அருகிவரும் விலங்கினங்கள் 199
அடைகின்றன. இத்தொடர் உணவுச் சங்கிலியாகிறது. இதனால் அதிக நச்சுப்பொருள் துருவக் கரடியைச் சென்றடைகிறது. பூச்சிக்கொல்லிகள், பறவைகளின் உடலைச் சென் றடைவதால் அவை குறைபாடுள்ள முட்டை களை இடுகின்றன. பூச்சிக் கொல்லிகளின் பாதிப் பால் சில பறவைகள் மெல்லிய ஓடுடைய முட்டை களை இடுவதால், அவை தாய்ப்பறவை அடை காக்கும் போதே உடைந்துவிடுகின்றன. அமெரிக்கா வின் தேசிய சின்னமான வழுக்கைத்தலைக் கழுகு (American bald eagle, Haliasetus leucocephalus leucocephalus) இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பறவை இனம். காளான்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் பாதரசப் பொருள்கள் கடல்நீரில் கலந்து மீன்களின் உடலில் தங்கிப் பின்னர் அவற்றை உண்டுவாழும் கடல்வாழ் பாலூட்டிகளின் உடலை அடைகின்றன. கலிஃபோர்னிய கடல் சிங்கம் (California seal ion, Zalophus californianus) அலாஸ்க்காவின் கம்பளி மயிர் கடல்நாய் (Alaskan fur seal, Callorhinus ursinus), மற்றும் ஆர்க்டிக் பகுதியில் வாழும் துருவக் கரடி, அன்டார்க்டிக் பகுதியில் காணப்படும் பென் குவின் (penguin) போன்றவை இவ்வாறு பாதிக்கப் பட்ட சில விலங்கினங்கள். உண்மையில் இவ் வேதிப் பொருள்கள் ஆர்க்டிக், அன்டார்க்டிக் பகுதி களில் பயன்படுத்தப்படாவிட்டாலும் இந்நச்சுப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களைச் சென்ற டைந்து தங்கிவிட்டன. வேதிய உரங்கள், ஏரிகளையும், ஆறுகளையும் அதிகமாகச் சென்றடையும்போது, அங்கு வாழும் தாவரங்கள் அவற்றைப் பயன்படுத்தி வளர்ச்சி யடைந்து பல்கிப் பெருகிவிடுகின்றன. இந்நிகழ்வு மிஞ்சிய ஊட்டமடைதல் (eutrophication) எனப்படு கிறது. இதனால் நீர்வாழ் தாவரங்கள், முக்கியமாக நீர்ப்பாசிகள், அதிகமாக வளர்ந்து நீரிலுள்ள ஆக்ஸி ஜன் முழுவதையும் எடுத்துக் கொள்கின்றன. இத னால் நீரில் வாழும் மீன்களும் மற்ற விலங்கினங் களும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்துவிடு கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள். அருகிவரும் விலங்கி னங்களில் 35 விழுக்காடு அமெரிக்கக் கண்டத்திலும், 23 விழுக்காடு ஐரோப்பாவிலும் 20 விழுக்காடு ஆசி யாவிலும், 22 விழுக்காடு ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகின்றன. இந்த அரிய விலங்கினங்கள் பல வனவிலங்குப் புகலரண்களிலும்,பா துகாக்கப்பட்ட காடுகளிலும், வனவிலங்குக் காட்சியகங்களிலும் ஆய்வாளர்களால் அதிக கவனத்துடன் பாதுகாக்கப் அருகிவரும் விலங்கினங்கள் 199 படுகின்றன. இவ்வாறு அருகிவரும் உயிரினங் களைக் காக்கப் பல நாடுகள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளன. இவ்வரிய விலங்குகளை வேட்டை யாடுவதோ, பிடிப்பதோ, கொல்வதோ தண்டனைக் குரிய குற்றமாகிறது. அருகிவரும் விலங்குகள் இவ்வாறு அதிகப் பொறுப்புடன் பாதுகாக்கப் பட்டாலும் இவற்றின் எதிர்காலம் வினாக்குறி யாகவே உள்ளது. மனிதனோடு இவை நடத்தும் வாழ்க்கைப் போராட்டத்தில் இவை தோல்வியையே பெறும் என்று வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கணிக்கின்றனர். விலங்கினங்கள் தனியார்களால் சில நூற்றாண் டுக் காலமாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 1600 ஆம் ஆண்டிலிருந்து அரசாங்கச் சட்டங்களும் இயற்றப்பட்டு விட்டன. இதற்காக முதன்முதலில் பெர்முடா அரசு 1621 ஆம் ஆண்டு ட்டீராடுரோமா க்கேஹோவ் (The Cahow, Pteradroma cahow) என்னும் பறவையைக் காக்கச் சட்டமியற்றியது; எனினும் இப்பறவையினம் அற்றுவிட்டது. 1950 ஆம் ஆண்டு இச்சிறப்பினத்தைச் சேர்ந்த பறவைகள் வாழ்வது மீண்டும் தெரிய வந்தது. தற்போது இவை மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் பாதுகாக்கப்படுகின்றன. அனைத்துலக இயற்கை, இயற்கை வளப் பாது காப்பு ஒன்றியம், உலக வனவிலங்கு நிதியமைப்பு போன்ற நிறுவனங்கள் அருகிவரும் உயிரினங்களைப் பற்றி அறிந்து அவற்றைப் பேணுவதற்கான முயற் சிகளை மேற்கொள்கின்றன. இவ்வாறான நட வடிக்கைகளும் தனியார்களின் ஆர்வமும் ஒன் றிணைந்து உலக மக்களிடம் அருகிவரும் உயிரினங் களைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்கத் தூண்டுகின்றன. இவ்வாறு பாதுகாப்பதில் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு சிறப் பினத்தைச் சேர்ந்த விலங்குகள் ஓரிடத்தில் அதிக மாகவும் மற்றோர் இடத்தில் மிகக் குறைவாகவும் இருக்கும், அவற்றின் எண்ணிக்கை குறைவாக இருக்குமிடத்தில் மட்டுமே அவை பேணிப் பாதுகாக் கப்படலாம். குறைவாக இருக்குமிடத்தில் சட்டத்துக் கெதிராக அவை கொல்லப்பட்டு அவற்றின் தோல் போன்றவை அதிகமாக உள்ள இடத்துக்குக் கடத்தப் பட்டு இயல்பான வியாபாரப் பொருளாக மாற்றப் படுகின்றன. 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் மாநிலம், அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாக்க மாசான் சட்டம், (Mason act) எனப்படும் சட்டத்தை இயற்றியது.அதன் படி முதலைகள், சிறுத்தைப்புலி, வேங்கை, துருவக் கரடி, சிவப்பு ஓநாய்,புலி போன்ற பல விலங்குகளைக் கொன்று கிடைக்கும் பொருள்களின் விற்பனைக் குத்தடை விதிக்கப்பட்டது. பின்பு 1973 இல் பூச்சி .