அரிஸ்ட்டாட்டில் 189
பறவைகள் வரை ஒரே மரத்தின் கிளைகளில் கூடு கட்டுவதுண்டு. ஒரு நீண்ட குச்சியை அடித்தளமாக வைத்து கூட்டை வைக்கோலைப் பயன்படுத்திக் அமைக்கும். பொதுவாக ஆலமரம் போன்ற பெரிய மரங்கள் கூடுகளை அமைத்தாலும் பனை போன்ற நெடிய மரங்களின் மடல்களிலும் அமைப்பதுண்டு. இவை பருந்துகள், வல்லூறுகள் ஆகிய பறவைகள் அமைத்த பழைய கூடுகளையும் பயன்படுத்திக் கொள் வதுண்டு. இரண்டிலிருந்து நான்கு வரைஎண்ணிக்கை யுடைய செந்நிறக்குறிகளுடைய நீலநிறமுட்டைகளை இடுகின்றன. ஆண், பெண் ஆகிய இருபாற் பறவை களும் முட்டைகளை அடைகாக்கின்றன. மினுக்கு அரிவாள் மூக்கன் பறவை (glossy ibis). ஃபால்சினெல் இதன் உயிரியல் பெயர் பிளிகேடிஸ் லஸ் ஃபால்சினெல்லஸ் (plegadis falcinellus falcinellus) ஆகும். இதைப் பொதுவாகக் 'கருப்புக் கோட் டான்' என்றும் அழைப்பர். கண்ணைக் கவரும் அழகிய பளபளப்பான இறகுகள் இதன் தனிச்சிறப்பு. உடல் முழுவதும் ஊதா, பச்சை வண்ணங்களின் சாயல் கொண்ட கரிய இறகுகளால் போர்த்தப்பட் டுள்ளன. இவ்வழகிய வண்ண இறகுகள் இப் பறவைக்கு இனப்பெருக்க காலத்தில் மட்டுமே உண்டு. மற்ற காலங்களில் பழுப்பு நிற இறகுகள் வெண்ணிறக் கோடுகளுடன் காணப்படுகின்றன. அலகு மெலிந்து கீழ் நோக்கி வளைந்துள்ளது. இந்தியப் பகுதிகளில் பரவலாக எப்பொழுதும் காணப்படும் பறவைகளுடன் உலகின் வடபகுதி நாடுகளிலிருந்து குளிர்காலத்தில் வலசைவரும் பற வைகளும் பொதுவாகச் சாதுவான இப்பறவைகள் நாற்பது ஐம்பது பறவை டங்கிய கூட்டங்களாக வாழகின்றன. சில நேரங் களில் தலை முழுவதையும் நீருக்குள் ஆழ்த்தி நீர் நிலைகளில் உணவைத் தேடுவதைக் காணலாம். களட சேர்ந்துகொள்கின்றன. வட பறக்கும்போது இவை வெகுவிரைவாகச் சிற கடித்துப் பறந்து பிறகு சரிந்தவாறு மிதந்து பறந்து செல்கின்றன. கூட்டமாக, வளைந்த கோடுகள் வடி பறந்து விலும் 'V' வடிவிலும் அணி வகுத்துப் செல்கின்றன. மரக்கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக் கின்றன. மெல்லுடலிகள் (Molluscs), ஓட்டுடலிகள், புழுக்கள், பூச்சிகள், சிறு தவளைகள், தலைப்பரட் டைகள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு. இவை பொதுவாக அமைதியாக இருந்தாலும் இனப் பெருக்கக் காலங்களில் நீண்ட கரகரப்பான ஒலி யெழுப்புகின்றன. இனப்பெருக்கக் காலத்தில் இவற் றைக் கூட்டமாகக் காணலாம். இப் பறவைகள் தேங் கிய தண்ணீரில் அல்லது அதன் அருகில் மே முதல் ஜூன் வரைக் காணப்படுகின்றன. அடர்ந்த மரங் களின் கிளைகளில் சிறுகூடுகளைக் கட்டுகின்றன. இவை இரண்டு அல்லது மூன்று பசுமை கலந்த நீல அரிஸ்டாட்டில் 189 நிற முட்டைகளிடுகின்றன. ஆண் பறவையும் பெண் பறவையும் அடைகாத்தலில் பங்கேற்கின்றன. அரிவாள் மூக்கன் பறவைகள். சிக்கோனிஃபார் மிஸ் (Ciconiiformes) வரிசையில் திரெஸ்க்கியார்னித் திடே (threskiornithidae) குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளன. நூலோதி 1. Henry, G.M., A Guide to the Birds of Cey- lon, Oxford University Press, New York, 1978. 2. Salim Ali and Dillon Ripley, S., Handbook of the Birds of India and Pakistan Vol.1. Oxford University Press, New Delhi, 1980. அரினேசியஸ் பாறைகள் காண்க, மணிப்பரல் பாறைகள். அரிஸ்ட்டாட்டில் அறிவு வளர்ச்சிக்கு அடிகோலிய அறிவியலாருள் அரிஸ்ட்டாட்டில் முதலிடம் பெறுகிறார்.இவர்கிரேக்க குடியேற்ற நாடுகளில் ஒன்றான ஸ்டாகிரா (Stagira) என்னும் நகரத்தில் பிறந்தார். இவர் தந்தையார் பிலிப்பின் மாமன்னன் அலெக்சாந்தரின் தந்தை (Philip ii) அரண்மனை மருத்துவராக இருந்த நிக் கோமேக்ஸ் (Nichomachus) ஆவார். அரிஸ்ட்டாட் டிலுக்குத் தந்தையின் வழிப்பட்டு மருத்துவப்பணி மனம் செல்லவில்லை. யில் பயிற்சி பெறுவதில் ஆனாலும் அவர் தந்தையார் அவருக்குப் பெரிதும் உதவும் வகையில் இயற்கையியல் பற்றிய விரிவான தொரு பின்புலத்தை அமைத்துத் தந்திருந்தார். அரிஸ்ட்டாடில் தன் 17-வது அகவையில் கி.மு. 366 ஆம் ஆண்டில் அக்காலத்தில் அறிவு மையமாகத் திகழ்ந்த ஏதன்ஸ் நகருக்குச் சென்று சிறந்த மெய்யறி பிளாட்டோவின் (Plato) மாணவராக அமர்ந்து பயிலத் தொடங்கினார். அறிவியல் அடிப் படையில் சித்திக்கத் தொடங்கிய அவர்தம் ஆசிரி யரின் கருத்துக்களை மறுக்கவேண்டிய இடங்களில் தயங்கினாரில்லை. ஆசிரியர் மறுத்துப் பேசவும் என்ற நிலையில், பிளாட்டோவும். அரிஸ்ட்டாட்டில் பற்றிக் குறிப்பிடும்போது அவர் ‘எனது கல்விக் கழகத்தின் அறிவுச் செல்வம்' என்று பேசுகிறார். வாளரான