பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரபுராக கடல்‌ 161

கடலை இந்தியக் கடல் எனவும் "பெருங்கடலின்" (great sea) ஒரு பகுதி எனவும் அழைத்தனர். தடக் அகலாங்கில் (trade wind latitude) காற்று வீசும் அமைந்துள்ள இக்கடல் ஐரோப்பாவிற்கும் இந்தியா விற்கும் இடையிலுள்ள மிக முக்கியமான கடல் வழி யாகும். வடக்கில் பாகிஸ்தான், ஈரான் ஆகியவையும்; கிழக்கில் இந்தியாவும், மேற்கில் அரபிய முந்நீரகமும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் அரபிக் கடலைச் சூழ்ந்துள்ளன. சிந்து நதி இக்கடலில் கலக்கும் நதி களுள் முக்கியமானது. இக்கடல் வடமேற்கில் ஓமன் வளைகுடா, ஹார்மஸ் (Hormuz) நீர்ச்சந்தி இவற்றின் வழியாகப் பாரசீக வளைகுடாவுடனும், தென்மேற்கில் பாப். எல் - மான்டெல் (Bob-el-mandel) நீர்ச்சந்தி, ஏடன் வளைகுடா வழியாகச் செங்கடலுடனும் இணைந் துள்ளது. சுமார் 3,859,100 சதுர கி.மீ. பரப்புடைய இக்கடலின் பெரும்பகுதி 3,200 மீட்டருக்கு மேற் பட்ட ஆழமுடையது. இக்கடலின் பெரும் ஆழம் (5,300மீ.) சோமாலி படுகையில் (Somali basin) உள்ளது. அரபிக் தீபகற்பத்தின் கண்டத்திட்டுப் பகுதி குறுகியதாகவும், சோமாலி கரையோரப்பகுதி மிகக் குறுகியதாகவும் உள்ளன. சொகோட்ரா தீவிற்குத் (Socotra Island) தென்கிழக்கே கிடக்கும் கார்ல்ஸ் பெர்க் மலைமுகடு இக்கடலின் தென் எல்லையாக அமைந்துள்ளது. மூரே மலைமுகடு அரபிக் கடல் படுகையை ஓமன் வளைகுடா படுகையிலிருந்து பிரிக் கின்றது. அரபிக் கரையோரப்பகுதியில் முருகைப் பாறைகள் கிடையா. இக்கடல்படுகையில் காணப்படும் படிவுகளின் பெரும்பகுதி கண்டப்பகுதி தோற்றமுடையவை (terriginous). இவை சுமார் 2750 மீ. ஆழமுள்ள படுகைப்பகுதி வரை காணப்படுகின்றன. இதற்கும் அதிக ஆழமுள்ள படுகையில் குளாபிஜெரைனா அசும்பும், 4,000 மீட்டருக்கும் அதிக ஆழமுள்ள படுகையில் செங்களியும் காணப்படுகின்றன. ஃபொரா மங்கனீஸ் மினிஃபெரா அசும்புகளினிடையில் 35-36% முண்டுகள் பெருமளவில் உள்ளன. இதன் மேற்பரப்பு நீரின் வெப்பம் 24 -28° செலிசியஸ் ஆகவும், உவர்மை ஆகவும் உள்ளன. கோடை காலத்தில் சோமாலி அராபிய, கரையோரப் பகுதிகளில் நீரெழுச்சி (upwelling) உண்டாகிறது. ராஸ்-அல்- ஹாட் (Ra's - al-hadd) பகுதியில் ஹைட்ரஜன் சல்பைடு உள்ள நீர் மேலெழுவதால் மீனினங்கள் பெருமளவில் இறக்கின்றன. இத்தகைய நிகழ்ச்சி அடிக்கடி அரபிக் கடலில் நடைபெறுகிறது. 1957ஆம் ஆண்டு ஏறத்தாழ 30,000 சதுர கி.மீ. பரப்பில் சுமார் 20,000 டன் மீன்கள் இறந்ததாகக் கணிக்கப் 3.4-2-11 அரபுராக கடல் 161 பட்டது.8ஆம், 9ஆம் நூற்றாண்டுகளில் கிடைத்த இக்கடலின் மேற்பரப்பு நீரோட்டத்தைப் பற்றிய அறிவு, கப்பல் செலுத்துவதற்குப் பயன்பட்டது. ஜான் முரேயும் பன்னாட்டு இந்தியப் பெருங்கடல் ஆய்வுப் பயணங்களும் இக்கடலைப் பெரும் அளவு ஆய்வதற்கு உதவின. அரபுராக் கடல் அரபுராக் கடல் மேற்குப் பசுபிக் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இது ஆஸ்டிரேலியாவின் வடக்குக் கடற்பகுதி, கார்பன்டேரியா வளைகுடா, நியூகினியா தீவின் தென் கிழக்குக் கடற்பகுதி ஆகியவற்றிற்கு இடையில் 650,000 சதுர கி.மீ. பரப்பில் அமைந் துள்ளது. இதன் பெரும நீளம் 1,277. 5 கி. மீ., பெரும அகலம் 563,2கி.மீ. ஆகும். இக்கடல் மேற்கில் திமோர் கடலுடனும், வடமேற்கில் பாண்டா, சிராம் கடல்களு டனும் இணைந்துள்ளது. கிழக்கில டாரஸ் நீர்ச்சந்தி யானது க்கடலைக் கோரல் கடலுடன் இணைக் அரபுரா கிறது. சாகுல் திட்டின் ஒரு பகுதியான திட்டு இப்பெருங்கடலில் உள்ளது. இங்குப் பொது வாக ஆழம் குறைந்தும், மேற்கே செல்லச் செல்ல ஆழம் மிகுந்தும் காணப்படும். அந்த ஆழமான பகுதி களில் பவளங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. அரபுராத் திட்டில் ஒரு வறண்ட காலநிலை காணப் படும். 12,000 அடி உச்ச ஆழம் கொண்ட அருங் கடல டிக்குழி நிலத்தைச் சுற்றி அருந்தீவுகள் நில மேலெழுச் சியால் உண்டாகியுள்ளன. இந்தக் குழிநிலம் சீராம், அரபுராத், திமோர் கடல்களின் வழியே மேற்கு நோக்கி விரிவடைந்து இந்தியப் பெருங்கடலில் ஜவா அகழியாகத் தொடர்கிறது. இக்கடலில் மேல்தள நீரோட்டங்கள் 8 தென் அகலாங்குக்கு வடக்கில் தென்படுவதில்லை. அந்தக் கோட்டின் தெற்கில் குளிர் காலத்தின் போது நீரோட்டங்கள் மேற்கு நோக்கிச் செல்கின்றன. ஆயினும் கோடைகாலத்தில் அவ்வாறு இருப்பதில்லை, கப்பல்கள் செல்வதற்கு டாரஸ் நீர்ச்சந்தி இடை யூறுள்ள வழியாகும். அரபுராக் கடலில் காணப்படும் எண்ணற்ற குறிப்பிடப் படாத குறைந்த ஆழமுள்ள இடங்கள் கட ற்பயணத்திற்கு இடர் விளைவிப்பன வாக உள்ளன. அரபுராத் திட்டில் பாறை எண்ணெய் வளம் பெரும்அளவில் உள்ளது. அருந் தீவுகளைச் சுற்றி உள்ள பாதுகாக்கப்பட்ட, தூய்மையான நீரில் முத்துகள் உற்பத்தியாகின்றன. அவற்றின் உற்பத்தி அளவு குறைவெனினும் அறுவடை தொடர்ச்சியாக நடைபெறுகிறது.