அரும்புகள் (மொட்டுகள்) 201
4 5 Z அருநெல்லி (Cicca acida) (L.) Meri) 1. ஆண் பூவின் விரிப்புத் தோற்றம் 2. மகரந்தத் தாள் 3. கனியின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 4. விதை 5. இலை அரும்புகள் (மொட்டுகள்) 201 6. கனி 7. பெண் பூ 8. மஞ்சரி 9. ஆண் பூக்கள் செய்கிறார்கள். பட்டைகள் சாயம் செய்வதற்குப் பயன்படுகின்றன. கின்றன. நூலோதி 1. உலர்ந்த இலைகள் உரமா எம்.எல்.லீ. Hooker, J.D. in Hook f. Fl. Br. Ind. Vol. V, 1887. The Wealth of India. Vol II, CSIR Publ. New Delhi, 1950. 2. Willis, J.C. A Dictionary of Flowering Plants & Ferns 7th Ed. Revd. Airy Shaw (H. K.) Cambridge Univ.Press, London. 1966. அரும்புகள் (மொட்டுகள் தண்டின் நுனிகளிலும் இலைக் கோணங்களிலும் (leaf axils) வளர்ச்சியடையாத நிலையில் காணப் படும் மிகச் சிறு அமைப்புகளுக்கு அரும்புகள் அல்லது மொட்டுகள் (buds) என்று பெயர். தண்டின் நுனியி லிருப்பவை நுனி அரும்புகள் (terminal or apical buds) என்றும், இலைக்கோணங்களிலிருப்பவை இலைக்கோண அரும்புகள் (axillary buds) என்றும் முறையே அழைக்கப்படுகின்றன. இவை இலையடிச் சிதல்கள் (stipules), சிதல் இலைகள் (scale leaves) அடர்த்தியான கேசங்கள் (hairs), வெவ்வேறு வகை யான வளரிகள் (out-growths), ரெசின் (resin), கோந்து (gum) அல்லது மெழுகு (wax) ஆகியவற்றி னால் சூழப்பட்டுக் காப்பாற்றப்படுகின்றன. சிலசெடி களில் அரும்புகள் இவ்வகையான பாதுகாப்பு ஏது மின்றி இருப்பதும் உண்டு. இவை உறையற்ற அரும்புகளாகும் (naked buds). ஒவ்வோர் இலைக் கோணத்திலும் பெரும்பாலும் ஒரே ஓர் அரும்பு இருக்கும். சிவ செடிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட