பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அராக்னிடா

170 அராக்னிடா சுவாச உறுப்புகள். அராக்னிடு வரிசைகளுக்கிடை யில் காணப்படும் முக்கியமான வேறுபாடுகளுக்குக் காரணம் அவற்றின் சுவாச முறைகளிலும் சுவாச உறுப்புகளிலும் காணப்படும் வேறுபாடுகளேயாகும். அரச நண்டு ஒரு கடல் வாழ் உயிரி, மறைந்துபோன யூரிப்ட்டெரிடுகளும் கடலில் வாழ்ந்தவைகளே. இவற்றின் சுவாச உறுப்புகள் கொத்துக்களாக அமைந்த செவுள் இழைகள் (gill filaments) அல்லது அடுக்குகளாக அமைந்த அமைந்த செவுள் தகடுகள் (gill lamellae). செவுள் தகடுகள் ஒரு புத்தகத்தின் தாள் களைப் போல அடுக்காக அமைந்துள்ளதால் இவ் வகைச் செவுள்களைச் செவுளேடுகள் (gill books) எனக் கூறுகிறோம். மற்ற அராக்னிடுகள் அனைத்தும் நிலத்தில் வாழ்வன. இவற்றில் சுவாச ஏடுகள் (book lungs) அல்லது மூச்சுக் குழாய்கள் (tracheal tubes) அல்லது இவை இரண்டுமே காணப்படுகின்றன. உணவுப்பாதை. அரச நண்டுகள் தவிர பிற அராக்னிடுகள் உணவை நீர்ம வடிவில் உட்கொள் கின்றன. இவற்றின் தொண்டைக் குழி (pharynx) வலிமையான தசைகளுடன் பிற உயிரினங்களின் உடல் நீர்மத்தை உறிஞ்சும் திறனுடையதாக இருக் கிறது. இரத்தச் சுற்றோட்ட மண்டலம். இதயம் குழல் வடிவில் உள்ளது. இதய உறையினால் (pericardium) சூழப்பட்டுள்ளது. அராக்னீடுகளின் இரத்த ஓட்ட மண்டலம் திறந்தவகை இரத்த ஓட்ட மண்டல மாகும். கழிவு நீக்க மண்டலம், காக்சல் சுரப்பிகள் (coxal glands) என்னும் கழிவு நீக்க உறுப்புகள் முதலாம், மூன்றாம் காக்சாக்களில் அமைந்துள்ள சிறுதுளைகள் மூலம் கழிவுகளை வெளியேற்றுகின்றன. இவையும். சில அராக்னிடுகளின் கெசெராக்களில் உள்ள பட்டுச் சுரப்பிகளும் நச்சுச் சுரப்பிகளும் மாற்ற மடைந்த நெஃப்ரிடியங்கள் (nephridia) எனக் கருதப் படுகிறது. நரம்பு மண்டலம். நரம்பு மண்டலம் மூளை, முன் உணவுக் குழல் கீழ் நரம்புத்திரள், சுற்று இணைப் புகள். நரம்புத்திரள்கள் உள்ள வயிற்றுப்புற இரட்டை நரம்புத் தண்டு முதலியவற்றைப் பெற் றுள்ளது. அராக்னிடுகளின் கண்கள் எளிய கண்கள் (simple- eyes), அரசநண்டில் மட்டும் கூட்டுக்கண்கள் (com- pound eyes) காணப்படுகின்றன. பழக்க வழக்கங்கள். பெரும்பாலான அராக்னிடு கள் இரவுப் பொழுதில்தான் சுறுசுறுப்பாக இயங்கு கின்றன. பகற்பொழுதில் தம் கூடுகளிலும் வளை களிலும் சுற்கள், மரங்கள், இலைகளுக்குக் கீழேயும் தங்கியுள்ளன. அராக்னிடுகள் உயிருள்ள இரையைப் பிடித்துக் கொன்று உண்ணும் பழக்கமுடையவை. பல உண்ணிகளும் சிற்றுண்ணிகளும் ஒட்டுண்ணி களாக வாழ்கின்றன. அவற்றின் வாயுறுப்புகள் இரையின் உடலைத் துளைத்து உறிஞ்சுவதற்கு ஏற்ற வாறு அமைந்துள்ளன. வலை பின்னும் சிலந்திகள், தாம் சுரக்கும் ஒட்டடை இழைகளால் வலைகள் பின்னி அவற்றில் சிக்கும் பூச்சிகளைப் பிடித்து உண் ணுகின்றன. கெலிசெராக்கள், பெடிப்பால்ப்புகள் ஆகியவற்றால் இரையானது நசுக்கப்பட்டுக் கிழிக்கப் படுகிறது. பின்னர் இரையின் உடல் திரவம் முழு மையும் உறிஞ்சப்படுகிறது. அராக்னிடுகளின் உடல் நிறம் அவற்றிற்குச் சிறப்பாகத் தற்காப்பு அளிக்கிறது. பெரும்பான் மையானவை அவை வாழுமிடங்களாகிய கல், மணல், மரங்களைப் போன்ற மங்கலான நிறமுடையவை. அதனால் அவற்றை அவற்றின் சுற்றுப்புறங்களி லிருந்து எளிதாகப் பிரித்தறிய முடிவதில்லை.உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தம் கால்களை ஓடித்து எறிந்துவிட்டுத் தப்பி ஓடிவிடும் தன்மை பெரும்பாலான அராக்னிடுகளில் காணப்படுகிறது. முறிந்து விழுந்த கால்கள் நிலையான இழப்பு அல்ல; இழக்கப்பட்ட பகுதி மீண்டும் வளர்ந்து விடுகிறது. அராக்னிடுகள் தம் புறச் சட்டகத்தைக் குறிப்பிட்ட பருவ காலங்களில் நீக்கிவிட்டுப் புதிய சட்டகத்தை உண்டாக்கிக் கொள்கின்றன. இதற்குச் சட்டை உரித்தல் அல்லது தோலுரித்தல் (ecdysis) என்று பெயர். கலவிக்கு முன்னர் ஆணும் பெண்ணும் ஈடு படும் காதலூடாட்டம் (courtship) அனைத்து அராக் னிடுகளிலும் காணப்படுகிறது. தேள்கள் மட்டும் குட்டிபோடும் இயல்புடையவை. மற்ற எல்லா அராக் னிடுகளும் முட்டையிடுகின்றன. அராக்னிடுகள் துருவப் பகுதிகள் நீங்கலாக உலகின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வாழ்கின்றன. சால்சிடே குடும்பத்தைச் சேர்ந்த சில சிலந்திகள் எவரெஸ்ட் சிகரத்தில் 22,000 அடி உயரத்தில் வாழ்கின்றன. அராக்னிடா வகுப்பு கீழ்க்கண்ட வரிசைகளாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வகுப்பு. அராக்னிடா. கள் வரிசை 1. சிஃபோசுரா (xiphosura) - அரச நண்டு (king crabs) 2. ஸ்கார்ப்பியோனாய்டியா (scorpionoidea) - தேள்கள் (Scorpions) 3.பெடிப் பால்ப்பி (pedipalpi) அல்லது பெடிப்பால்ப்பிடா (pedipalpida) - சாட்டைத் தேள்கள் (whip-scorpions), 4. பால்பிகிரேடா (palpigrada) வாலில்லாச் சாட்டைத் தேள்கள் அல்லது நுண் சாட்டைத் தேள்கள், 5. அரானே (araneae) அல்லது அரானிடா