அராக்னிடா 169
றுள்ளன. அதனால் இவை பற்றுறுப்பாகச் செயல் படுகின்றன. ஆனால் சிலந்தி போன்ற அராக்னிடாக் களில் இவை கிடுக்கிகளற்றுக் காணப்படுகின்றன. நான்காம் கண்டத்தின் இணையுறுப்புகளுக்குப் பெடிப்பால்ப்புகள் (pedipalps) என்று பெயர். இவ் விணையுறுப்புகளின் அடிப்பகுதி தாடையடித்தகடாக அமைந்து உண்ணும் உறுப்புகளாகச் செயல்படு கின்றன. சிலந்திகளின் பெடிப்பால்ப்புகள் நீளமாகத் தொடு உணர்ச்சி உறுப்புகள் போலவும், நடக்கும் கால்கள் போலவும் அமைந்துள்ளன. தேள்கள், பொய்த் தேள்கள் போன்றவற்றில் இவை மிகப் பெரியவையாயும் கிடுக்கி நுனியுடனும் காணப்படு கின்றன. ஆண் சிலந்திகளில் இவை துணைப்புணர் உறுப்பாகச் (accessory copulatory organ) செயல்படு கின்றன. கெலிசெராக்கள் அல்லது பெடிப்பால்ப்புகள் அராக்னிடாக்களில்மிகச் சிறப்பாக வளர்ச்சியடைந்து செம்மையாகச் செயல்படுகின்றன. இவ்விரு இணை யுறுப்புகளும் ஒரு சேர ஓர் அராக்னிடா உயிரியில் சிறப்புற்றுக் காணப்படுவதில்லை. ஒன்று பெரிதாக வளர்ந்திருந்தால் மற்றது சிறுத்து, செயல் திறமிழந்து, குறைவுபட்டுக் காணப்படுகிறது. ஐந்தாவது, ஆறா வது, ஏழாவது, எட்டாவது உடற்கண்டங்களுடன் நான்கு இணை இணையுறுப்புகள் இணைந்துள்ளன. தேள்களிலும் சிலந்திகளிலும் எல்லாக் கால்களும் ஒரே வகையாகவுள்ளன.சாட்டைத் தேள்கள், ஓநாய்ச் சிலந்திகள், உண்ணிகள் (ticks), சிற்றுண்ணிகளில் முதல் இணைக்கால்கள் முன்னோக்கி நீட்டப்பட்டுத் தொடு உணர் உறுப்புகளாகச் செயல்படுகின்றன. மற்ற அராக்னிடாக்களில் முன் இரண்டு இணைக்கால் களும் வெவ்வேறு திசைகளில் நீட்டிக் கொண்டுள் ளன. சிலந்திகளின் பெடிப்பால்ப்புகளின் காக்சாக் களின் அடிப்பகுதிக்கு துருவுதாடைகள் (maxillae) என்று பெயர். இப்பகுதிகள் மட்டுமே உண்ணும் பணியில் ஈடுபடுகின்றன. ஒன்பதாவது உடற்கண்டம் பலவகைகளில் மாறு பட்டுக் காணப்படுகிறது. இக்கண்டம் அரச நண்டின் உடலில் வாயின் பின்விளிம்பாக அமைந்துள்ளது. இதனுடன் கைலேரியா (chilaria) என்னும் உறுப்பு இணைந்துள்ளது. யூரிப்ட்டெரிடுகளில் இவ்வுறுப்பு கள் கீழ்ப்பக்கத் தகடாக மாறியுள்ளன. தேள்களிலும் வேறு சில அராக்னிடாக்களிலும் முன்னுடலும் பின்னுடலும் உடலின் குறுக்களவு முழுவதும் இணைந்துள்ளன. இத்தகைய அராக்னிடுகளில் இந்த ஒன்பதாம் கண்டம் நிறைவுயிரிகளில் காணப்படுவ தில்லை. சிலந்திகள், சாட்டைத்தேள்கள் ஆகிய வற்றில் இக்கண்டம் உடலின் இரு பகுதிகளையும் இணைக்கும் இணைப்புப் பகுதியான இடுப்பாக அமைந்துள்ளது. இனப்பெருக்கத் துளைக்கு முன் னால் அமைந்திருப்பதால் இக்கண்டத்திற்கு இனப் பெருக்க முன் கண்டம் என்று பெயர். இக்கண்டத்தின் அ.க-2-22 அராக்னிடா 169 டெர்கல்தகடும் ஸ்டெர்னல் தகடும் (sternal plate) சில சிலந்திகளின் இடுப்புப் பகுதியில் மிசுக் குறைவுபட்ட நிலையில் காணப்படுகின்றன. இத்தகடு கள் முறையே லோரம் (lorum) என்னும் தகடாகவும். பிளக்கூலா (placula) என்னும் தகடாகவும் அமைந் துள்ளன. சொலிஃப்யூகே, கீலோநேத்தி (chelonethi) ஆகிய இரு வரிசைகளைச் சேர்ந்த அராக்னிடாக்களிலும் பின்னுடல் கண்டங்களனைத்தும் ஒன்று போலவே காணப்படுகின்றன. சிலந்திகளிலும் சிற்றுண்ணி களிலும் இப்பகுதியிலுள்ள கண்ட இடைக்குறிகள் மறைந்து விட்டதால் கண்ட அமைப்புநிலை அழிந்து போயுள்ளது. பத்தாவது கண்டத்தின் கீழ்ப்பக்கத்தில் இனப்பெருக்கத் துளை உள்ளது. இக்கண்டத்தின் ணையுறுப்புகள் பலவகைகளில் மாறுபட்டு இனத் துளை மூடியாக (genital operculum) அமைந்துள்ளன. பதினோராவது கண்டம் தேள்களில் மட்டும் வழக்கத்திற்கு மாறாகக் காணப்படுகிறது. இக்கண்டத் துடன் பெக்ட்டின் (pectin) என்னும் சீப்புப்போன்ற உணர் உறுப்புகள் இணைந்துள்ளன. அரச நண்டின் முதல் இணைச் செவுளேடுகள் (gill books) இக் கண்டத்தைச் சேர்ந்தவையாகும். இவற்றைத் தவிர ஏனைய அராக்னிடாக்களில் இக்கண்டத்திற்கு இணை யுறுப்புகள் இல்லை. பனிரண்டாவது கண்டம் தொடங்கிப் பதினைந்தாவது உடற்கண்டம் வரையி லுள்ள கண்டங்கள் அரச நண்டில் 2 ஆவது, 3 ஆவது 4 ஆவது, 5 ஆவது இணை செவுளேடுகளைப் பெற்றுள்ளன. சிலந்திகளின் நூற்கும் அமைப்புகள் (spinerets) 4 ஆவது, 5 ஆவது, பின்னுடல் கண்டங் களைச் சேர்ந்த அமைப்புகளேயாகும். மூன்றாவது பின்னுடல் கண்டத்தின் ஸ்டெர்னல்தகடு பின்னோக்கி நீண்டிருப்பதால், இந்நூற்சுரப்பிகள் உடலின் பின் முனைக்கு அருகில் காணப்படுகின்றன. 11 ஆவது முதல் 21 ஆவது உடற்கண்டம் வரையிலுள்ள ஆறு பின்னுடல் கண்டங்கள் ஒரு சில அராக்னிடா வரிசை களில் மட்டுமே தனித்தனியாகக் காணப்படுகின்றன. யூரிப்ட்டெரிடுகளிலும் (eurypterids) தேள்களிலும் உடற்கண்டங்களின் முழு எண்ணிக்கையைக் காண முடிகிறது. மற்ற அராக்னிடாக்களில் ஒன்றோ அதற்கு மேற்பட்ட கண்டங்களோ வெளிப்படை யாகத் தெரியவில்லை. சில அராக்னிடாக்களில் கடைசி கண்டமாகிய 21 ஆவது கண்டத்துடன் கொண்டி (telson) என்னும் ஒரு பின்நீட்சி இணைந்துள்ளது. இது அரச நண்டில் நீண்ட கூர்முள்ளாகவும், தேளில் நச்சுக் கொடுக்கா கவும், சாட்டைத் தேளில் மெல்லிய நீண்ட வாலா கவும், நுண் சாட்டைத் தேள்களடங்கிய பால்ப்பிகி ரேடாவில் (palpigrada) பல கணுக்களுள்ள யிழை (flagellum) போலவும் அமைந்துள்ளது. கசை