அயோடின் 133
வீரியம் குறைந்த அமிலம். இவ்வமிலக் கரைசலில் B 10 6' H,IO,, H,102, H,lO3, H,IzO, 10, ஆகிய எதிர் மின்சுமை கொண்ட அயனிகள் உள்ளன. இவ்வயனிகளுக்கிணையான Ag,10,, Nag106, KJ,0, போன்ற உப்புகளும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. பெர்அயோடேட்டுகள் அமிலக் கரைசலில் வீரியம் மிக்க ஆக்சிஜனேற்றிகளாகச் செயல்படுகின்றன; மாங்கனீசு (II) அயனிகளைப் பெர்மாங்கனேட்டு களாக ஆக்சிஜனேற்றுகின்றன. பெர் அயோடிக் அமிலத்தின் கரைசல் ஆக்சிஜனையும், ஒசோனையும் மெதுவாக வெளிப்படுத்துகிறது. ஹைப்போ அயோ டஸ் அமிலம் (HIO), அயோடஸ் அமிலம் (HIO,) போன்ற இடைப்பட்ட அமிலங்கள் நிலையற்றலை. கரிமச் சேர்மங்கள். அயோடினின் கரிமச் சேர் மங்கள், அயோடைடுகள், எலெக்ட்ரான் கவர்திற முள்ள தனிமங்களுடன் நேர்மின் தன்மையுள்ள அயோடின் சேர்வதால் கிடைக்கின்ற பெறுதிகள் என இரு வகைப்படுகின்றன. எளிய கரிம அயோடைடுகள் மற்ற கரிம ஞாலைடு களைப் பண்பில் பெரிதும் ஒத்துள்ளன. கரி அயோ டின் பிணைப்பு, மற்ற கரி-ஹாலோஜன் இணைப்பு களை விட வலிவு குன்றிக் காணப்படுவதால், கரிம அயோடைடுகள் குறைந்த நிலைப்புத்தன்மை உடையனவாகவும், அதிக வினைத்திறம் பெற்றன வாகவும் உள்ளன. அயோடினின் அதிக எடையால் அயோடைடுகள் அதிக அடர்த்தியுள்ளனவாகவும், எளிதில் ஆவியாகாத்தன்மை பெற்றும் உள்ளன. அயோடோ அல்க்கேன்கள், ஈத்தர் கரைசலில் ஆல்க ஹால் ஹைட்ரஜன் அயோடைடு அல்லது ஃபாஸ்ஃ பரஸ் மூவயோடைடுடன் வினைப்படுத்தித் தயாரிக் கப்படுகின்ற றன. சான்றாக அயோடோ மெத்தேன் மெத்தில் ஆல்கஹாலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அயோடோ மீத்தேன் ஒரு நிறமற்ற திரவம், இதன் கொதிநிலை 42.5°C. சூரிய ஒளியில் இது சிதைவுற்று அயோடினையும் எத்தேனையும் தரு கிறது. மக்னீசியத்துடன் உலர்ந்த ஈத்தரில் வினை புரிந்து கிரிக்னார்டு வினைப்பொருள் (Grignard reagent) என்ற ஓர் மிக முக்கியத் தொகுப்பு இடை நிலையைத் தருகிறது. CHI + Mg உலர் ஈதர் » CHgMgI இரண்டாவது வகைக் கரிமச் சேர்மங்களை அயோடின் மட்டுமே தருகிறது. குளோரினும் புரோ மினும் தருவதில்லை.அயோடினின் பெறுதிகளும் நிலை யற்றவையே. நிலையான சேர்மத்தை உருவாக்க அயோடின் 133 எலெக்ட்ரான் கவர்தன்மையுடைய -CF3, -C H போன்ற கரிமத் தொகுதிகள் தேவைப்படுகின்றன. எளிய அல்க்கைல் அயோடின் (III) சேர்மமாகிய இரு மெத்தில் அயோடினியம் (III) ஹெக்சாஃபுளுரோ ஆன்டிமனேட்டு நிலையற்றது. இது அயோடோ மீத் தேனிலிருந்தும், அறுஃபுளுரோ ஆன்டிமனிக் அமிலத் திலிருந்தும் தயாரிக்கப்படுகிறது; சிறந்த மெத்தில் தொகுதியேற்றக் காரணியாகப் பயன்படுகிறது. அயோடோசோ (RIO) சேர்மங்களும், அயோ டாக்சி (RIC) சேர்மங்களும் நிறமற்ற திண்மங்கள். இவை நீரில் ஓரளவு கரைகின்றன. வலிவுமிக்க ஆக்சி ஜனேற்றிகளான இவை வெப்பப்படுத்தியவுடன் வெடிக்கின்றன. அயோடோ குளோரைடு சேர்மம் (RICI) குளோரினேற்றக் காரணியாகச் செயல் படுகிறது. உயிரியலில் இன்றியமையாமை. அயோடின், உயி ரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் தேவையான பொருளாகும். லாமினேரியா போன்ற கடல் வாழ் தாவரங்கள் தங்களின் செரிமான இயக்கங்களின் போது கடல்நீரில் உள்ள அயோடைடு, அயோடேட்டு உப்புகளை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றன. பெரிய பாலூட்டிகளின் தைராய்டு சுரப்பிகளில் அயோடின் அதிகம் காணப்படுகிறது. தைராய்டு சுரப்பி ஒழுங் காக வேலை செய்வதற்கு ஒரு நாளைக்கு 100 மில்லி கிராமிலிருந்து 140 மில்லிகிராம் வரை அயோடின் தேவைப்படுகிறது. மனித உடலில் உள்ள மொத்த அயோடினில் சுமார் 1/3 பகுதி தைராய்டு சுரப்பியில் உள்ளது. மீதம் உள்ள பகுதி அண்டகம், இரத்தம், தசை முதலிய எல்லாவிதமான திசுக்களிலும் பர வியுள்ளது. இரத்தத்தில் 100 மி. லிட்டர் அளவில் நான்கிலிருந்து பத்து மைக்ரோகிராம் வரை அயோ டின் புரோட்டீனுடன் பிணைக்கப்பட்டுக் காணப் படுகிறது. மனிதனின் சிறுநீரில் ஒரு நாளைக்கு 10 இலிருந்து 200 மைக்ரோகிராம் வரை அயோடின் வெளிப்படுகிறது. தைராய்டு சுரப்பியில் உள்ள அயோடின் பெரும் பாலும் தைராக்சின் (thyroxin), அயோடோ ட்டைரோசின்கள் (iodo-tyrosines) போன்ற அயோடி னேற்றம் பெற்ற அமினோ அமிலங்களாக மாற்றப் படுகின்றது. இவ்வமினோ அமிலங்கள் தைராய்டு சுரப்பியில் தைரோகுளோபுலின் (thyroglobulin) ஆகச் சேமிக்கப்படுகின்றன. அயோடின் குறைவால் பாலூட்டிகளுக்கு முன் கழுத்துக்கழலை (goitere) என்ற நோய் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்நிலையில் அயோடின் குறைவை ஈடுசெய்யத் தைராய்டு சுரப்பிகள் தம் பரு மனில் அதிகரிக்கின்றன. பயன்கள். மனித வாழ்க்கையின் அன்றாடச்