அருகிவரும் விலங்கினங்கள் 197
மளவு ஈர்த்துள்ள அருகிவரும் ஊர்வன (reptiles) ஆமைகளும் முதலைகளும் ஆகும். பச்சை ஆமை (green turtle) சில வருடங்களுக்கு முன்பு கடலில் எங்கும் பரவலாகக் காணப்பட்ட விலங்கினமாகும். ஆண்டொன்றுக்கு 20,000 வரை கொல்லப்பட்டதால் தற்பொழுது இவ்வினம் அருகிவிட்டது. முதலைகள் அவற்றின் உறுதியான தோலுக்காக உலகமெங்கும் அழிக்கப்படுகின்றன. சயாம் முதலை (Siamese croco dile), அமெரிக்க மிசிசிப்பி முதலை(American Missisipi crocodile) ஆகியவை விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே உயிரோடு உள்ளன. இந்தோ னேசியத் தீவுகளில் காணப்படும் கோமோடா உடும்பு (komodo dragon) உலகில் உயிரோடு இருக்கும் மிக அரியதோர் ஓணான் வகையாகும். பெரிய உருவுள்ள விலங்கினங்களோடு ஒப்பிடுகையில் உருவில் சிறியன வாகிய பல இருவாழ்விகளும் மீன்களும் அறிவிய வாரின் கணிப்பைவிட அதிக எண்ணிக்கையில் அழிந்து வருகின்றன. உயிரினங்கள் அருகி வருவதற்கான காரணங்கள். உயிரினங்கள் அருகிவருவதற்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ வேட்டையாடுதல், உணவு, வாழி டங்கள் அழிக்கப்படுதல், சூழ்நிலையை மாசுபடுத்து தல் போன்ற மனிதர்களின் நடவடிக்கைகளே காரண மாகின்றன. வேட்டையாடப்படுதல். கி.பி.1600ஆம் ஆண்டி லிருந்து வெகுவேகமாக விலங்கினங்கள் அழிந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக வெகுதூரம் பறந்து செல்லும் வட அமெரிக்கப் புறா வகை ஒன்று (passenger pigeon) 1914 ஆம் ஆண்டில் இறுதியாக அழிந்துவிட்டது. மனிதர்கள் அவற்றை வேட்டை யாடியதாலும் அவற்றின் முட்டைகளைத் திரட்டிய தாலுமே இவ்வரிய பறவையினம் மறைந்தது. சிக்க லான வேட்டைக் கருவிகளைக் கொண்டு அதிகமாக வேட்டையாடப்படுவதால் கடல் நாய்கள், திமிங் கிலங்கள், அழகிய இறக்கைகளுடைய பறவைகள், முதலைகள் ஆகியவை மிக அதிகமாகக் கொல்லப் படுகின்றன. இதனால் ஒரே சிறப்பினத்தைச் சேர்ந்த விலங்குகள் வெகுதூரம் பிரிக்கப்படுவதால் அவற் றின் இனப்பெருக்க வீதம் குறைகிறது. இவ்வாறு நீலத் திமிங்கிலத்தின் (blue whale, Balenoptera muscusl) எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் உயிரினங் களைக் கொல்லப் பயன்படுத்தும் நச்சுப் பொருள் களை உண்டு, பல கொறிக்கும் விலங்குகள் (rodents), பறவைகள் போன்றவை மாண்டுபோகின்றன. பிரை மேட்டுகளான (primates) பாலூட்டிகள் பல அறி வியல் ஆய்வுகளுக்காகக் கொல்லப்படுகின்றன. ஆர்க்டிக் துருவக் கரடி (polar beat, Ursus mari- அருகிவரும் விலங்கினங்கள் 197 timus). வேட்டையாடி அழிக்கப்படுகிறது. மனிதர் கள் தரையிலிருந்து அவற்றை வேட்டையாடிய போது தப்பிப் பிழைக்க வழியிருந்தது. ஆனால் தற்போது ஆகாய விமானங்களில் வந்து அவற்றை வேட்டையாடுவதால் அவற்றால் ஓடித் தப்ப முடிய வில்லை. புலிகளின் (tiger, Leo tigris) அழிவுக்கும் வேட்டையாடுதலே காரணம். பாலி, சுமத்ரா, ஜாவா (Java) போன்ற தீவுகளில் வாழ்ந்த புலிகள் மறைந்து விட்டன. சைபீரியா, சீனா போன்ற நாடுகளில் வாழ் பவை மட்டுமே எஞ்சியுள்ளன. பெரும்பான்மையான வனவிலங்குகள் அவற்றின் கம்பளி மயிருக்காகவும், கால்நடைகளை அவற்றிட மிருந்து பாதுகாப்பதற்காகவும் மனிதர்களால் வேட்டையாடப்படுகின்றன. வேங்கை (cheetah or hunting leopard, Acionyx jubatus) இந்தியாவில் அற்றுப் போய்விட்டது. சிறுத்தைப் புலிகளும் (leopards) குறைந்துவிட்டன. வணிக லாப நோக் கில் திமிங்கிலங்களும் வேட்டையாடப்படுகின்றன. திமிங்கிலங்கள், அவற்றின் உடலிலுள்ள கொழுப்புப் பொருளிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்காகவும் உணவுக்காகவும், வேளாண்மைக்கு முக்கியமான எருவாகப் பயன்படுத்தவும் கொல்லப்படுகின்றன. நீலத் திமிங்கிலத்தின் ஓராண்டுப் பிறப்பு வீதத்தை விட மனிதர்களால் கொன்று அழிக்கப்படும் வீதம் அதிகமாக இருப்பதால் அவற்றின் எண்ணிக்கை தற்போது வெகுவாகக் குறைந்து விட்டது.30 மீட்டர் நீள உடலுடைய இத்திமிங்கிலங்களின் எண் ணிக்கை 1950 ஆம் ஆண்டின் நடுவில் 30,000 முதல் 40,000 வரை இருந்தது. அவை மிக அதிகமாகக் கொல்லப்பட்டுவிட்டதால் தற்போது ஏறத்தாழ 12,500 மட்டுமே எஞ்சியுள்ளன. டாஸ்மேனிய ஓநாய், அமெரிக்கச் சிவப்பு ஓநாய் (American red wolf, cants rufus) ஆகிய இரு ஓநாய் வகைகளும் கால்நடைகளை உண்ணும் பழக்கமுடைய யவை. அதனால் இவை மக்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டுத் தற்போது அருகிவரும் விலங்கு களாகிட்டன. வாழுமிடமும் உணவும் அழிக்கப்படுதல். மனிதர் களால் வாழிடங்களும் உணவும் மாற்றப்படுவதால் அல்லது அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அதிகமாக அருகிவருகின்றன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் தகவமைப்புகளைப் மட்டுமே வாழ்வதற்கேற்ற உயிரினங்கள் அவற்றின் பெற்று வாழ்ந்துவரும் வாழிடச் சூழ்நிலை மாற்றப்படுவதால் இறந்துவிடு கின்றன. உலகிலிருந்த இயற்கையான புல்வெளிகள் பலவும் வேளாண்மைக்கான விளைநிலங்களாகவும் மேய்ச்சல் நிலங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டு