158 அரணை
158 அரணை குறைவாகவும் பின்னங்கால்களில் அதிகமாகவும் காணப்படுவது உண்டு. ஒரே பேரினத்தைச் சேர்ந்த பலசிறப்பினங்களில்கூட கால்கள் பல்வேறு நிலைகளில் காணப்படுகின்றன. சுலோட்டெஸ் பொதுவினத்தில் வாலின் அமைப்பு கால்களின் அமைப்பைப் பொறுத்து மாறுபடுகிறது. தமிழகத்தில் காணப்படும் விற்கு நீண்ட கால்களும், நீண்ட வாலும் உள்ளன. லைகோசோமாவின் வால் குட்டையாக உள்ளது. மெபுயா அரணைகளுள் பெரும்பாலானவை ஈரமற்ற மணல் தரையிலுள்ள வளைகளில் வாழ்கின்றன. அவ்வப்போது வளையிலிருந்து வெளிவந்து தரையின் மேல் ஊர்ந்து சேல்லும் இரையைப் பிடிக்கவும் அல்லது தான் இரையாகாமல் தப்பிக்கவும் வேகமாக ஓடும் தன்மையன. எனினும், இவை ஓட்டத்தில் சிறந்தவையல்ல. இவற்றுள் ஒன்றுகூட நடுஉடலைத் தரையினின்று தூக்கிக்கொண்டு பின்னங்கால் களால் ஓடும் ஆற்றல் உடையதன்று. அரணைகள் நிலத்தின் மேல் ஊர்வதற்கும் ஓடுவதற்கும் மட்டுமன்றி வளை தோண்டுவதற்கும் கால் களைப் பயன்படுத்துகின்றன. பொதுவாக வளை தோண்டுதலில் தேர்ச்சியுடையவை. கால் களற்ற அரணைகள் பாம்புகளைப் போன்று நடு உடலைப் பல இடங்களில் வளைத்து வாலின் உதவி யுடன் படுக்கை வாட்டத்தில் நிலத்தின் மேல் விரை . வை வாக ஊர்ந்து செல்லும். கால்களற்ற நெசியா போன்றவை கூம்பு போன்ற தலையைப் பயன்படுத்தி வளையைத் தோண்டுகின்றன. நியோசெப்ஸ் போன்ற வற்றில், கீழ்த்தாடை உள்ளிழுக்கப்பட்டுத் தலையின் விளிம்பிற்குள் அமைந்துள்ளது. மேலும், தலையைச் சூழ்ந்துள்ள வலிய செதில்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரு திண்மையான உறை போல் அமைந் துள்ளன. ஆதலின், தலை வலிமையான வளை தோண்டும் கருவியாக இயங்குகிறது. மூச்சுத் துளை கள் பாதுகாக்கப்பட்டு அல்லது மூடப்பட்டு வளை தோண்டுவதற்கு ஏற்றபடி அமைந்துள்ளன. லைகோ சோமா, எபில்ஃபேரஸ் போன்றவற்றில் கண்ணின் கீழ் இமை (lower eyelid) மெல்லியதாகவும், ஒளி ஊடுருவும் சவ்வாகவும் கண்ணைப் போர்த்தியபடியும் அமைந்துள்ளது. இதனால் கண், வளை தோண்டும் போது மண்துகள்களினின்றும், தரையில் ஊரும் போது காற்றிலுள்ள தூசிகளினின்றும் பாதுகாக்கப் படுவதுடன், தடையின்றிப் பார்க்கவும் முடிகின்றது. பொதுவாக செவிப்பறை (ear drum) ஒரு உட்குழிவின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும்.ஆனால், இது சில வற்றில் தோல் மட்டத்திலேயே அமைந்துள்ளது. பல அரணைகள் புதர்களின் மீதும், மரங்களின் மீதும் ஓடும் தன்மை உடையனவாயினும், மர வாழ்க் கைக்கு ஏற்ற தகவமைப்பு எதுவும் பெற்றிருக்க வில்லை. கோருசியா சொப்ரேட்டாவிற்கு மட்டும் மரக் கிளையைப் பற்றிச் சுற்றிக்கொள்ளும் தன்மையுடைய வால் உள்ளது. இவற்றுள் எதுவும் கிளைக்குக் கிளைத் தாவும் தன்மையையோ, மரத்தின் மேலிருந்து காற்றில் தவழ்ந்து தரையை அடையும் தன்மையையோ பெறவில்லை. டிரோப்பிடோஃபோரஸ் போன்ற சில அரணை வகைகள் சிறு கால்வாய்களில் கரைகளிலும் ஆஸ்தி ரேலியாவில் சில கடற்கரைகளிலும் வாழ்கின்றன. மெபுயா விட்டேட்டா mabuya vitatta) நில நீர் வாழ்வை (semi-aquatic life) மேற்கொண்டுள்ளது. இதை நீர்ப்பரப்பின் மேலுள்ள அல்லி இலைகளின் மேல் காணலாம். இது தனது இரையான மீனை நீரினுள் பாய்ந்து பிடிக்கும் தன்மையது. இந் திய-பசிபிக் பகுதியைச் சார்ந்த சுந்தா தீவுகளின் நிலநீர்வாழ் அரணை வகைகள் உப்பங்கழிகளில் காணப்படுகின்றன. எனினும், அரணைகளில் எது வும் நீரில் மட்டும் வாழ்வதில்லை. ஆப்பிரிக்காவிலும் கிழக்கிந்தியப் பகுதிகளிலும் காணப்படும் பல அரணைச் சிறப்பினங்கள் காடுகளில் வாழ்கின்றன. இவை அழுகும் மரத்துண்டுகளிலும், சருகுகளுக்கும் கற்களுக்கும் அடியிலும் மறைந்து வாழ்கின்றன. பெரும்பாலான அரணைகள் தரையில் வளைகளுக் குள் வாழ்கின்றன. இக்காரணத்தாலேயே இவற் றின் உடலமைப்பு ஏறக்குறைய ஒரே வகையாகக் காணப்படுகின்றது. கோருசியா, மேக்ரோசின்கஸ் போன்ற பெரிய அரணைகள் தாவர உணவை உட்கொள்கின்றன. தாவர உணவை அரைக்க உதவியாக, இவற்றில் பற்கள் வலிமையாகவும், தட்டையாகவும், அகன்றும், பல பலமுகடுகளுடனும் (cusp) காணப்படுகின்றன. ஏனைய அரணைகள் ஊனுண்ணிகள் (carnivores); கம்பளிப்புழு, தத்துக்கிளி, வண்டு போன்ற பூச்சி களை உண்பவை. இவற்றைத் தாடைகளால் பிடித்துப் பல்முகடுகளையுடைய கூரிய பற்களால் அரைத்து விழுங்கிவிடுகின்றன. சிறு பூச்சிகள், சிலந் திகள் ஆகியவற்றை உண்பவை நாவினால் இரை யைப் பிடித்து உண்கின்றன. இவற்றின் நாக்கு தடித் தும் பின்நோக்கியுள்ள சிறு செதில்களுடனும் ஒட்டும் தன்மையுடனும் உள்ளது. இலங்கையில் காணப் படும் நெசியா மண்புழுவை உண்ணும் தன்மையு டையது. மண்புழு வாயைவிட்டுத் தப்புவதைத் தடுக்க இவற்றின் பற்கள் கூர்மையாகவும், பின் நோக்கியும் உள்ளன. டிராக்கிசாரஸ் போன்ற அரணை வகைகள் தாவரங்களையும், விலங்குகளை யும் உண்ணும் அனைத்துண்ணிகள் (omnivores ) ஆகும். சில வளைகளில் வாழ்வதாலும், தரையில் பொருள் களுக்கடியில் வாழ்வதாலும், தரையில் வேகமாக ஊர்ந்து இவை தங்களை உண்ணும் பாம்பு