பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 அருநெல்லி

200 அருநெல்லி களைக் னங்களைச் காக்கவும், 1975 இல் 41 சேர்ந்த வண்ணத்துப் பூச்சிகளைக் காக்கவும் இச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இவ்வாறு இயற்றப்படும் சட்டங்கள் எந்த அளவு விலங்கினங்களை உண்மையிலேயே பாதுகாக்கப் பயன்பட்டன என்று காலப்போக்கில்தான் தெரியும். எவ்வளவு முயற்சி செய்தாலும் சில உயிரினங்கள் நாளடைவில் அற்றுப் போய்விடும். அவற்றின் எண் ணிக்கை மிகமிகக் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம். பல விலங்கினங்களின் எதிர்கால நிலை மனிதர்களின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமை யும். வேட்டையாடப்படுதல் கடுமையான சட்டங் களால் முறியடிக்கப்பட்டாலும் சூழ்நிலை மாசடை தல் கட்டுப்படுத்தப்படவில்லை. நூலோதி கோவி.இரா. 1. David Day, Doomsday book of animals, Ebury Press, London, 1981. 2. Norman Myers, The sinking ark- A new look at the problem of diasppearing species, Perga- mon press, New york, 1980. 3. Peter B. Kaufman, Wild and Endangered species, of plants In Plants, People and environment Mcmillan press, New york, 1979. 4. Saharia V.B., Wild Life in India. Nataraj publi- cations, New Delhi, 1980. 3. IUCN Red Data Book Fish, Reptiles, Amphi. bians, Birds, Plants and Mammals, Cambridge. U.K. 1966-1980. 6. Popular Science Vol.2, Grolier International Inc., 1980. அருநெல்லி இதற்குத் தாவரவியலில் சிக்கா ஆகிடா (cicca acida) Lion.) Merril = phyllanthus acidus skeels) என்று பெயர். இது ஒருபூவிதழ்வட்டமுடைய (monochlamy- deae) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான யூஃபோர்பியேசியைச் (euphorbiaceae) சார்ந்தது. சிக்கா பேரினத்தில் ஒரே ஒரு சிற்றினந்தானுண்டு என்று கருதப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதை ஸ்டார் கூஸ் பெர்ரி, கண்டிரி கூஸ்பெர்ரி (star gooseberry; country gooseberry) என்றழைப்பார்கள். இது வீட்டுத் தோட்டங்களிலும் மற்ற வெற்றிடங்களிலும் பயிரிடப் படுகின்றது. மடகாஸ்கர் (Madagascar) அல்லது வட கிழக்குப் பிரேசில் (Northeast Brazil) கடற்கரைக் காடுகள் இதன் தாயகமாக இருக்கலாமென்று கருதப் படுகின்றது. கோடை காலத்தில் மலர்ந்து மீழைக் காலங்களின் முற்பகுதியில் காய்கள் பறிக்கப்படுகின் றன. இது தென்னிந்தியாவில் ஒரு வருடத்தில் ஏப்ரல்-மே மாதங்களில் ஒருமுறையும், ஆகஸ்டு செப்டம்பரில் மறுமுறையுமாக இரு முறை கனியைத் தருகிறது. • சிறப்புப்பண்புகள். இது 6-10 மீ.உயரம் வரை வளரக்கூடிய இலையுதிர் மரம்.இலைகள் நடுவில் அகல மாக இருக்கும். இவை பார்ப்பதற்குச் சிறகுஅமைப் புக் கூட்டிலை (pinnately compound leaf) போன்று இருக்கும். மலர்கள் ஒருபாலானவை: சிறியவை; ஆரச்சமச்சீரானவை (actinomorphic); எண்ணற் றலை; மலர்க்காம்புகள் நுண்ணிழைகள் (capillary) போன்றவை. மஞ்சரி சிறிய கொத்துக்களாக இலைக் கோணங்களிலிருந்தோ, கிளைகளிலுள்ள இலை வடுக் களின்கோணங்களிலிருந்தோ தோன்றுகின்றது. ஆண் மலர்கள் அதிக அளவில் உண்டாகின்றன. கனிகள் 1.5-2.5 செ.மீ. குறுக்களவு கொண்டவை; உருண்டை வடிவமானவை. கனிகளில் 6-8 பிரிவுகள் உள்ளன: அவை வெளிர் பச்சை அல்லது மஞ்சள் நிறம் கொண்டவை. கனி புளிப்புத் தன்மையுடையது; அதிக அளவு 'சி' ஊட்டச்சத்து ('C' vitamin) பெற்றி ருக்கின்றது. பொருளாதாரச் சிறப்பு. 'சி' ஊட்டச்சத்து குறை வினாலேற்படும் தோல் வியாதிகளுக்கு (scurvy) இது மருந்தாகிறது; காசநோய்க்கும் (tuberculosis) மருந்தா கிறது. உலர்ந்த கனிகள் வயிற்றுப் போக்கிற்கும் சீதபேதிக்கும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கனி ஊறுகாய், பழப்பசை (jam) ஆகியவை செய்யப் பயன் படுகின்றது. இதைப் பச்சைக் கனியாகவும் சாப்பிட லாம். இலைச்சாறு நஞ்சாகப் பயன்படுகிறது. ஆதலால், அது தலைவலி, தூக்கம், வயிற்றுவலி முதலியவற்றைத் தூண்டி. இறுதியில் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடும். வேர்ப்பட்டையில் டேன்னின் tannin) 18 சதவீதம் இருக்கிறது; சப்போனின் (saponin), காலிக் அமிலம் (gallic acid), லூப்பியால் (lupeel) என்ற படிகம்(crystal) அதில் அடங்கியுள்ளன. தென்னிந்தியாவில் தோல் பதனிடுவதற்கும் ஓரளவு இதைப் பயன்படுத்துகிறார்கள். மேலும், களும், வேரும் பேதி மருந்தாகப் (cathartic) பயன் படுகின்றன. இதன் கனிகள், சிறு குச்சிகள், பட்டை கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒருவித மை (ink) விதை