142 அரக்குப் பூச்சி
142 அரக்குப் பூச்சி வயதில் வளர்ச்சிக் குறைவு வெளிப்படும். பொதுவாக இக்குழந்தைகள் பத்து வயதிற்குள் இறந்துவிடும். கல்லீரல், மண்ணீரல் பெருக்கம், மூட்டு விறைப்பு, தண்டுவடக்கூன் பக்க வளைவு முதலியவையும் காணப்படும். க-L -ஐடுரானிடேஸ் (a-L-iduroni- dase) என்ற நொதிக குறைவால் இந்நோய் ஏற்படு கின்றது. வீரியமற்ற பண்புக்கூற்றுத் தொகுதியில் ஏற்படும் மாறுதலால் இது உண்டாகிறது. உடலில் டெர்மடான் சல்ஃபேட்டு,ஹெரான் சல்ஃபேட்டு அழிவு தடைப்படுவதால் மிகுந்த அளவில் சிறுநீர் வெளியா கின்றது. இதற்கு முறையான சிகிச்சை ஏதுமில்லை. இரத்தப் புரத நீர் ஏற்றம் தற்காலிக சுகத்தைக் கொடுக்கும். கருக்கால ஆய்வுகள் மூலம் நோயைக் கண்டறியும் முயற்சிகள் செய்யப்படுகின்றன.ஊக்கி கள் இட்டு நிரப்பல் முடியுமானால் இந்நோயைக் குணப்படுத்த முடியும். மியுக்கோபலசக்கரைடுகள் (mucopolysaccarides) மூளையின் அடியில் படிவதால் தலைநீர்ப் பெருக்கமும் நரம்பியக்க அழிவும் ஏற்படுகின்றன. விழிவெண் படலப் புகைபடிதல், விழித்திரை விலகல், தலைநீர்ப் பெருக்கு, கண்ணழுத்த நோய், இவற்றால் பார்வை இழப்பும் ஏற்படுகின்றது. 1919இல் மூனிச்சைச் சேர்ந்த (Munich) ஜெர்ட்ரூடு ஹர்லர் (Gertrud Hurler) இந்த நோயைப் பற்றி விவரித்ததால் அவர் பெயர் இடப் பட்டது. எந்தவிதச் சிகிச்சையும் இதுவரை இந்த நோய்க்குப் பலனளிக்கவில்லை. நூலோதி 1. St. Lewis, "Heriditary Disorders of the Connec tive Tissue", 2nd Edition, The C.V. Mosby Co.. 1960. 2. Datey & Others, A.P.I. Text Book of Medicine, Vol II, 3rd Edition, 1979. உலருகின்ற, வெளிறிய நிறமுடைய, வன்பரப்பைத் தரக்கூடிய நீர்மம் ஆகும். சாராயம் விரைவில் ஆவியா வதால் இந்தக் குழைவணம் எளிதில் உலருகிறது. அரக்குக் குழைவணம் நீரை எதிர்க்காது. எனவே, வெளிப்புற மேற்பூச்சுகளுக்கு உதவாது. தரைக்கு மெருகூட்டவும், நிலக்கீல், கரிக்கீல், எண்ணெய்க்கீல், பிற பிசின் பொருள்கள் ஆகிய சாராயத்தில் கரை யாத அடைப்புப் பொருள்களுடன் கலக்கவும் உதவும். ஏற்கெனவே பூசப்பட்ட குழைவணங்கள் அல்லது நெய்வணங்களின் (paints) பழுதுபட்ட இடங்களில் பூச மிகவும் ஏற்றது. காண்க, மர மெருகூட்டல் (wood finishing). இயற்கை அரக்கு செம்பழுப்பு (brown) நிறமுடை யது. இதை ஆரஞ்சு அரக்கு என்பர். இயற்கை அரக்கின் நிறத்தைக் குளோரின் (chlorine) மூலம் நீக்கினால் வெள்ளை அரக்கு கிடைக்கும். நிறம் அகற்றிய (bleeched) வெள்ளை அரக்கின் உழைப்புக் காலம் இயற்கை அரக்கைவிடக் குறைந்தது; வன்மை குறைந்தது; மென்னிறமுடையது. அரக்கில் அமிலங் களும் எஸ்ட்டர்களும், 3 விழுக்காடு அரக்கு மெழு கும் (shellac wax) உள்ளன. அரக்கிலிருந்து மெழுகை நீக்கினால் மெழுகு நீக்கப்பட்ட அரக்கைப் (dewaxed shellac) பெறலாம். அரக்குக் குழைவணத்தை உடனடி யாகத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும். நாளாக நாளாக ஆவியாதல் வேகம் குறையும். மேலும் சாராயம் ஆவியாகிவிடுவதால் குறிப்பிட்ட சாராயத் தில் உள்ள அரக்கின் அளவும் கூடத் தொடங்கும். அரக்கு தரைக்கும் இருக்கைக்கும் மெருகூட்டப் பயன் படுத்தப்படுவது மட்டுமின்றிஅரக்குப்பிசினாகவும்(lac- quers), மையாகவும் (ink) மாற்றப்பட்டுப் பயன்படுத் தப்படுவதும் உண்டு. காரக்கரைசல்களில் அரக்கைக் கலந்து மெலிவூட்டும் பொருள்களைச் (water-thinned products) செய்யலாம். நாற்றமற்ற நெய்வனங்களில் அரக்கு ஓர் அடிப்படை உட்பொருளாய் அமையும். இது அந்த நெய்வணங்களில் (paint) படலங்கள் வேதியியலாகச் சிதைவுறாமல் இருக்க உதவுகிறது. காண்க, நெய்வணம்; மேற்பரப்புப் பூச்சு; குழை வணம். அரக்குக் குழைவணம் அரக்குப்பூச்சி வெளியிடும் பிசினின் (resin) பாள வடிவப் பொருள் அவலரக்கு (shellac) எனப்படு கிறது. அரக்குக் குழைவணம் என்பது இயல்பு நீக்கிய (denormalised) சாராயத்தில் (alcohol) கரைக்கப் பட்ட அரக்குக் கரைசலே ஆகும். அரக்குக் குழைவணம் மர மேற்பூச்சுகளுக்குப் பயன்படுகிறது. அரக்குக் குழைவணம் விரைவில் நூலோதி Weismantel, G.E., Paint Handbook, McGraw- Hill Book Company, New York, 1981. அரக்குப் பூச்சி உலகில் வெப்ப மண்டலப் பகுதிகளில் அத்தி, ஆல், இலந்தை போன்ற 30 வகை மரங்களில் அரக்குப்