பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அரசமரம்‌

150 அரசமரம் கின்றது. அரைக்கப்பட முடியாத கடினமான உண வுப் பொருள்கள் அரைவைப் பையிலிருந்து உணவுக் குழல் வழியாக வாய் மூலம் வெளித்தள்ளப்படும். மெல்லுடலிகள் புழுக்கள், கடல் வாழ் ஆல்காக்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. இதன் நீண்ட குழல் போன்ற இதயம், இதய வுறையால் சூழப்பட்டுத் தலைப் பகுதியிலிருந்து வயிற்றுப் பகுதி வரை அமைந்துள்ளது. இதயத்தில் 8 இணைத் துளைகள் பக்கவாட்டில் இருக்கின்றன. இதயத்தின் முன் பக்கத்திலுள்ள மூலதமனி மூன்று கிளைகளாகப்பிரிந்து அவற்றின் வழியாகக் குருதியைப் பல்வேறு பாகங்களுக்கு எடுத்துச் செல்கிறது. இதைத் தவிர இதயத்தின் பக்கவாட்டிலிருந்து கிளம்பும் நான்கு தமனிகள் தூய குருதியைத் தலை, வயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் ஆகியவற்றிற்கு எடுத்துச் செல்கின்றன. புத்தகச் செவுள்களில் சுத்தமாக்கப் படும் குருதி திரும்பவும் பல சோடி சிரைகளின் மூல மாக இதயத்தைச் சுற்றியுள்ள இதய உறைக்கு வந்து சேருகிறது. ஹிமோசயனின் (haemocyanin) என்ற நிறமி இருப்பதால் குருதி நீலநிறமாக உள்ளது. இந் நண்டின் செவுள் பட்டைகள் புத்தகத் தாள்களைப் போன்று அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருப்பதால் "புத்தக நுரையீரலின்" முன்னோடியாக இவை அமைந்திருக்கின்றன. செவுள்கள் அசையும் போது நீரிலுள்ள ஆக்ஸிஜனை உட்கிரகித்துக் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன. புத்தகச் செவுள்கள் துடுப்பு போன்றும் பயன்படுகின்றன. மூளையானது உணவுக் குழலைச் சுற்றி நரம்பு வளையமாக அமைந்துள்ளது. நரம்புச் செல் திரள்கள் ஒன்றுசேர்வதால் இந்நரம்பு வளையம் உண்டா கின்றது. இந்த வளையத்திலிருந்து நரம்புகள் தலைப் பகுதியிலுள்ள உறுப்புக்குச் செல்கின்றன. இணையாக அமைந்துள்ள நரம்புத் திரள்களில் முன்பக்கம் நரம் புத் திரளும், பின் பக்கம் உணர்ச்சி நரம்பிழைகளும் அமைந்துள்ளன. அரச நண்டில் காணப்படும் முக்கிய புலனுறுப்புகள் கண்கள் ஆகும். சுவை அரும்புகள் (taste buds) கண்டத்தின் கால் உட்புறப்பகுதியில் காணப்படுகின்றன. இவற்றில் ஆண், பெண் வேறுபாடுகள் இருப்பி னும் அவற்றின் இன உறுப்பின் புறத் தோற்றத்தில் வேறுபாடு தெரிவதில்லை. பின்னிய வலை போலிருக் கும் இன உறுப்பிலிருந்து ஆணின் விந்து நாளமும் பெண்ணின் அண்ட நாளமும் அதன தன் இன உறுப்பு மூடியின் அடியில் திறந்தவாறுள்ளன. அரச நண்டிற்கு உடற்புணர்ச்சி உறுப்புகள் கிடையா. ஆண் நண்டின் முதல் கால் பெருத்துத் தடிமனாக இருப்பதால் ஆண் நண்டை பெண்ணிலிருந்து எளிதில் அடையாளம் காண முடியும். கோடையில் இவை கடலோரப் பகுதி யில் இணைகளாகக் காணப்படும். ஆண் அரசநண்டு பெண் அரசநண்டின் புறத்தோட்டைத் தன் முன் காலிலுள்ள கொக்கியினால் பற்றிக் கொள்ளும். பெண் நண்டு மண்ணில் குழிதோண்டி அதனுள் முட்டையிடும் போது ஆண் நண்டு அதன் மீது விந்துக்களை விட்டுக் கருத்தரிக்கச் செய்கிறது. ஒவ் வொரு தடவையும் பெண் அரசநண்டு சுமார் 3.மி. மீ. விட்டமுள்ள 200-300 முட்டைகளை இடும். இவை மண்ணால் மூடப்பட்டு அலைகளால் நனைக்கப்படும். இவற்றிலிருந்து சுமார் 1 செ. மீ. நீளமுள்ள "திரை லோபைட் லார்வா" வெளிவரும். இந்த லார்வாக் கள் 'திரைலோபைட்' எனும் உயிரியின் உருவத்தை ஒத்திருப்பதால் இப்படி அழைக்கப்பட்டன. இது முதிர் பருவம் அடையக் குறைந்தது மூன்று வருடம் ஆகிறது. அரசநாகம் காண்க, கருநாகம் அரச மடங்கியல் துணி சா. கா. து அரசத்துணி வகையில் ஒன்று. காண்க, அர சத்துணி (imperial). அரசமரம் தாவரவியலில் ஃபிக்குஸ் ரிலிஜியோசா {ficus religiosa Linn.) என்றழைக்கப்படுகின்றது. இதற்கு ஆங்கிலத் தில் பீப்பால் மரம் (peepul tree) என்று பெயர். இது ஒருபூவிதழ் வட்டத்தையுடைய (monochlamy- deous) இருவிதையிலைக் குடும்பமாகிய மோரேசியைச் (moraceae) சார்ந்தது; இந்தியா முழுவதும் இயற் கையாகவும் (wild), வளர்க்கப்பட்டும் காணப்படு கின் றது. சாலையோரங்களில் நிழல் தரும் மரமாக வும், ஆற்றங்கரையில் (ஆலயங்களில்) வழிபடுவதற் காகவும் இது வளர்க்கப்படுகின்றது; விரைவாக வளரக்கூடியது; விதைகள், போத்துகள் ஆகியவற் றின் மூலம் பரப்பப்படுகின்றது. எல்லா மரங்களுக் கும் தலைமையானதாகக் கருதப்படுவதால் இதற்கு 'அரசு' என்று பெயர் ஏற்பட்டது. கல்ஆல், அத்தி, பேய்அத்தி, மரம்தின்னி அத்தி, மலை இச்சி