194 அருகிவரும் விலங்கினங்கள்
194 அருகிவரும் விலங்கினங்கள் பட்டைச் செதில் வரிகளுள்ள ஆர்மடில்லோ (three- banded armadillo, Tolypeutes tricinctus) இறைச்சிக் காக மனிதர்களால் வேட்டையாடப்படுகிறது. சுமத்ரா (sumatra) தீவிலுள்ள குட்டைக் காது குழி முயல் (short-eared rabbit, Nesolagus netscheri) காடுகள் அழிக்கப்படுவதால் பெருமளவில் குறைந்து வருகிறது. மெக்சிகோவிலுள்ள புல்வெளிநாய் Mexican prairie dog. Cynomys bardii) அதன் இறைச் சிக்காசுக் கொல்லப்படுகிறது. அனைத்துலக இயற்கை, இயற்கை வளப்பாது காப்பு ஒன்றியம் அதன் சிறப்பு விவர நூலில் பல விலங்கினங்களின் நிலையைப் பற்றிய குறிப்புகளை வெளியிடுகிறது. அதிலுள்ள இளஞ்சிவப்பு வண்ணப் பக்கங்களில் அருகிவரும் உயிரினங்கள் பற்றிய குறிப் புகளும், பச்சை நிறப் பக்கங்களில் முன்பு அருகிய உயிரினமாக இருந்து தற்போது எண்ணிக்கை பெருகி விட்டவை பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன. அருகிவரும் பாலூட்டிகள். அருகிவரும் விலங்கினங் களில் மக்களின் கவனத்தையும். ஆதரவையும் அதிகம் பெற்றுள்ளவை பாலூட்டிகளே. 1600 ஆம் ஆண்டி லிருந்து அற்றுப் போன விலங்கினங்களில் 40 இளங் கள் பாலூட்டிகளே. இவற்றுள் கரிபியன் கடலில் உள்ள தீவுகளில் வாழ்ந்தவையே அதிகம், மனிதர் களின் நேரடி நேரடி நடவடிக்கைகள் இவ்வழிவுக்குக் காரணமாக இருந்தன. தீவுக்கண்டமாகிய ஆஸ்தி ரேலியாவில் 5 சிறப்பினங்களைச் சேர்ந்த பாலூட் டிகள் அற்றுப் போய்விட்டன. வட அமெரிக்காவில் கடந்த 400 ஆண்டுகளாக எந்தப் பாலூட்டி வகை யும் முற்றிலும் அழிந்துவிடவில்லை. கடந்த 400 ஆண்டுகளில் மொத்தப் பாலூட்டி வகைகளில் ஒரு விழுக்காடு அழிந்துள்ளது. தற்போது 4,000 வகை பாலூட்டிகள் வாழ்கின்றன. இவற்றுள் 3 விழுக்காடு, அதாவது 120 சிறப்பினங்கள் அற்றுப் போய்விடும் நிலையில் உள்ளன. இவற்றுள் பெரும் பாவானவை இந்தோனேஷியத் தீவுகளிலும் மட காஸ்கர் தீவிலும் காணப்படுகின்றன. பாலூட்டிகள் வகுப்பைச் சேர்ந்த அருகிவரும் பாலூட்டியான பாண்டா (panda), உலக வனவிலங்கு நிதியமைப்பின் (WWF-World Wildlife Fund), சின்ன மாக இருந்து, இந்த அழியும் விலங்கு வகைகளை படம் 1. வரை ஆடு