பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமண்‌ தனிமங்கள்‌ 205

குழியைப் பெற்றுள்ளது. இந்த அரும்பு மீண்டும் வளர்கிறது, அதன் முன் நுனியில் வாய் தோன்று கின்றது. பிறகு, நீண்ட உணர்வு நீட்சிகள் (tentacles ) ஒவ்வொன்றாக ஹைப்போஸ்டோமின் (hypostome) அடிப் பகுதியைச் சுற்றி வட்டமாக அரும்பி வளர் கின்றன. இவ்வாறு அரும்பிய மொட்டு உடல், வாய், உணர்வு நீட்சிகள் ஆகியவற்றுடன் ஒரு சிறிய ஹைட்ராவாகக் காட்சி அளிக்கிறது. இந்தச் சிறிய ஹைட்ராவின் இரைப்பை-இரத்தக் குழி(gastro-vascu- lar cavity )தாயின் குழிக்குடலுடன் தொடர்பு பெற்று, இதன்மூலம் வளர்ந்து, வாயுடன் ஒரு ஹைட்ரா அரும்பாகத் திகழ்கிறது. இந்த ஹைட்ரா அரும்பு தானாகவே உணவினைச் சேகரிக்கத் தொடங்கும். முழுமையாக வளர்ந்தபின் மொட்டின் அடிப்பகுதி யில் இறுக்கம் (constriction) ஏற்படுகிறது. இந்த இறுக்கம் அதிகரித்து இறுதியில் ஹைட்ரா மொட்டு தாய் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு சிறிய ஹைட்ராவாகத் தனித்து வாழத் தொடங்குகிறது. சில சமயங்களில் அரும்பு தாயிடமிருந்து பிரி வதற்கு முன்பே, மற்றொரு சிறிய துணை அரும்பு (axillary) அதிலிருந்து தோன்றலாம். சில சமயங்களில் ஏராளமான மொட்டுகள் ஒரே சமயத்தில் ஒரு தாய் உடலில் காணப்படும். இப்பொழுது ஹைட்ரா பல அரும்புகளுடன் ஒரு கூட்டுயிரியைப் போல் காட்சி யளிக்கும். கனஜியூ (Kanajew) என்னும் விலங்கியல் அறிஞர் "புறத்தசைச் செல்களும் (epithelio-muscular) உண வுச் செல்களும் (nutritive cells) பிரிதலின் மூலம் மொட்டு விடுதல் தூண்டப்படுகிறது" என்று கூறு கிறார். வளைதசைப் புழுவான சில்லிஸ் விலங்கில் உடலின் பின் நுனிப்பகுதியில் மொட்டுகள் தோன்றி வளர்கின்றன. சில்லிஸ் ரமோசாவில் (syllis ramosa) சில உடற்கண்டங்களின் பக்கவாட்டில் மொட்டுகள் தோன்றுகின்றன. டியூனிக்கேட்டாவிலும் மொட்டு கள் தோன்றி வளர்ந்து தனி விலங்குகளாகப் பிரிந்து வாழ்கின்றன. அரும்பு விடுதல் மூலம் கலவா இனப்பெருக்கம் நடைபெறுவது பல வழிகளில் இந்த விலங்குகளுக்கு நன்மையாகும். வேறுபட்ட தட்ப வெப்ப நிலை களான அதிக வெப்பம், மிக அதிகக் குளிர், குறைந்த ஆக்சிஜன் போன்றவற்றிலிருந்து இந்த விலங்குகள் காப்பாற்றிக் கொள்வதற்குக் கலலா தங்களைக் னப்பெருக்கம் மிகவும் உறுதுணையாய் உள்ளது. கா.மு. அருமண் தனிமங்கள் அருமண் தனிமங்கள் 205 தனிம மீள்வரிசை அட்டவணையில் 21,39,57-71வரை அணுஎண்களைக் கொண்ட தனிமங்கள் அருமண் தனிமங்கள் (rare earth elements) ஆகும். இவற்றில் 58-71 அணு எண்களைக் கொண்ட தனி தனிமத் தொகுதி லாந்தனைடுகள் (lanthanides) 7 என்று அழைக்கப்படுகின்றன. அருமண்கள் என்பது தவறான பெயராகும்; ஏனெனில் இவை மண்களோ, அல்லது அருகிக் கிடப்பவையோ அல்ல. கிரேக்கர்கள் உலகத்தி லுள்ள எல்லாம் காற்று, மண், நெருப்பு,நீர் ஆகிய நான்கு பொருள்களையும் கொண்டு அமைந்தவையே என்று கருதினர். அப்போதிருந்த அறிவியல் அறிஞர்க ளால் உயர்ந்த வெப்பநிலையைக் கொண்டு பொருள் களை மாற்ற இயலவில்லை. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அருமண்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது அவை பெரும்பாலும் மக்னீசியம், கால் சியம், அலுமினியம் ஆகியவற்றின் ஆக்சைடுகளைப் போலவே இருந்தன. அருமண்கள் மிகக் குறைந்த அளவிலேயே அருங்கனிமங்களிலிருந்து பெறப்பட்ட தால் அவை அருமண்கள் என்று அழைக்கப்பட்டன. அருமண்கள் அருகியன அல்ல; எடுத்துக்காட்டாக புவியின்மேல்தோட்டில் சீரியம்(cerium) வெள்ளீயத்தை (tin) விட அதிக அளவில் உள்ளது. இட்ரியம் (yttrium) காரீயத்தை (lead) விட அதிக அளவில் உள்ளது. மிகவும் குறைந்த அளவில் கிடைக்கக் கூடிய அருமண் தனிமங்கள் (புரொமீத்தியம் தவிர), பிளாட்டினம் தொகுதி தனிமங்களை விட அதிக அளவில் கிடைக் கின்றன. இத்தனிமங்கள் எல்லாம் முப்பிணைப்பை உண் டாக்குகின்றன. இவற்றின் உப்புகளை நீரில் கரைத் தால் அவை நீரில் பிரிகையுற்று மூலிணைதிறன் அயனி களைக் (trivalent ions) கொடுக்கின்றன. தனிம வரிசை அட்டவணையில் மூன்றாவதுBபத்தியில் உள்ள (III B column) தனிமங்களான ஸ்கேண்டியம் (scan- dium), இட்ரியம் (yttrium), லாந்தனம் (lanthanum), ஆக்டீனியம் (actinium) ஆகியவை நீர்மக் கரைசல் களில் ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்டுள் ளன. இட்ரியமும் லாந்தனமும் பொதுவாக எல்லா அருமண் தனிமங்களுடன் சேர்ந்தே இயற்கையில் கிடைக்கின்றன. லாந்தனைடு வரிசையில் உள்ள அருமண்களின் பண்புகளிடையே ஒற்றுமை காணப்படுகிறது. லாந்த னைடு வரிசையிலுள்ள தனிமங்களின் அணு எண்கள் கூடக்கூட அணுக்கருவின் மின்சுமையானது அதிகரிக் கிறது. நிரம்பப்பெறாத எலெக்ட்ரான்கள் உள் வளையத்தை (inner incomplete துணைச்சுற்று வளையத்தை subshell) நிரப்புவதனால் இது ஈடுசெய்யப்படுகிறது. துணைச்சுற்று வளையத்தில் (4f) 14 எலெக்ட்ரான்கள்