பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருகிவரும்‌ விலங்கினங்கள்‌ 191

வேற்றுமைகளைக் வேற்றுமைகளைக் காணும் ஒற்றுமை கருத்தில் கொண்டு ஆய்ந்து வகைப்படுத்துவதிலும் அவரே முதல் மனிதராக இருந்தார். உயிரியலைப் பொறுத்த வரையில் மிகவும் விழிப் புடன் செயல்பட்ட அரிஸ்ட்டாட்டில், ஏனோ இயற் பியலில் தவறான அடிப்படையிலேயே தம் கருத்து களை உருவாக்கிச் சென்றார். உயிரியலில் அவர் நல்ல முறையில் பின்பற்றிய ஆய்வு முறைகள் வான நூலிலும், இயற்பியலிலும் முற்றிலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டன, அல்லது அடியோடு புறக் கணிக்கப்பட்டன. ஆனாலும் அரிஸ்ட்டாட்டிலின் அழுத்தமான செல்வாக்கு அளவுக்கும் அதிகமாக 1500 ஆண்டுக்காலம் அசையாமல் நின்று நீடித்தது. அரிஸ்ட்டாட்டில் ஒன்றை எழுதினார் என்றால் அது உண்மையாகத்தான் இருக்க முடியும் என்ற ஒரு நம் பிக்கை விட்டது. அறிஞர்களிடையே ஆழமாகப் பதிந்து அரிஸ்ட்டாட்டில் உருவாக்கிய கருத்துக்களில் சில வருமாறு: உலகில் காணும் அனைத்துப் பொருள் களின் பண்புகளையும் எந்த அளவிற்கு அவை வெப் பமாக, அல்லது குளிராக உள்ளன, எந்த அளவிற்கு ஈரமாக அல்லது உலர்ந்தனவாக உள்ளன என்பதைக் கொண்டு முடிவு செய்துவிடலாம். இப்பண்புகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு நிலம்,நீர்,நெருப்பு, காற்று ஆகிய நான்கு மூலப் பொருள்களைக் காரணம் காட்டி விளக்கம் கூறலாம். ஒரு மரக் கட்டையை நெருப்பில் இட்டால், நீர் கட்டையிலிருந்து கசிந்து வெளிப்படும்; காற்று (புகை) வெளிவரும்; நெருப்பு கட்டையிலிருந்து தோன்றும்; நிலம் (மண்) தனியே விடப்பட்டுவிடும். வானம் (heaven) என்பது மற் றொரு மூலப்பொருளால் ஆனது. அது மாறுவ தில்லை. இவ்வாறாகப் பேரண்டமானது ஐந்து மூலப் பொருளால் ஆகியுள்ளது. வான் பொருள்கள் புறவெளியில் உள்ளன. நெருப்பு மேலே உயர்ந்தது. நீர் நிலத்திற்கு மேல் சென்றது. ஆனால் நெருப்புக்குக் கீழே நின்றது. உல கத்தின் நான்கு மூலங்களும் மேலே அல்லது கீழே சென்றன. வான் பொருள்கள் மட்டும் வட்டப் பாதை யில் சுற்றி வந்தன. வட்டமே ஒரு சரியான, முழுமை யான பாதை. அதுவே குறைகாணவியலாத விண் பொருள்களின் பாதையும் ஆகும். பின்னாளில் வானநூல் அறிஞர் கெப்ளர் (Kepler) (1571-1630) கோள்கள் நீள்வட்டப் பாதைகளில்(elli ptical orbits) செல்கின்றன எனக் கணக்கிட்டுக் கண்ட போது அவர்தம் மனச் சான்றே அரிஸ்ட்டாட்டில் வழி நின்று அவருக்கு எதிராகப் பேசியது! அரிஸ்ட்டாட்டில் கொண்ட விண்பொருள் பற்றிய கொள்கையின் அருகிவரும் விலங்கினங்கள் 191 நீண்டகால வரலாறு அப்படி ஒரு நிலையை அறி ஞர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. கலீலியோ காலம் முதல், விடுபட்டு விழும் கனமான, அல்லது இலேசான பொருள்கள் காற்றின் எதிர்ப்பு ஆற்றல் இல்லையென்றால் ஒத்த அளவு வேகத்தில் விழும் என்பது எவரும் அறிந்த உண்மையாகிவிட்டது. ஆனாலும், அரிஸ்ட்டாட்டில் ஆழ்ந்து காணாததாலும் அவசரப்பட்டு முடிவெடுத்ததாலும் இயற்கைக்கு ஒவ் வாத நிலையில் சில தவறான கருத்துக்களை வெளி யிட்டுச் சென்றுள்ளார். அவர் ஓர் இலையைவிட ஓர் கல், நடைமுறையில் விரைந்து வீழ்வதைக் கண் களால் கண்டது என்னவோ உண்மை.உடனே கன மான பொருள் இலேசான பொருளைவிட வேகமாகத் தாழ்ந்து விழும் என முடிவு செய்துவிட்டார். இரண்டு பவுண்டு எடை ஒன்று,ஒரு பவுண்டு எடை ஒன்றைவிட இருமடங்கு வேகத்தில் வந்து விழும் வாதாடினார். ஆனாலும் அதை அவர் ஆய்வு வழிக் கண்டு நிறுவ முயன்றாரில்லை. அளவை முறை யில் (logical) சரியாக இருக்கும் எதுவும் நடைமுறை யிலும் சரியாகவே இருத்தல் வேண்டும் என்று மன நிறைவு கொண்டார். ஆனாலும் அது தவறு என்று மெய்ப்பிக்க ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகட்கு மேல் ஆயின. என அரிஸ்ட்டாட்டில் தன் 62ஆம் அகவையில் யூபேயா (Euboea) என்னும் தீவில் தன் தாயாரின் வீட்டில் காலமானார். காண்க, அரிஸ்ட்டாட்டில்: வாழ்வியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம். நூலோதி 1. கலைக் களஞ்சியம்-தொகுதி 1, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை (1947) 2. Encyclopaedia Britannica, Macropaedia-Vol: I, 1981. அருகிவரும் விலங்கினங்கள் உலகில் ஏறக்குறைய மூன்று மில்லியன் உயிரினங்கள் காணப்படுவதாக உயிரியல் வல்லுநர்கள் கருதுகின்ற னர். இவ்வுயிரினங்களில் இன்று வரை ஒன்றரை மில்லியன் உயிரினங்களே கண்டுபிடிக்கப்பட்டு, அறி வியல் பெயரிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இன்னமும் ஏறக்குறைய ஐம்பது விழுக்காடு கண்ட றியப்பட வேண்டியுள்ளது. விலங்குகளில் முதுகெலும்பற்றவை அதிக எண்