அரம் 163
இரட்டை வெட்டு அரத்தில் (double cut file) இரண்டு வரிசைப் பற்கள் ஒன்றன் குறுக்கே மற் றொன்றாகச் சாய்வாக அமைந்திருக்கும். இவ்வாறு அமைப்பதால் வரிசையாக அமைந்துள்ள நீண்ட பற்களுக்குப் பதிலாகச் சிறு பற்கள் தோன்றுகின்றன. இவ்வகை அரம் கடினமான பரப்புகளை அராவ ஏற்றது; அதாவது, எஃகு, வார்ப்பிரும்பு போன்ற உயர்தடைப் பொருள்களை அராவ ஏற்றது. இவ் வரத்தால் அராவும் போது முதலில் ஆழமான மிகை வெட்டு (over cut) ஏற்படும். பிறகு அதற்குக் குறுக் காசு ஆழம் குறைந்த சிறிய மேல்வெட்டு (up cut) ஏற்படும். இரண்டு வெட்டும் பொருள் பரப்பைப் மிகை வெட்டு மேல்வெட்டு X=25 மிகைவெட்டு படம் 3. அரத்தின் வகைகள் ஒற்றைவெட்டு அரம், இ. இரட்டைவெட்டு அரம், அராவி (rasp) ஈ வளைவெட்டு அரம். களாக அரம் 163 பல பற்களாக்கும். இதில் பிசிறுகள் சிறிய சில்லு உடைக்கப்படுவதால் அராவும் செயல் எளி தாக இருக்கும். மிகைவெட்டு 25° கோணத்திலும் மேல்வெட்டு 45° கோணத்திலும் அமையும் (படம் 3). வெட்டின் முகடுகளுக்கு (ridges) இடையிலுள்ள தொலைவு வெட்டு இடைவெளி (spacing) எனப் படும். இது மிகைவெட்டைவிடப் பெரிதாகவும் மேல் வெட்டைவிடச் சிறிதாகவும் அமையும். அரஅச்சுக்கு 5° கோணத்தில் பல்வரிசைகள் அமையும். பணிப் பரப்பில் அரத்தை நகர்த்தும்போது பல்வரிசைகள் பாதை மேற்படியும். இது அராவப்படும் பரப்புக்கு உயர் சீர்மையைத் தரும். மூன்றாவது வகை அரம் அராவி (rasp) என்று அழைக்கப்படும். இதில் பல கூரிய பற்கள் இடை விட்டு அமைக்கப்பட்டிருக்கும். இதன் பற்கள் சிறப்பு வகை முக்கோண உளியை உலோகப் பரப்பில் அழுத்திச் செதுக்கப்பட்டவை. இது மரம், ரப்பர், தோல் ஆகிய மென்பொருள்களை அராவ ஏற்றது. நான்காவது வகை அரம் வளைவெட்டு அர மாகும். இது துருவல் (milling) முறையில் செய்யப்படு கிறது. இது உயர்பொருள் நீக்கும் திறனும், அராவும் பரப்புக்கு உயர்சீர்மையும் தர வல்லது. செம்பு, அலு மினியம், உலோகக் கலவைகள் ஆகிய மென் பொருட் பரப்புகளை அராவ இது பயன்படுகிறது. குறுக்குவெட்டுமுகம், குறுக்குவெட்டுமுக வடிவத் தைப் பொறுத்து ஊசி வகை அரங்கள் (needle files ) படம் 4 இல் உள்ளபடி பல வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன. அதேபோல எந்திரவகை அரங்கள் (machine files) படம் 5 இல் உள்ளபடி பல வகை களாகப் பிரிக்கப்படுகின்றன. உடலமைப்பு. எந்திர அரங்கள் நீள முழுவதிலும் ஒரே அளவு குறுக்குவெட்டு முகமும், ஒரே அகலமும், தடிப்பும் உடையவை. இவை மையமிலா வகை என்றும் 1 2 6 9 10 படம் 4. ஊசிவகை அரங்கள் 4.சரிவு அல்லது ஆப்பு வடிவம் 5, வட்டம் 8. சாய்சதுரம் அல்லது ஈராப்பு வடிவம் 9. சுத்தி வடிவம் 10, வட்டவிளிம்புத் தட்டை வடிவம் (crochet) 1. தட்டை 2.சதுரம் 3. முச்சதுரம் 6. அரைவட்டம் 7. முட்டைவடிவம்