அரும்புதல் 203
சில செடிகளில் அரும்புகள் உருமாற்றமடைந்து வேறுவகையில் செயல்படக்கூடும். எடுத்துக்காட்டாக, சில மொட்டுகள் பற்றுக் கம்பிகளாகவும் (tendrils) முட்களாகவும் (thorns) அல்லது புல்பில்கள் (bulbils) என்று கூறப்படுகின்ற குமிழ் போன்ற உறுப்புகளா கவும் மாறக்கூடும். பற்றுக் கம்பிகள் படர்வதற்கும், முட்கள் பாதுகாப்பளிப்பதற்கும், புல்பில்கள் இனப்பெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பாவிலா முறையே பயன்படுகின்ற றன. அவை அரும்புகளிலுள்ள தளிர் இலைகள் விரிவதற்கு முன்பு பலவாறாக அமைந்திருக்கக்கூடும். இவற்றை மொட்டு அல்லது அரும்புத் தளிர்கள் அமைவுமுறை (ptyxis) என்று கூறுவர். எடுத்துக் காட்டாகத் தளிரின் மேற்பகுதி கீழ்ப்புறப்பகுதியை நோக்கி மடிந்திருத்தல் (reclinate), தளிரின் இருபாதி யும் ஒன்றையொன்று மேற்புறமாக நோக்கி மடிந் திருத்தல் (conduplicate), நரம்புகளை உள்ளடக்கி இலைகள் அடுத்தடுத்து மடிப்புற்றிருத்தல் (plicate), இலையின் ஒரு விளிம்பிலிருந்து எதிர்ப்புற விளிம்பை நோக்கிச் சுருள் போன்று நீளவாட்டில் சுருண்டிருத் தல் (convolute), இலையின் இருபாதிக்கும் அதனதன் விளிம்பிலிருந்து மைய நரம்பை நோக்கி மேற்புற மாகச் சுருண்டிருத்தவ் (involute), இது போன்று கீழ்ப்புறமாகச் சுருண்டிருத்தல் (revolute), ஒழுங்கற்ற முறையில் பலவாறாக மடிப்புக்களுடன் இருத்தல் (crumpled) ஆகியவற்றைக் கூறலாம். அரும்புகள் விரிந்து வளர்ச்சியடையும்பொழுது, அவற்றிலிருந்து செடிகளின் வளர்ச்சிக்கான ஆக்சின் கள் (auxins) உண்டாகின்றன. முட்டைக்கோசு (brassica oleraceae var. capitara; cabbage), கிளாக்கோசு B. oleraceae var. gemmifera; brussels sprouts), காலிப்பூ (B.oleracear var. botrytis; cauliflower) ஆகிய மொட்டுகள் காய்கறியாகச் சமைத்து உண்ணப்படுகின்றன. காப்பர்ஸ் (capers) என்று கூறப்படுகின்ற கப்பாரிஸ் ஸ்பைனோசாவின் (cap paris spinosa) உலர்த்தப்பட்ட பூமொட்டுகள் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகின்றன. சைசிஜியம் ஆரோமாட்டிக்கம் (Syzygium aromaticum) மரத்தின் பூ மொட்டுக்களைப் பறித்து உலரவைத்துக் கிராம்பும் (cloves) அதிலிருந்து கிராம்புத் தைலமும் தயாரிக்கப்படுகின்றன. நூலோதி எ. கோ. 1. Lawrence, G. H. M. Taxonomy of Vascular Plants. The Macmillan Co., London, 1951. அரும்புதல் 203 2. Rendle, A. B. The Classification of Flowering Plants I. Gymnosperms & Monocotyledons (ed. II Repr.) Cambridge University Press, London, 1976. 3. Willis, J. C. A Dictionary of flowering Plants and Ferns. (ed. 6). Cambridge, England, 1931. அரும்புதல் உயிரினங்கள் பொதுவாகப் பால் அல்லது கலவி இனப்பெருக்கம் (sexual reproduction), GUIT அல்லது கலவா இனப்பெருக்கம் (asexual reproduc- tion) ஆகிய இரு முறைகளில் இனப்பெருக்கம் செய் கின்றன. கலவி இனப்பெருக்கத்தில் ஆண் இனச் செல்லான விந்தணுவும், பெண் இனச் செல்லான அண்டமும் இணைந்து கருவுறுதல் ஏற்படுகிறது. அதன்பின், கருவுற்ற முட்டை வளர்ந்து ஓர் உயிராக மாறுகிறது. கலவா இனப்பெருக்கத்தில் இனச் செல் கள் இணைவதில்லை. இதில் உடற்செல்கள் மறை முகச் (mitotic division) செல்பிரிதல் மூலம் பிரிந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கின்றன. இம்முறைக்கு சொமேடோஜெனிசிஸ்' (somatogenesis) என்று பெயர். மொட்டு விடுதல் அல்லது அரும்பு விடுதல் என்பது கல்லா இனப்பெருக்க முறையாகும். அரும்பு விடுதல் முறை சில கீழ்நிலைத் தாவரங்களிலும், ஹைட்ரா, டியூனிக்கேட்டா போன்ற சிறிய உயிரி களிலும் காணப்படுகிறது. தாவரங்களில் அரும்புதல். கீழ்நிலைத் தாரவங்களில் சில, அரும்புதல் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. உதாரணம், பூஞ்சைகளில் சில வகைகளில் (பாக்டீரி யாக்கள்) தாவரச் செல்லின் செல் சுவரின் புறப் பகுதியில் ஓர் இடத்தில் ஒரு சிறிய பிதுக்கம் ஏற்படு கிறது. இது அரும்பு அல்லது மொட்டு எனப்படும். இது பின், படிப்படியாக அளவில் பெரிதாகி ஓர் இளம் உயிரியாக உருவாகின்றது. இறுதியில் தாய்ச் செல்லிலிருந்து பிரிக்கப்படுகிறது. பூஞ்சைகள் அரும்பு விடுதல் மூலம் கலவா இனப் பெருக்கம் செய்கின்றன. எடுத்துக்காட்டாக ஈஸ்ட் (yeast) செல்லின் ஒரு மெல்லிய சவ்வினால் குழப் பட்ட புரோட்டோப்பிளாசமானது செல்சுவரிலிருந்து சற்று அப்பால் ஒரு மொட்டு வடிவத்தில் தள்ளப் பட்டு அதன் பின் ஒரு சேய்ச் செல்லாகின்றது. இவ் வாறு, ஏற்பட்ட மொட்டு சிறிது சிறிதாகப் பெரிய தாக வளர்கின்றது. பின், அதன் அடிப்பகுதி குறுகிக் குறுகி இறுதியில் வளர்ந்த மொட்டு தாய்ச் செல்லி லிருந்து பிரிந்து தனிச் செல்லாக வாழ்க்கையினைத் தொடர்கின்றது. பூஞ்சைகளில், முக்கியமாகச் சாக்க ரோமைசிஸ் (Sacchronyces) கான்டிடா அல்பிகன்ஸ்