பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 அரசுப்‌ புள்ளி விவரம்‌

156 அரசுப் புள்ளிவிவரம் மேநாடுகளில் பொதுமக்கள் அனைவரும் பன்றி இறைச்சியை விரும்பிப் பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் பன்றிகள் அங்கு அறிவியல் அடிப்படையில் தூய்மையான சூழ்நிலையில் வளர்க் கப்படுவதேயாகும். மேலும், நமது நாட்டுப் பன்றி களோடு ஒப்பிடும்போது அயல்நாட்டுப் பன்றிகளை வளர்ப்பது ஊதியம் மிகுந்த தொழிலாக உள்ளது. ஓசூர், புதுக்கோட்டை, செட்டிநாடு, திருநெல் வேலி, உதகை ஆகிய 5 மாவட்டக் கால்நடைப் பண்ணைகளிலும், சைதை கால்நடை மருத்துவ மனை வளாகத்திலும் பன்றிப் பிரிவுகள் அமைந் துள்ளன. அந்தப் பிரிவுகளில் வெள்ளை யார்க்ஷையர் (large white Yorkshire) பன்றிகள் பெருக்கப்பட்டுப் பல அரசுத் திட்டங்களின் வழிவழங்கப்படுகின்றன. கோழி வளர்ப்பு. தமிழ்நாட்டில் 1982 ஆம் ஆண்டு கால்நடைக் கணக்குப்படி 1,82,83,720 கோழிகள் உள்ளன. கோழி வளர்ப்பை ஓர் இலாபகரமான தொழிலாக அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான திறன் மிகுந்த கோழியினங்களை மக் களுக்குக் கிடைக்க வழிவகை செய்யவும், கோழி பராமரிப்புப் பற்றிய விவரங்களை நேர்முகமாகத் தெரிந்துகொள்ளவும், 25 கோழி விரிவாக்க நிலை யங்களும், 4 மாவட்டக் கால்நடைப் பண்ணைகளில் (ஓரத்தநாடு, புதுக்கோட்டை, செட்டிநாடு, அபிஷே கப்பட்டி) கோழிப் பிரிவுகளும், செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கத்தில் ஒரு கோழிப் பண்ணையும் இயங்கி வருகின்றன. மேலும் காட்டுப்பாக்கம், ஒசூர் ஆகிய பண்ணை களில் குஞ்சு பொரிக்கும் நிலையங்களும் செயல்படு கின்றன. இந்த நிலையங்களில் பொதுமக்களுக்கு அடை வைக்கும் முட்டைகள், கோழிக் குஞ்சுகள், வளர்ப்புக் கோழிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலமுடன் வாழ வும், உடல்நலத் தகுதியுடன் அறிவாற்றல் மிகுந் தவர்களாகவும் இருப்பதற்கு உணவில் பால், முட்டை, இறைச்சி போன்ற ஊட்ட உணவுகள் உகந்த அளவு சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கால்நடைகளின் தரத்தை உயர்த்தி, ஊட்ட உணவுகளின் உற்பத்தியைப் பெருக்கித் தமிழ் மக்களுக்குத் தேவையான அளவு கிடைக்க வழி செய்யும் நற்பணியில் அரசுக் கால் நடைப் பண்ணைகள் ஈடுபட்டு வருகின்றன. அரசுப் புள்ளிவிவரம் - ச. ர ஒரு நாட்டின் பொருளாதாரம் (Economics), சமு தாயம், கல்வி போன்ற பல துறைகளின் முன்னேற் றத்திற்காகவும், பல நல்ல திட்டங்களை வகுக்கவும் அரசால் தொகுக்கப்படும் புள்ளிவிவரங்கள் அரசுப் புள்ளிவிவரம் (official statistics) எனப்படும். இவ் வாறு புள்ளிவிவரங்களைத் தொகுக்கும் பணி பழங் காலந்தொட்டே இருந்து வருகிறது. முதன் முதலில், மக்கள்தொகையியல் (Demography), பொருளியல் விவரங்களை மட்டுமே அன்றைய அரசுகள் தொகுத் தன . ஆனால் நாளடைவில் பலவகைப் பட்ட விவரங் களைப் பல துறைகள் தொகுக்கத் தொடங்கின. துறை ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்குப் புள்ளிவிவரம் பெரிதும் பயன்படுகின்றது என்ற உண்மையை அறிந்த அரசு எல்லாத் துறைகளிலும், அவ்வத்துறை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்களைத் தொகுக்கின் றது. புள்ளிவிவரங்களைத் தொகுக்கும் பணியைக் கவனிக்கத் தனியாக ஒரு புள்ளியியல் (statistical department) யை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் புள்ளியல் துறை, மற்றத் துறைகளில் தொகுக் கும் புள்ளிவிவரங்களைப் பற்றி ஆராய்ந்து உண்மை யான, நம்பகமான புள்ளிவிவரங்களைத் தொகுப் பதற்கான வழிவகைகளை உருவாக்கி அரசுக்குத் தரு கின்றது. புள்ளியியலில் தேர்ச்சி பெற்றவர்களையோ, நன்கு பயிற்சி பெற்றவர்களையோ கொண்டு, புள்ளிவிவரங்கள் திரட்டப்படுகின்றன. புள்ளிவிவரங்கள் ஒரு நாட்டின் இன்றைய நிலை யையும், இதற்கு முந்திய நிலையையும் அறிந்து கொள்ளப் பயன்படுவதல்லாமல், எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு நிலைமைகளை மதிப்பீடு செய்ய வும் பயன்படுகின்றன. இப் புள்ளிவிவரங்களின் அடிப் படையில் தான் அரசு திட்டங்களை வகுக்கின்றது, நீண்டகால, குறுகிய கால், தொடர் திட்டங்களை வகுக்கவும், அத்திட்டங்களைச் சிறந்த முறையில் செயல்படுத்தவும் புள்ளிவிவரங்கள் மிகவும் அவசிய மாகும். வேளாண்மை, உணவு, கல்வி, பொருளா தாரம், வணிகம், தொழில், பொதுநலம், பாது காப்பு, அஞ்சல் தொலைவரி, போக்குவரத்து போன்ற வேறு துறைகளில் புள்ளிவிவரங்கள் தொகுக்கப்படு கின்றன. அவை அந்தந்தத் துறையில் பயன்படுத்தப் படுவதல்லாமல் மற்ற அரசுத் துறைகளிலும் ஒருங்கி ணைந்த முறையில் பயன்படுத்தப்படுகின்றன. புள்ளி விவரங்கள் இல்லாமல் ஓர் அரசு திறமையாக செயல் படுவது மிகவும் அரிதாகும். அரணை -கே-ந நிலவாழ் ஊர்வன விலங்கு வகைகளுள் அரணை களும் (skinks) ஒன்றாகும். இவற்றின் உடல்தோல்