பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரிலியா 185

கருவிகள் மற்றும் உப்புக் காகிதங்கள் செய்யப் பயன்படுகின்றன. நூலோதி - கே.இரா. Krishnan,M.S., Geology of India and Burma, Higginbothams (P)Ltd, Madras, 1968. அரிலியா சொறிமீன் என்று அழைக்கப்படும் அரிலியா, (aurelia குழியுடலிகள் வகையைச் சார்ந்தது. ஜெல்லி போன்ற இவ்வுயிரியை மீனவர்கள் உணவுக்காகப் பயன்படுத் தாமல் வீசி எறிந்து விடுகின்றனர். ஆனால் சீனா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாட்டு மக்களில் சிலர் இதனை உணவாகப் பெரிதும் பயன்படுத்துகின் றனர். அரிலியாவின் உடலின் பெரும்பகுதி ஜெல்லி போன்ற பொருளால் ஆனது. பசிபிக், இவை அட்லாண்டிக் ஆகிய வெப்ப மண்டலக் கடல்களில் காணப்படுகின்றன. இவை தனித்தனியாகவும் கூட் டங்களாகவும் கடல் நீரில் நீரோட்டப்போக்கில் மிதந்து செல்கின்றன. கடுங்காற்றும் புயலும் வீசும் போது கரையோரங்களில் ஒதுக்கப்படுகின்றன. அரிலியாவிற்குச் சொறிமீன், நிலா ஜெல்லி மீன் (moon jelly fish) என்னும் பெயர்களும் உண்டு. அரிலியா அரிட்டா (aurelia aurita) என்ற இனம் பொதுவாக இந்திய கடல்களில் காணப்படுகிறது. பல செல்களை உடைய அரிலியா ஆரச் சமச்சீர் அமைப்பைப் (radial symmetry) பெற்றுள்ளது. இதன் உடல் விட்டத்தின் அளவு 8 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை இருக்கும். உள் அமைப்பு. முதிர்ந்த அரிலியா மெடுசா (medusa) நிலையில் காணப்படுகின்றது. இதன் உடலைக் குடை. வெளிப்பரப்பு (exumbrella surface), குடை பரப்பு (sub umbrella surface) என்ற இரண்டு பரப்பு களாகப் பிரிக்கலாம். குடைவெளிப்பரப்பு உள்ளீடற்று, தட்டையான கிண்ணம் போன்று குவிந்து அமைந் துள்ளது. குடை உள்பரப்பு சற்றுக் குழிந்து காணப் படுகின்றது. குடை வெளிப்பரப்பு மேல் நோக்கி இருக்கும். குடை உள் பரப்பின் நடுவிலிருந்து ஒரு குட்டையான நீட்சி தொங்குகின்றது. இதை மானு பிரியம் (manubrium) என்பர். இதன் நுனியில் சதுர அரிலியா 185 வடிவ வாய் உண்டு. வாயின் நான்கு ஓரங்களி லிருந்து நான்கு வாய்க் கைகள் (oral arms) நீண்டு அமைந்துள்ளன. ஒவ்வொரு வாய்க் கையின் கீழ்புறத் திலும் சீலியங்களைக் கொண்ட நீர் வெளியேற்று வரிப்பள்ளம் (exhalent groove) காணப்படுகின்றது. ஒவ்வொரு வரிப்பள்ளமும் பல கொட்டும் செல் களைப் (nematocysts) பெற்றுள்ளது. இவை உண வைப் பெறுவதற்கும் பாதுகாப்பிற்கும் பயன்படு கின்றன. அரிலியாவின் குடை விளிம்பு எட்டுப் பிளவு களால் எட்டு மடல்களாகப் (lappets) பிரிக்கப் பட்டுள்ளது. இரு மடல்களுக்கிடையில் உள்ள வெட் டும்தடத்தில் (notch) ரோபேலியா (thopalia) அல்லது டென்டாகுலோசிஸ்ட் (tentaculocyst) என்னும் உணர்ச்சி உறுப்பு உள்ளது. அரிலியாவில் உள்ள எட்டு உணர்ச்சி உறுப்புகள் சமநிலைப்படுத்தும் உறுப்புகளாகவும் செயல்படுகின்றன. குடையின் விளம் பைச் சுற்றி உள்ளீடற்ற குட்டையான பல உணர் நீட்சிகள் (tentacles) உண்டு, குடை உட்பரப்பின் ஓரத்தில் அமைந்துள்ள மெல்லிய விளிம்பு உறைக்கு வெலேரியம் (velarium) குடை என்று பெயர். உள்பரப்பில் வாய்க் கை களுக்கு இடையே உள்ள நான்கு துளைகள் நான்கு குழிகளை நோக்கிச் செல்கின்றன. இக்குழிகள் துணை இனப்பெருக்கக் குழிகள் (subgenital pits) என்று அழைக்கப்படுகின்றன, இக்குழிகளில் நீர் செல்லும்போது சவ்வூடு பரவுதல் (osmosis) முறை யில் சுவாசம் நடைபெறுகின்றது. மேலும் இக்குழி களின் இனப்பெருக்க உறுப்புகள் (gonads) அமைந் துள்ளன. உணவு. அரிலியா ஓர் ஊனுண்ணியாகும். இது கடல் நீரில் காணப்படும் சிறிய மீன்கள், மீன்களின் முட்டைகள், இளவுயிரிகள் (larvae), கோபிபோடு கள் (cope pods) ஓட்டுடலிகள் ஆகியவற்றை உண வாசுக் கொள்கின்றன. இனப்பெருக்கம். ஆண் அரிலியாவின் விந்துகள் வாயின் வழியாகக் கடல் நீரை அடைகின்றன. பெண் அரிலியாவில் வளர்ச்சி அடையும் அண்டங்கள் இனப் பெருக்கப் பைகளில் தங்குகின்றன. இவற்றை நீரின் வழியாக வரும் விந்துகள் கருவுறச் செய்கின்றன. பின்னர் கருமுட்டைகள் வாய் வழியாக வெளியேறி வாய்க் கைகளிலுள்ள வரிப்பள்ளங்களில் தங்குகின் றன. இங்கு வளர்ச்சி அடைந்து கரு முட்டையி லிருந்து நீரில் சிறிது காலம் நீந்தும் (பிளானுலா planula) எனும் இளம் உயிரி, யாக வளரும். பின்னர் இது ஒரு பற்றிடத்தைப் பற்றி ஸ்கைபிஸ்டோமா வாக (scyphistoma) வளர்ச்சி அடையும். இது