பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 அரமீன்‌

166 அரமீன் துண்டங்களைத் தேய்த்து அவற்றின் பரப்பை மழ மழப்பாக்கலாம். மழமழப்பாக்கிய துண்டங்களில் பற்களை வெட்ட வேண்டும். பற்களை வெட்டியபின் அரமானது தேவையான வெப்பநிலைக்குச் சூடேற்றப் பட்டதும் குளிர்ந்த நீரில் அவிக்கப்படுகிறது. இதனால் பற்கள் உறுதியாகின்றன. பேணுதல் (maintenance). அரத்தைச் சரியான முறை யில் பயன்படுத்தாவிட்டால் அது மிக விரைவில் தேய்ந்து பாழாய்விடும். கூரிய பற்களைக் கொண்ட அரத்தைக் கொண்டு கடினமான வார்ப்பிரும்புப் பரப்பை அராவக்கூடாது. இதேபோல அதிசு அழுத் தத்துடன் அராவுவதாலும் அரம் தேய்ந்துவிடும். அரத்தைப் பரப்பின்மேல் வைத்து முன்னால் நகர்த்தி அராவியபின், அதைச் சற்று மேலே தூக்கியே பின் னுக்குக் கொண்டு வரவேண்டும். பயன்படுத்திய பின் அரத்தைத் தூய்மை செய்து வைப்பது நலம். அரம் துருப்பிடிக்காமலிருக்க இது உதவும். நூலோதி 1. Vladimirov, V., Measuring and Cutting Tools. Manufacture and Repair, Mir Publishers, Moscow. 1978. 2. Makienko, N. I., Fitting Practice, Mir Publishers, Moscow, 1983. 3. Makienko, N., Practical Bench Work, Mir Publishers, Moscow, 1984. அரமீன் அரமீன்களும் துப்பாக்கிக் குதிரை மீன்களும், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒத்த பண்புகள் நிறைந்த மீன்களாகும். இவ்விரு வகை மீன்களும் ஒத்த உருவமைப்புக் கொண்டிருப்பினும், அர மீன்கள் அளவில் சிறியலை; பொதுவாக 30 செ.மீ. நீளத் திற்கு வளரக்கூடியவை. இவற்றின் உடலில் உள்ள நுண்ணிய செதில்கள் முட்களைக் (spines) கொண்டுள் ளன. எனவே தோலின் வெளித்தோற்றம் மென் பட்டு துணியைப் போன்றிருப்பினும், தொட்டால் அரம் போன்று சுரசுரப்பாக இருக்கும். உடல் தோற்றம் முட்டை வடிவத்தில் அல்லது ஏறத்தாழ வட்ட வடிவத்திலும், பக்கவாட்டில் மிகவும் அழுத்தப் பட்டும் காணப்படுகிறது. பக்கவாட்டுக் கோடுகள் (lateral lines) காண்பதற்குத் தெளிவாக இரா. இம் மீனுக்கு இரண்டு முதுகுத் துடுப்புக்கள் (dorsal fins) உள்ளன. முதலாவது முதுகுத் துடுப்பில் ஒரு முள் உண்டு. இம்முள் வளர்ச்சி குன்றிய வலிவிழந்த இரண்டாம் முள்ளுடன் பிணைக்கப்படும்போது நிமிர்ந்து நிற்பதுண்டு. மலவாய்த் துடுப்பு (anal fin) முட்களைக் கொண்டிராது. மார்புத் துடுப்புகள் சிறி யவை, வயிற்றுப் பாகத்தில் துடுப்பு இல்லை, அரமீன் அரமீன்கள் நீந்திச் செல்லும் முறை கண்டு களிக்கக் கூடிய ஒன்றாகும். அவை உடலை உறுதி யாக வைத்துக் கொண்டு கண்ணியமான தோற்றத் துடன் மெல்ல நீந்திச் செல்வதைக் காணலாம். நீரலைகள் பின்புறமிருந்து முதுகின் மீதும், மலவாய்த் துடுப்புகளின் மீதும் அடித்துச் செல்கையில், இம்மீன் நீரினூடே உந்திச் செலுத்தப்படுகின்றது. அமெரிக்கக் கடல் விலங்கியல் அறிஞர் வில்லியம் பீப் (William Beeb) கூற்றின் படி அலூட்டீரா ஸ்கிரிப்டஸ் (alutera scriptus) என்னும் பச்சை வண்ண அரமீன்கள் கடற் புற்களின் இடையில் தம்முடைய துடுப்புகளை மெல்ல அசைத்த வண்ணம் தலைகீழாக நிற்கும்போது அம் மீன்களைக் கடற்புற்களிலிருந்து பிரித்துக் காண்பது கடினமாகும். துப்பாக்கி விசை மீன்களைப் போன்றே அரமீன் களிலும் பற்கள் தாடை எலும்புகளில் ஆழமாகப் பதிந்துள்ளன. மீன் பண்புகளில் இது இயல்பற்ற ஒன்றாகும். துப்பாக்கி விசை மீன்கள் போலன்றி, அரமீன்கள் தாவர உணவை மட்டுமே உட்கொள்ளு கின்றன. அரமீன்கள் எதிரிகளின் தாக்குதலுக்குட்படும் போது முதுகுப்புற முள்ளின் துணை கொண்டு எதிரி யின் தொண்டைப் பகுதியையும் வாய்ப்புறத்தையும் குத்திக் காயம் உண்டாக்குகின்றன எனக் கருதப்படு கின்றது. எனவே இம்மீன்களின் கண்ணைக் கவரும் வண்ணங்கள் எதிரிகளுக்கு ஓர் எச்சரிக்கை நிறமாக