134 அயோனியக் கடல்
134 அயோனியக் கடல் செயல்களில் அயோடின் பெரிதும் இடம் பெறுகிறது. குடிநீரைத் தூய்மைப் படுத்துவதற்கும், மருந் துகள் தயாரிக்கவும், ஒளிப்பட இயலில் பயன்படும் வெள்ளி அயோடைடைத் (Agī) தயாரிக்கவும் பயன் படுகிறது. அயோடினைக் கொண்டு தயாரிக்கப்படும் சாயப்பொருள்கள் வண்ண ஒளிப்படத்துறையில் பெரிதும் பயன்படுகின்றன. டிங்க்சர் அயோடின், அயோடெக்ஸ் போன்றவை கிருமி கொல்லியாகவும் வலி நீக்கிகளாகவும் பயன்படுகின்றன. முன் கழுத்துக்கழலை நோய்க்கு அயோடின் தூய ஆல்க ஹாலுடன் கலந்து உடலுக்குள் செலுத்தப்படுகிறது. கதிரியக்கத் தன்மையுடைய அயோடினின் [131 (53 புரோட்டான்கள் 78 நியூட்ரான்கள்) ஓரிடத்தனி மத்தைப் பயன்படுத்தித் தைராய்டு சுரப்பி வேலை செய்யும் விதத்தையும், மூளையில் உள்ள கட்டியின் (brain tumour) இருப்பிடம், அதன் பருமன் ஆகிய வற்றையும் கண்டறியலாம். அயோடினின் சேர்மங் கள் முக்கிய வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. கரிமச் சேர்மங்களுடன் கார்பன் மோனாக்சைடைச் சேர்க்கும் வினையில் நிக்கல் அயோடைடும் (Nil,), குறிப்பிட்ட பல்லுறுப்புச் சேர்மங்களை உருவாக் கும் வினையில் டைட்டேனியம் நாலயோடைடும் (Til) வினையூக்கிகளாகப் பயன்படுகின்றன. - . UIT. அல்லது அசெட்டோனையும் சேர்த்து மின்பகுப்புக்கு உள்ளாக்கினாலும் அயோடாஃபார்ம் உருவாகும். இது பென்சீன், அசெட்டோன் போன்ற கரிமக்கரை சலில் முழுமையாகவும், ஆல்கஹால், கிளிசரால் குளோரோஃபார்ம், கார்பன் டைசல்ஃபைடு, ஈத்தர் போன்ற கரிமக் கரைசலில் குறைவாகவும் கரைகிறது. இது நீரில் கரைவதில்லை. இது ஒரு வலிமை குன்றிய பாக்டீரியா கொல்லியாகும். வெட்டுக்காயம், புண் ஆகியவற்றிற்கு இது சீழ் எதிர்ப்பியாகப் (antisep tic) பயன்படுகிறது. இதற்குக் காரணம், இயல்பான நிலையிலும் அயோடோஃபார்மிலிருந்து அயோடின் வெளியாவதே. இவ்விதம் வெளியாகும் அயோடினே கீழ் எதிர்ப்பியாகப் பயன்படுகிறது. உடலில் மேலா கத் தடவப்படும் களிம்புகளில் (ointments ) இது பயன்படுகிறது. மேலும் இது கரிமச் சேர்மங்களில் CH,CH(OH)-,CH,CO போன்ற தொகுதிகள் உள் ளனவா என்று கண்டறியப்படும் அளவியலான சோதனைகளிலும் (qualitative test) பயன்படுகிறது. மெத்தில் ஆல்கஹால் அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுவதில்லை. நூலோதி McGraw Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company. New York, 1983. நூலோதி 1. LEE,J.D., Concise Inorganic Chemistry, Third Edition, ELBS, London, 1964. 2. McGraw-Hill Encyclopaedia of Chemistry, Fifth Edition, McGraw-Hill Book Company, New York, 1983. அயோடோஃபார்ம் (CHI ) இது மஞ்சள் நிறமும் அறுகோண வடிவமும் உள்ள திண்மப் பொருள். மூக்கைத் துளைக்கும் மணமுடை யது; இதன் உருகு நிலை 119°C, எத்தில் ஆல்கஹா லுடன் அயோடினைக் கலந்து சோடியம் ஹைட்ராக் சைடை ஊடகப் பொருளாகக் கொண்டு வெப்பப் படுத்தினால் அயோடோஃபார்ம் (iodoform) கிடைக் கிறது. எத்தில் ஆல்கஹாலுக்கு மாறாக அசெட்டோ னையும் பயன்படுத்தலாம். அயோடினைப் பொட் டாசியம் அயோடைடு கரைசலில் கரைத்து, உடன் சோடியம் ஹைட்ராக்சைடையும் எத்தில் ஆல்கஹால் அயோனியக் கடல் அயோனியக் கடல் (Ionian sea) இத்தாலிக்கும் கிரீசின் (Greece)தென் பகுதிக்குமிடையேயுள்ள மத்திய தரைக் கடற்பகுதியாகும். ஆட்ரான்ட்டோ நீர்சந்தி அயோ னியக் கடலுக்கும் ஏட்ரியாடிக் கடலுக்குமிடையே உள்ளது. கிரீசின் மேலைக் கடற்கரையில் இக்கடல் குடைந்துள்ள பெரியதொரு உள்வாய் தான் காரிந்த் வளைகுடா என்பதாகும். சிசிலிக்கும் கிரீசின் தென் பகுதியான மாட்டபான் முனைக்கு இடையே 420 மைல் தொலைவுள்ளது. புராதனக் கிரேக்கக் கதைக ளில் சொல்லப்பட்டுள்ள அயோ என்பவரின் பெயரால் இக்கடல் அயோனியக் கடல் என்று பெயர் பெற்றது. ஜூபிட்டர் எனும் உரோமானியக் கடவுள் அயோவை ஓர் எருமையாக மாற்றிவிடவே, தன்னைக் கடித்துத் துன்புறுத்த வந்த ஓர் உண்ணியின் தொந்தரவு பொறுக்கமாட்டாமல் அயோ இக்கடலைக் கடந்து நீந்திச் செல்ல முயன்றதால் இப்பெயர் பெற்றது என்று கிரேக்கக் கதைகள் கூறுகின்றன. அயோனியக் கடலைச் சுற்றிச் சிறு சிறு தீவுகள் உள்ளன. இவற்றுள்