பொட்டாசியம் அயோடைடுக் கரைசலில் கரைத்து நீரைச் சேர்த்தால் வீழ்படிவைக் கொடுக்கும். சோதனைச் சாலையில், பாதரச அயோடைடு, வெள்ளி பொட்டாசியம் அயோடைடு ஆகியவற்றை மூடிய குழாயில் வைத்து, 1,100°C வெப்பநிலையில் அயோடைரைட்டினைத் தயாரிக்கலாம். நைட்டிரேட்டு, பாதரச அயோடைடு சூடான கரைசலைக் குளிர வைத்தும் இக்கனிமத் தினைத் தயாரிக்கலாம். வெள்ளி கொண்ட வெள்ளிப் படிமங்களின் ஆக்சைடு பகுதிகளில் அயோடைரைட்டு துணைக் கனிமமாகிறது (secondary mineral). இது வெள்ளி, செரார்ஜிரைட்டு, புரோமி ரைட்டு, கால்சைட்டு, டெஸ்குளாய்சைட்டு, வனேடி னைட்டு, பைரோமார்பைட்டு, பிஸ்மோகிளைட்டு செருரைட்டு, லிமோனைட்டு, வாடு (wad) ஆகிய கனிமங்களோடு சேர்ந்து கிடைக்கிறது. பெருமள வில் நியூசவுத்வேல்சிலும், அமெரிக்க ஒன்றியநாட்டில் நெவேடாவிலும், ஜெர்மனி, பிரான்சு, ஸ்பெயின், சிலி, மெக்சிகோ, சோவியத் ஒன்றியத்திலும் கிடைக் கின்றது. வெ.இரா. நூலோதி 1. Palache, Charles., Berman, Harry., and Frondel, Clifford., The System of Mineralogy, Vol,2, 7th Edition, John Wiley & Sons Inc., New York, 1968. 2. Phillips, W. M. Revel, Mineralogy -The Non- opaque Minerals, W.H. Freeman and Company, San Francisco, 1981. அயோடின் இது ஓர் அலோகத் தனிமம். இதன் குறியீடு I. சாதாரணச் சூழ்நிலையில் இது உ லோகப் பளபளப் புடன் கூடிய அடர் ஊதா நிறத் திண்மப் பொரு ளாக உள்ளது. ஃபிரான்சு நாட்டைச் சேர்ந்த பெர்னார்டு கோர்ட்டாய்சு (Bernard Courtois) என்ற வேதியியல் அறிஞரால் 1812 ஆம் ஆண்டில் இது முதன்முதலில் கண்டறியப்பட்டது. அயோடின் (indine) என்ற பெயர் 'ஊதா நிறம்' என்னும் பொருளுடைய கிரேக்கச் சொல்லிலிருந்து வந்த தாகும். தாவர, விலங்கினங்களின் வாழ்க்கைக்கு இது மிகவும் இன்றியமையாதது. la 1 H Ila 3 4 Lj Be 11 12 0 2 Illa IVa Va Via Vilai He 5 6 7 9 10 B CIN F Ne 17 18 13 14 15 16 Na Mg llb IVb Vb VID VIIb Vill lb llb Al Si P S CI Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te I Xe 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 26 Cs Ba La Hf Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac Rf Ha lanthanide 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 series Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu actinide 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 series Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr படம் 1. அயோடின் தனிமவரிசை தனிம வரிசையில் VIII-A தொகுதியில் அயோ டின் வைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதித் தனி மங்களுக்கு ஹாலோஜன் அல்லது உப்பீனிக் குடும் பம் (halogen family) என்று பெயர். ஃபுளுரின், குளோரின், புரோமின், அயோடின், அஸ்ட்டட்டைன் 9.5-2-17