அரணை 157
வழவழப்பான, பளபளப்பான புறத்தோல் செதில் களால் போர்த்தப்பட்டுள்ளது. இவற்றின் நீண்ட உடல் தலை, கழுத்து, நடுவுடல் (trunk). வால் என்னும் பகுதிகளையுடையது. இதன் கூம்பு வடிவ முடைய தலையின் மேல்பக்கத்தில் தோலெலும்புத் தகடுகள் (osteoderms) உள்ளன. உடற் பகுதியுடன் இரண்டு இணை கால்கள் இணைந்துள்ளன. இதன் வால், உடலின் மிக நீளமான பகுதியாகும். தாடை களின் உள்விளிம்புடன் கூர்மையான கூம்புப் பற்கள் (conical teeth) ஒட்டிக்கொண்டுள்ளன. சற்றே பிளவுற்று, செதில்களுடன் கூடிய நாக்கு வாய்க்குழி யில் உள்ளது. எபில்ஃபேரஸ் (ablepharus), சால்சிடெஸ் (chalcides), கோருசியா (corucia), லைகோசோமா (lygosama), மெபுயா (mabuya), யுமிசஸ் (eumecess), மேக்ரோசின்கஸ் (macroscincus) நெசியா (nessia), நியோசெப்ஸ் (neoseps), சின்கஸ் (sincus), டிராக் கிசாரஸ் (trachysaurus), டிரோப்பிடோபோரஸ் (tropidophorus), சுலோட்டெஸ் (sulotes). என்னும் பதின்மூன்று பொதுவினங்களைச் சேர்ந்த ஏறக் குறைய 400 அரணைச் சிறப்பினங்கள் அன்டார்க் டிகா தவிர்த்து உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழ்கின்றன. ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியா விலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் இருநூறுக்கும் அரணை 157 மேற்பட்ட அரணை வகைகள் காணப்படுகின்றன. மேலைநாடுகளில் இவை அதிகமாகக் காணப்பட வில்லை. சாலமன் தீவுகளில் வாழும் இரண்டடி நீளமுள்ள கோருசியா செப்ரேட்டா (corucia zebrata), என்னும் சிறப்பினமே அரணைகளுள் மிகப் பெரியதாகும். செர்ட்டிலியாவின் (lacertilia) இரு பெரிய குடும்பங் களுள் அரணைக் குடும்பமும் ஒன்று. மிக அதிக எண்ணிக்கையில் அரணைச் சிறப்பினங்கள் காணப் பட்டாலும் அவற்றின் உடலமைப்பில் பெரும் வேறு பாடுகளில்லை. பெரும்பாலான அரணைகள் கூம்பு வடிவத் தலை, உருளையான நடுவுடல், கூராக முடி யும் வால், வழவழப்பான செதில்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பினும் சில அரணைகள் சற்று மேல் கீழாகத் தட்டையான நடுஉடல், குட்டையான வால், நீட்சி உடைய சொரசொரப்பான செதில்கள் ஆகிய வற்றைக் கொண்டுள்ளன. டிராக்கிசாரஸ், சின்கஸ், மெபுயா ஆகியவற்றில் ஐவிரற்கால்கள் (pentadactyl limbs) சமச்சீரமைப்புடன் உள்ளன; லைகோசோமா (Iygosoma) போன்றவை கால்களற்றவை; ஏனையவை இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட பல்வேறு நிலைகளிலுள்ள கால்களைக் கொண்டுள்ளன. நான்கு கால்களிலும் விரல்கள் ஒரே எண்ணிக்கையில் உள்ளன; ஆனால் சில இனங்களில் முன்னங்கால்களில் கோருசிய செய்ரேட்டா