பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அரசத்துணி

148 அரசத்துணி திலிருந்து கார்பன் டைஆக்ஸைடினை வெளியேற்று வதால் அரகோனைட்டை சியோலைட்டிலிருந்து வேறுபடுத்திக் கொள்ளலாம். அரகோனைட்டின் கால்சிய அணுக்களுக்குப் பதிலிகளாக (substitutes) ஸ்ட்ரான்சிய (strontium) ஈய அணுக்கள் விளங்குகின்றன. ஒளியியல் பண்புகள். நுண்நோக்கியின் கீழ் இது நிறமற்றதாகக் காணப்படும். ஒளியியலாக இது ஈரச்சு எதிர்மறைக் கனிமம். இதன் ஒளியியல் அச்சுத்தளம் நீள் இணை வடிவப்பக்கத்திற்கு (100) இணையா கவும் அடியிணை வடிவிற்கு செங்குத்தாகவும் இருக்கும். ஒளி அச்சுகளுக்கு இடைப்பட்ட கோணம் (2V) 18° ஆகும். இதன் ஒளி விலகல் எண் விரைவு அச்சிற்கு இணையாக 1.530 ஆகவும், இடை அதிர்வு அச்சிற்கு இணையாக தீ = 1.680 ஆகவும்; மெது அதிர்வு அச்சிற்கு இணையாக 1.680 ஆகவும் கணக்கிட்டுள்ளனர். வகைகள். அரகோனைட்டை ஊசித் தொகுப்பு வகை (acicular), தூண்வகை (coloumnar), திண்ம வகை (massive), கூரைப்படிவுக்கூம்பு (stalactitic), தரைப்படிவுக்கூம்பு (stalagmitic), பவளவகை (coral- loidal), அயப்பூக்கள் வகை (flos-ferri), மீன்முட்டை வகை (pisolitic) எனப் பகுக்கலாம். ஈயம் சேர்ந்தவை (plumbian). இவை டார்னோ விட்சைட்டு (tarnowitzite), பிளம்போ அரகோ னைட்டு (plumbo-aragonite) எனப்பல வகைப்படும். ஈய அளவு அதிகரிக்கும்போது ஒளிவிலகல் எண்ணும் (index of refraction) ஒப்படர்த்தியும் அதிகரிக்கும். ஸ்ட்ரான்சியம் சேர்ந்தவை (stcontian). இவை சைரிங் கைட்டு (zeiringite), மெஸ்காடைட்டு என்பனவாகும். துத்தநாகம் சேர்ந்தவை (zincian). நிக்கல்சோ னைட்டு (nicholsonite), சோடியம் கார்பனேட்டுக் கரைசலில் கால்சியம் குளோரைடு கரைசலைச் சேர்த்து 80°C வெப்பநிலையில் அரகோனைட்டினை வீழ்படிவாகப் பெறலாம். முத்துகள் (pearls) சிறிதளவு கால்சைட்டு சேர்ந்த அரகோனைட்டினால் ஆனவை. இது மெல்லுடலிகள் (mollusca) குடும்பத்தைச் சேர்ந்த கலப்பைக் காலி கள் (pelecypoda), வயிற்றுக்காலிகள் (gastropoda), சில உயிரினங்களின் சிப்பிகள், பவளத்தின் (coral) சிப்பிகள், ஓடுகள், கூடுகள் ஆகியவற்றின் ஆக்கப் பொருளாகவும் உள்ளது. இவை வெந்நீர் ஊற்றுப் படிவுகளாகவும் (hot spring), உப்புக்கரைசலின் வீழ்படிவாகவும், பொருக் குகளாகவும் (incrustations) காணப்படுகின்றன. ஜிப்சப் படிவுகளுடன் அதிக அளவில் கிடைக் கின்றன: பவள வடிவத்தில் (coralloidal) அயத்தாது வான சிடரைட்டு (siderite), சுரங்கத்தில் கிடைக்கும் வெள்ளை நிறவகை அயப்பூக்கள் எனப்படும் எரி மலைப் பாறைகளின் குழிகளிலும் செம்பு, அய, ஈய சல்பைடுகளுடன் இணைந்து கிடைக்கின்றன. ஜெர்மனி, பிரான்சு, அமெரிக்க ஒன்றிய நாடு களில் குறிப்பிடத் தகுந்த அரகோனைட்டுப் படிகங் கள் கிடைக்கின்றன. இந்தியாவிலும் அரகோனைட்டு கிடைக்கிறது. நூலோதி வெ.இரா. 1. Palacke, Charles,, Bermann, Harry., and Frondel, Clifford, The System of Mineralogy, Vol. 2. 7th Edition, John Wiley & Sons, Inc., New York, 1960. 2. Dana, E. S., A Text Book of Mineralogy, Wiley Eastern Ltd., New Delhi, 4/e, Reprint, 1985. 3. Betekhtin, A., A Course of Mineralogy, Peace Publishers. Moscow. 1985. 4. McGraw-Hill Encyclopaedia of the Geological Sciences, McGraw-Hill Inc., New York. 1978. அரசத்துணி அதிக ஊடைப் பருத்தித் துணியே அரசத்துணி (imperial cloth). காண்க, ஃபஸ்டியன் (fustion). இதில் அரச நாற்படை, அரச மடங்கியல், ஆட்டுத்தோல் வகை ஆகிய துணிகள் அடங்கும். இவற்றின் உடம் பில் இழைகள் பொதிவாக எழும்பி அமையும். இயல்பு அரசத்துணி 2, 3 வெனீசியம் ஊடையால் நெய்யப்படும். ஏனெனில் அதிக அளவு ஊடையிழை கள் இருபுறத்திலும் அடர்ந்த சுருள்பொதியை (nap) ஏற்படுத்த உதவும். இவற்றில் 33 துகில் பாவும், 40 துகில் ஊடையும் ஒரு செ.மீ.இல் 19 பாவிழை களும், 62 ஊடையிழைகளும் அமைந்திருக்கும். அரச நாற்படை வகை. இயல்பு அரசத்துணி யினும் பளுவானது இது. து 8 இழை நாற்படை நெசவால் நெய்யப்படுகிறது. 6 ஊடை, மிதவைப் பரப்பை உருவாக்கும். இது அடியில் சிறு சுருள் பொதி உருவாக்க ஏற்றது.