பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அரம்‌

162 அரம் அரம் பொருள்களை அராவ மிகப்பரவலாகப் பயன்படும் ஒரு தொழிற்கருவி வகையே அரம் (file). உலோகப் பரப்புகளையும் மற்றக் கடினமான பரப்புகளையும் அராவி மழமழப்பாக்க இது பயன்படுகிறது. இது தேவைக்கேற்றவாறு பல வடிவங்களிலும் அளவுகளி லும் வடிவமைக்கப்படுகிறது. பொதுவாக 2.0 செ.மீ நீளமுள்ள சிறிய அளவிலிருந்து 1 மீட்டர் நீளமுள்ள பெரிய அளவு வரை அரங்கள் பல நீளங்களில் செய் யப்படுகின்றன. படம் 1 இல் பொது கைவினை அரத்தின் உறுப்புகள் காட்டப்பட்டுள்ளன. 10 A=15 34 உளிமுனை α 106° படம் 2. அரத்தில் பல்வெட்டும் செயல்முறைகள் அ.உளிவெட்டு வகை, ஆ. துருவிய வகை, கொந்தியவகை 3. படம் 1.பொதுக் கைவினை அரம் I. கூர்முனை அல்லது பல்முனை (point), 2,6, முகப்பு பல் அடி (heel), 4. தோள். 5. பிடிதண்டு, 7, 8. விளிம் புகள், 9. மிகைவெட்டு (over cut). 10. மேல்வெட்டு (upcut) படம் 1இல் காட்டப்பட்டுள்ள அரம் தனது மேற்பரப்பில் ஆப்பு வடிவப் பற்கள் அமைந்த, குறிப் பிட்ட வடிவமும் நீளமும் உள்ள எஃகுத் தண்டே என அறியலாம். அரங்கள் பல் வெட்டப்படும் செயல் முறை, வடிவம், ஆகியவற்றைப் பொறுத்தும், அர உடலின் நீளம், வடிவம் பயன்பாடு, ஆகியவற்றைப் பொறுத்தும் பலவகைகளில் வகைப்படுத்தப்படு கின்றன. பல்வெட்டும் செயல்முறைகளும் பல்லின் இயல்புகளும். பற்களை வெட்டும் செயல்முறைகளைப் பொறுத்து அரப்பற்களை உளியால் வெட்டியபற்கள் (chiselled teeth), துருவிய பற்கள் (milled teeth), கொந்திய பற்கள் (broached teeth) என மூவகையாகப் பிரிக்க லாம் (படம் 2). அவையாவன: அரத்தின் பற்கள் எந்த முறையில் வெட்டப் பட்டாலும் அப்பற்களுக்குக் கீழ்க்காணும் சிறப் பியல்புகள் பொதுவானவையாகும். d-நீக்கக் கோணம் (clearance angle), தீ - ஆப்புக் கோணம் (wedge angle), y-சரிவுக் கோணம் (rake angle), 8- வெட்டுக் கோணம் (cutting angle) ஆகியன வாகும். உளியால் வெட்டப்பட்ட பற்கள் - 12° முதல் -15° வரையிலான எதிர்மறைச் சரிவும்,35° முதல் 40 வரையிலான நீக்கக் கோணமும் பெற்றிருப்பதால் அராவும்போது பிசிறு நீக்கம் பேரளவாக அமை கிறது. இதில் உருவாகும் 62 முதல் 67° வரையிலான ஆப்புக்கோணம் பற்களுக்கு மிகுந்த வலிவைத் தரு கிறது. துருவிய பற்கள் 2° முதல் 10 வரையிலான நேர்மறைச் சரிவும், 90° க்கும் குறைந்த வெட்டுக் கோணமும் பெற்றிருப்பதால் குறைந்த வெட்டுவிசை யில் அரம் செயல்பட வழி வகுக்கின்றன. வை விலை மிகுந்தவை. எனவே மிகவும் அருகிய அளவி லேயே பயன்படுகின்றன. பல்வடிவ வகைகள். பற்களின் வடிவ அமைப்பை யொட்டி அரம் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படு கிறது. அவை, ஒற்றைவெட்டு அரம், இரட்டை வெட்டு அரம், அராவி (rasp), வளைவெட்டு அரம் என்பனவாகும். இணையாகவுள்ள பல பற்களை வரிசையாகக் கொண்ட அரம் ஒற்றை வெட்டு அரம் (single cut file) எனப்படும். இது மென்மையான உலோகங் களை அராவ ஏற்றது: அதாவது, அலோகங்கள், வெண்கலம், நாகம், பாபிட் உலோகம், ஈயம், அலு மினியம், பித்தளை, செம்பு ஆகிய குறைதடைப் பொருள் பரப்புகளை அராவ ஏற்றது. இது வெட்டு உள்ள அகலத்துக்குப் பொருளைச் சீவி எடுக்கும். இது வாள், கத்தி ஆகியவற்றைத் தீட்டவும், மரம் தக்கை ஆகிய பொருள்களை அராவவும் பயன்படு கிறது.