அரச நண்டு 151
போன்ற மரங்களும் அரசமரத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவையே. சிறப்புப் பண்புகள். இது பரந்து விரிந்து பல ஆண்டுகள் வரைவளரக்கூடிய மிகப்பெரிய இலையுதிர் மரமாகும்; கிளைகள் பல உண்டாகி நாலா பக்கங் களிலும் பரந்து காணப்படும். ஆலமரம் போன்று பெரும் விழுதுகளைத் தோற்றுவிக்காவிட்டாலும் சில சமயங்களில் கிளைகளிலிருந்து ஆங்காங்கே பல சிறு வேர்கள் தோன்றி நிலத்தை நோக்கி வளரக் கூடும். மரப்பட்டை சாம்பல் நிறத்திலிருக்கும். இலை கள் மாற்றமைவு உடையவை (alternate phyllotaxy); தனித்தவை; அகன்ற இருதய வடிவமுடையவை (cordate); நீள் கூர்முனை உடையவை (caudate); ஏறக்குறைய தொங்கு நிலையிலுள்ளவை; விளிம்புகள் (undulate); நெளிசல்களுடையவை மேற்பரப்பு அரச நண்டு 151 பளபளப்புடன் இருக்கும்; இலைக்காம்பு (petiole) மிகவும் நீண்டிருக்கும் (7.5-10.0 செ.மீ.). இலைக் கோணங்களில், காம்பற்ற உருண்டையான சைக் கோனியம் (syconium) என்று கூறப்படுகின்ற ஒரு தனிவகை மஞ்சரி அமைந்திருக்கும். இது பெரும் பாலும் இணையாகக் காணப்படும். இதனுள் மிகச் சிறிய ஒருபாலினப் பூக்கள் ஏராளமாகக் காணப் படும். சைகோனியத்தின் நுனியில் சிறுதுளை ஒன் றுண்டு. இதையடுத்து உட்புறமாக ஒரு சில ஆண்பூக் களும், எஞ்சியுள்ள பகுதியில் பெண்பூக்களைவிட அதிக எண்ணிக்கையில் மலட்டுப் பூக்களும் (gall flo- wers) அமைந்திருக்கின்றன. ஆண், பெண் பூக்கள் ஒரே சமயத்தில் பக்குவமடையாததால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுகின்றது. சிறு துளைகள் வழியாகப் பூச்சிகள் நுழைந்து ஊரும்பொழுது, அவை அயல் மகரந்தச் சேர்க்கையை ஏற்படுத்துகின்றன. காய் 5 7 அரச மரம் (ficus religiosa L.) 1. மிலார் 2. இலையடிச் சிதல்கள் 3. மகரந்தத்தாள் 7. மஞ்சரி 8. பூ இதழ்கள் மலட்டுப் பெண் பூ 5. 10. இலையடிச் சிதல் வடு 4. 9. 10 பெண் பூ 6. மலட்டுச் சூலகம் லெண்டிசெல் (துனை