பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரத்தை 159

அரத்தை 159 போன்ற எதிரிகளிடமிருந்து தப்பிக்கின்றன. சில லசர்ட்டிலியாக்களில் காணப்படும் சுற்றுப்புறத்திற் கேற்ப உடல் நிறம் மாறும் தன்மை இவற்றில் இல்லை. எதிரிகள் தாக்கினால், தப்பிக்க இவை ஒரு தந்திரத்தைக் கையாளுகின்றன. எதிரி அரணையின் வாலைக் கவ்விப் பிடிக்கும்போது அது நடு உடலைச் சட்டென்று முறுக்கி, வாலைத் துண்டித்து விட்டு விரைவாக ஓடி மறைகின்றது. இச் செய லுக்குத் தன்உறுப்பு முறிவு (autotomy) என்று பெயர். முடமான வால் மீண்டும் வளர்ந்து முழுதா கின்றது. மீட்பாக்கத்தினால் (regeneration) வளர்ந்த பகுதியில் முள்ளெலும்புகள் (vertebrae) உண்டாவ தில்லை. கவனத்தை ஈர்க்கும் நிறத்திலுள்ள வாலைக் கொண்டுள்ள இளம் அரணைகளும் இந்த முறை யையே கையாண்டு எதிரிகளிடமிருந்து கின்றன. தப்பு ஆண் அரணைகளில் இனப்பெருக்கக் காலங் களில் (breeding seasons) நிறமாற்றம் ஏற்படுகிறது. ஆண் சிவப்பு சார்ந்த நிறங்களைப் பெறுகின்றது. பெண்ணிலிருந்து வெளிப்படும் மணத்தை நுகர்ந்து ஆண், பெண்ணை அடைகின்றது. இரண்டும் வால் களைப் பின்னிக்கொண்டு புணர்ச்சியில் ஈடுபடு கின்றன. பெண் அரணை முட்டைகளை ஈனுகிறது. அது முட்டைகளைச் சிறு பொந்திலோ, அழுகும் மரத்துண்டின் அடியிலோ, கற்குவியலுக்கு அடியிலோ பாதுகாப்பாக வைக்கின்றது. ஓர் ஈத்தில் இரண்டு முதல் இருபத்தைந்து முட்டைகள் இருக்கும். யுமிசஸ் போன்ற அரணைகள் முட்டைகளைப் பாது காப்பதுடன் அவை அழுகிவிடாமலிருக்க அவ்வப் போது நாவினால் புரட்டிவிடுகின்றன. முட்டை யினுள் கரு வளரும்போது, முட்டையும் சற்றே பெரி தாகின்றது. டிராக்கிசாரஸ் போன்றவை முட்டை களை உடலினுள் தக்க வைத்துக் குட்டி அரணை களை வெளியிடுகின்றன. மெபுயாவில் முட்டையிடும் சிறப்பினங்களும், குட்டிகளை ஈனும் சிறப்பினங் களும் உள்ளன. அரணைகள், ஊர்வன வகுப்பில் (reptilia), ஸ்குவ மேட்டா (squamata) வரிசையில் லசர்ட்டிலியா (lacer tilia) துணைவரிசையில் சின்சிடே (scincidae) குடும் பத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. நூலோதி -U.15. Schmidt, K.P., & Inger.R.F., "Living Reptiles of the World" - Double-day & Co., New York, 1957. அரத்தை இச்செடி, ஒருவிதையிலைத் தாவரக் குடும்பங்களில் ஒன்றான சிஞ்சிபிரேசியைச் (zingiberaceae)சார்ந்தது. இதற்குத் தாவரவியலில் அல்ப்பீனியா கலாங்கா (alpinia galanga willd.) என்று பெயர். அல்ப்பீனியா கலாங்கா என்பது பெரிய கலாங்கா (greater galanga) என்றும், அல்ப்பினியா ஆஃபிசினாரம் (A. officinarum (hance) என்பது சிறிய கலாங்கா (lesser galanga (சிற்றரத்தை அல்லது சித்தரத்தை) என்றும் முறையே அழைக்கப்படுகின்றன. பேரரத்தை கிழக்கு இமா லாயத்திலும் தென் மேற்கு இந்தியாவிலும் பரவியி ருக்கின்றது; தென்னிந்தியாவிலும் கிழக்கு வங்காளத் திலும் பயிரிடப்படுகின்றது. சிற்றரத்தை சீனா நாட் டைச் சேர்ந்தது. இப்பேரினத்திற்குப் பிராஸ்பர் அவ்ப் பைனஸ் (prosper alpinus)என்ற இத்தாலிய நாட்டுத் தாவரவியல் வல்லுநரின் நினைவாக அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிறப்புப்பண்புகள். இதன் மட்ட நிலத்தண்டு (rhizome) தடிப்பானது; கிடைமட்டமாக அமைந்தி ருக்கும். இது பலபருவத் (perennial) தாவரம். இதன் தண்டு 2-2.5 மீ. உயரம் வளரக்கூடியது. இலைகள் ஏறக்குறைய 1 மீ. நீளம் இருக்கும்; பல பளப்பானவை; நீள் சதுர ஈட்டி வடிவமானவை (oblong-lanceolate). மஞ்சரி மலர்களை அடர்த்தி யாகக் கொண்டது; பானிக்கில் (panicle) வகையைச் சார்ந்தது. புல்லிவட்டம் மூன்று பிளவுகளுடைய குழல் வடிவமானது. அல்லி வட்டம், புல்லி வட்டம் போன்று நீண்டிருக்கும். மகரந்தத் தாள் ஒன்றே. இதுசூற்பை கீழ்மட்டத்தில் அமைந்து, மூன்று அறை களைக் கொண்டது; ஒவ்வோர் அறையிலும் 1-2 சூல்களுண்டு. கனி வெடிக்காத தீங்கனி (berry வகைக்கனி; ஆரஞ்சு சிவப்பு நிறத்துடன் உருளை வடிவமாக, செர்ரி (cherry) கனி அளவில் இருக்கும். விதைகள் மூன்றிலிருந்து ஆறு வரை இருக்கும். அவை சாம்பல் நிறமுடையவை. பொருளாதாரச் சிறப்பு. பேரரத்தையின் மட்ட நிலத் தண்டைக் கடுக்காயுடன் சேர்த்து ஒருவகைச் சாயம் செய்கிறார்கள். மட்டநிலத் தண்டைக் கொண்டு செய்யப்படும் மருந்து குரல்வளையைச் செம்மைப்படுத்தக்கூடியது, மணமுடையது, உறைப் பானது; வயிற்று உப்புசத்திற்கு மருந்தாகப் (carmi native)பயன்படுகின்றது. சாராயப் பானங்களில் இதை மணமூட்டுவதற்குச் சேர்ப்பதனால் மதிமயக்கம் அதிகரிக்கின்றது. இது ஆண் மலட்டுத்தன்மையைப் (sterility) போக்குகின்றது. மார்புச்சளி, சளியினால் ஏற்படும் மூக்கடைப்பு (catarrh) ஆகியவற்றைக் குணப்படுத்துகின்றது. வாயின் கெட்ட நாற்றத்தைத் போக்குகின்றது; மூட்டுவாதத்திற்கு (rheumatism