168 அராக்னிடா
168 அராக்னிடம் வான வடபகுதியில் பல விண்மீன் திறள்கள் (star clusters) அமைந்துள்ள பகுதியில் அரவு விண்மீன் குழு உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இல் விண்மீன் குழுவின் எல்லையில் மூன்று ஒளிர்மீன்கள் (novae) தோன்றின. ஒஃபையாகசில், அரவு விண் மீனின் இருபகுதிகளுக்கிடையில், 10 ஆவது ஒளித் தரமும், அதிகமான இயக்கத்தையும் உடைய பார் னார்டு (Barnard) என்ற விண்மீன் உள்ளது. காண்க. விண்மீன்குழு. நூலோதி Encyclopaedia Americana, Vol-24, Americana Corporation, International Headquarters, Dan bury, Connecticut, 1980. அராக்னிடா கணுக்காலிகள் (arthropoda) தொகுதியைச் சேர்ந்த வகுப்புகளில் அராக்னிடாவும் (arachnida) ஒன்று. இவ்வகுப்பில் ஏறக்குறைய 65,000 இனங்களைச் சேர்ந்த உயிரிகள் 15 வரிசைகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன. இவை தோற்றத்திலும் வடிவத்திலும் பெரிதும் வேறுபடுகின்றன. 7 அங்குல நீளமுள்ள மிகப்பெரிய ஆப்பிரிக்கக் கருந்தேளிலிருந்து, பூச்சி களின் மூச்சுக்குழல்களில் வாழும் மிகநுண்ணிய சிற்றுண்ணிகள் (mites) வரை இவற்றின் உருவ அளவு வேறுபடுகிறது. அராக்னிடா வகுப்பிள் பொதுப்பண்புகள் புற அமைப்பு. அராக்னிடாக்களின் உடலை முன் னுடல் (prosoma) என்றும், பின்னுடல் (opisthosoma ) என்றும் இரு உடற் பகுதிகளாகப் பிரிக்கலாம். தலையும் மார்புப் பகுதியும் (thorax) ஒன்றாக ணைந்ததால் தோன்றிய பகுதியே முன்னுடலாகும். இப்பகுதியைத் தலைமார்புப் பகுதி (cephalothorax) என்றும், பின்னுடல் பகுதியை வயிறு (abdomen) என்றும் கூறுவதுண்டு. அராக்னிடாக்களின் முன்னுடல் ஆறு உடற்கண் டங்களால்(body segments) ஆனது. இக்கண்டங்களின் டெர்கல் தகடுகளில் (tergal plates) சில ஒன்றுடன் ஒன்று இணைந்து 'காரப்பேஸ்' (carapace) எனப் படும் பெரிய மேற்பெருந்தகடாக அமைந்துள்ளன. ஒவ்வொரு முன்னுடல் கண்டத்துடனும் ஓர் இணை இணையுறுப்புக்கள் (appendages) இணைந்துள்ளன. அக்காரினா (acarina) வரிசையைச் சேர்ந்த எரியோ ஃபிடே (eriophidae) என்னும் சிறப்பிழந்த(degenerate) குடும்பத்தைச் சேர்ந்த சிற்றுண்ணிகள் இதற்கு விதி விலக்கு. முன்னுடலின் முதல் இணை இணையுறுப் புகள் வாய்க்கு முன்புறம் அமைந்துள்ளன. இவற்றுக் குக் கெலிசெராக்கள் (chelicerae) என்று பெயர். மற்ற இணையுறுப்புகள் சிலவற்றில் அடிப்பகுதியில் தாடையடித்தகடுகள் (gnathobases) உள்ளன. இத் தகடுகள் உணவை நசுக்கிச் சிறுசிறு துண்டுகளாக வெட்டப் பயன்படுகின்றன. அனைத்து அராக்னிடாக்களிலும் முன்னுடல் கிட்டத்தட்ட ஒரே வகையான அமைப்பைப் பெற் றுள்ளது. பின்னுடலும் ஆனால், அதனுடன் இணைந்துள்ள இணையுறுப்புகளும் பலவகைகளில் மாறுபட்டுக் காணப்படுகின் றன. பின்னுடல் 12 கண்டங்களாலானது. பின்னுடலை ஒவ்வொன்றும் ஆறு கண்டங்களாலாகிய இரு உடற்பகுதிகளாகப் பிரிப்பதுண்டு. அவற்றுக்கு முறையே இடைஉடற் பகுதி (mesosoma), கடைஉடற்பகுதி (metasoma) என்று பெயர். சில அராக்னிடாக்களில் பின்னுடலின் கண்ட அமைப்பு நிறைவுயிரி (adult) நிலையிலும் நிலைத்துக் காணப்படுகிறது. பெரும்பாலான அராக்னிடாக்களில் இப்பகுதியின் கண்ட அமைப்பு நிறைவுயிரி நிலையில் மறைந்து போகிறது. உடற் கண்டங்கள். அராக்னிடாக்களின் உடற் கண்டங்களை முன்முனையிலிருந்து பின்முனைவரை வரிசையாக ஆழ்ந்து நோக்கினால் அவ்விலங்குகளின் உடற்கட்டமைப்பைப் பற்றி முழுமையாக அறிய முடியும். முதல் உடற்கண்டம் தனித்த கண்டமாக வளர்கரு நிலையில் மட்டுமே காணப்படுகிறது. இக் கண்டத்தைச் சேர்ந்த உடற்குழிப்பைகளும் (coelomic sacs) நரம்புத் திரட்சிகளும் வளர்கரு நிலையில் மட்டுமே காணப்படுகின்றன. முன் நடுக்கண்கள் median anterior eyes) இக்கண்டத்தின் இணையுறுப்பு களாகக் கருதப்படுகின்றன. இரண்டாம் கண்டத் திற்கு ராஸ்ட்ரல் கண்டம் (rostral segment) என்று பெயர். பூச்சிகளிலும் ஓட்டுடலிகளிலும் உள்ள உணர்கொம்புகள் (antennae அராக்னிடாக்களில் இல்லை. இக்கண்டம் அராக்னிடாக்களின் நிறைவுயிரி நிலையில் மறைந்து போகிறது. . ஓர் இணை கெலிசெராக்கள் வாய்க்கு முன்புறம் அமைந்து, மூன்றாவது கண்டத்துடன் இணைந் துள்ளன. சொலிஃப்யூகே (solifugae) வரிசை யைச் சேர்ந்த அராக்னிடாக்களில் கெலிசெராக்கள் பெரியவையாக உள்ளன. ஆனால் தேள் போன்ற வற்றில் இவை சிறியனவாக உள்ளன. பொ து வாக இவை கிடுக்கி நுனிகள் (chelate) பெற்