பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 அரசு கால்நடைப்‌ பண்ணைகள்‌

154 அரசு கால்நடைப் பண்ணைகள் மட்டத்திற்கு 3000 அடி மேலுள்ள இந்தப் பண்ணை யில் அயல் நாட்டு இனப் பால்வள மாடுகளான ஜெர்சி (Jersy), ஃபீரிசியன் (Friesian) கால்நடைகள் இனவிருத்தி செய்யப்படுகின்றன. சிந்து இனமும் மூல இனவிருத்தி (pure breeding) செய்யப்படு கின்றது. சிந்து இனத்தின் மந்தையின் மிகச்சிறந்த பொலிகாளைகளைத் தெரிவு செய்யப் பரம்பரைச் சோதனைத் திட்டம் (progeny testing scheme) செயல் படுகின்றது. இந்த இரண்டு இனங்களையும் கலப்பு இனவிருத்தி மூலம் தமிழ்நாட்டிற்கு ஏற்ற கறவைப் பசு உருவாக்குவதில் இந்தப் பண்ணையில் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்தப் பண்ணையில் உலர்ந்த புல் (hay) பதனிடப்பட்ட புல் (silage) ஆகிய இரண்டும் சிறப் பாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டுப் பிரிவு. பன்றிகள் பிரிவு, கோழி இனப் பிரிவு ஆகியவை இந்தப் பண்ணையுடன் இணைந்துள்ளன. ஓசூர் கால்நடைப் பண்ணையில் மட்டும் குதிரை கள் வளர்க்கப்படுகின்றன. தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம் விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்புப் பயிற்சி நிலையம் ஒன்றை இந்தப் பண் ணையில் நடத்துகின்றது. மாவட்டக் கால்நடைப் பண்ணை, ஒரத்தநாடு,சர போஜி அரசு பரம்பரை, அன்னதானம் வழங்க இந் தப் பண்ணையை ஆரம்பித்தது. சத்திரம் இவாக்கா வின் கீழ் இருந்த இந்தப் பண்ணை 1964 ஆம் ஆண்டு கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு மாற்றப் பட்டது. தஞ்சையிலிருந்து 22 கி. மீ. தொலைவில் உள்ள இந்தப் பண்ணையில் முர்ரா எருமையினம், சிந்து இனம் ஆகியவை மூல இனவிருத்தி செய்யப் படுகின்றன. கலப்பின மாடுகளும் வளர்க்கப்படு கின்றன. ஒரு கோழிப்பிரிவும் இணைந்துள்ளது. முர்ரா எருமை மந்தையில் சிறந்த எருமைக்கிடாக் களைத் தெரிவு செய்ய மரபுவழி சோதனைத் திட்டம செயல்படுகின்றது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் விவசாயிகளுக்கெனப் பயிற்சி நிலையத்தை இங்கு நடத்துகிறது. கொருக்கை. மாவட்டக் கால்நடைப் பண்ணை, தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத் தில் உள்ள கொருக்கை கிராமத்தில் இந்தப் பண்ணை அமைந்துள்ளது. மணற்பாங்கான இந்த வட்டா ரத்தில் உழவுக்கும், பளு இழுப்பதற்கும் பெயர் பெற்ற உம்பளாச்சேரி இனம் அழிந்துவிடாமல் இருக்க இந்தப் பண்ணை தொடங்கப்பட்டது. இந் தப் பண்ணையில் ஜெர்சி - சிந்து -உம்பளாச்சேரி கலப்பு இனவிருத்தி செய்து, கலப்பினங்கள் பால் கொடுக்கும் திறன் பற்றி ஆய்வு நடத்தப்படுகின்றது. அயல் இன கால்நடைப்பெருக்குப் பண்ணை, ஈச்சங் கோட்டை. இது தஞ்சாவூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் வல்லம் - ஒரத்தநாடு சாலையில் அமைந் துள்ளது. மைய அரசு ஆதரவுடன் 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பண்ணையில் ஜெர்சி இனம் இனவிருத்தி செய்யப்படுகின்றது. தமிழ் நாட்டில் கலப்பின விருத்திக்கு ஜெர்சி இனம் ஏற்கப் பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள செயற்கை முறை இனவிருத்திக்கான பொலிகாளைகளின் தேவையை நிரப்புவதே இந்தப் பண்ணையின் நோக்கம் ஆகும். இந்தப் பண்ணையை ஆரம்பிப்பதற்கு ஆஸ்திரேலியா அரசு ஜெர்சி கால்நடைகளை வழங்கியுள்ளது. இந்தப் பண்ணையில் டென்மார்க் உதவி யுடன் உறைவிந்து நிலையம் செயல்படுகின்றது. உறைவிந்தை உபயோகிக்க இத்துறைகளில் உள்ள அலுவலர்களுக்கு இங்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பண்ணை தமிழ்நாட்டில் வெண்மைப்புரட்சி விரைவாகச் செயல்படப் பெரும்பங்கு ஏற்கிறது. அரசு மாவட்டக் கால்நடைப்பண்ணை, செட்டிநாடு. இது இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு அரு கில் 14 கி.மீ. தொலைவில் 1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது இங்கு தார்பார்க்கர், முர்ரா எருமை இனங்களின் அசல் இனவிருத்தி நடத் தப்படுகிறது. இந்தப் பண்ணையுடன் ஆட்டுப் பிரிவு, கோழிப்பிரிவு, இணைந்துள்ளன. பன்றிப்பிரிவு ஆகியவை மாவட்டக் கால்நடைப் பண்ணை புதுக்கோட்டை. புதுக்கோட்டை அரசால் புதுக்கோட்டை நகரில் பால் பண்ணையாக இயங்கிய இப்பண்ணை 1951 ஆம் ஆண்டு கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு மாற்றப் பட்டது. இப்பண்ணையின் பரப்பளவு 990. 57 ஏக்க ராகும். இந்தப் பண்ணையில் சிந்து, முர்ரா, அசல் இனவிருத்தியும்,ஜெர்சி -சிந்து கலப்பு இனவிருத்தி யும் செய்யப்படுகின்றன. இப்பண்ணையுடன் ஒரு செம்மறி ஆட்டுப்பிரிவு, வெள்ளாட்டுப் பிரிவு, பன்றி கள் பிரிவு, கோழிகள் பிரிவு, கலப்பின கிடாரிகள் உற்பத்திப் பிரிவு ஆகியவை செயல்படுகின்றன. மாவட்டக் கால்நடைப் பண்ணை, அபிஷேகப்பட்டி. திருநெல்வேலி-தென்காசிச் சாலையில் திருநெல்வேலி யிலிருந்து 8-வது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தப் பண்ணை 1964ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. கிர்இனம், முர்ரா எருமையினம் ஆகியவற் றின் அசல் இனவிருத்தி நடைபெறுகின்றது. ஜெர்சி- கிர் கலப்பினபெருக்கச் சோதனையும் நடைபெறு கின்றது. இப்பண்ணையில் உறைவிந்து நிலையம் ஒன்றும், உறைவிந்து பயிற்சி நிலையம் ஒன்றும்