பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 அருவிகள்‌

208 அருவிகள் 2. Encyclopaedia of Physics, Addision - Wesley Publishing Company Inc., London, 1981. 3. Mortimer, Charles E., Chemistry - A Concep- tional Approach, Third Edition, D. Van Nos- trand Company, New York, 1975, அருவிகள் ஆற்றின் வழியில் செங்குத்தாக நீர் வீழும் இடம் அருவி எனப்படும். அருவிகள் வன்மையான இடங் களின் மேலமைந்த மென்மையான பாறைகள் அரிக் கப்படும் இடங்களிலும், செங்குத்தான வன்மையான பாறைகள் இயல்பாகவே அமையும் இடங்களிலும் ஆறு வளமுறும் போது நிலைக்குத்தான நிலஅமைப் புடைய இடங்களிலும், நிலச்சரிவு உருவாக்கிய செங் கோணச் சரிவு அமைந்த இடங்களிலும் அமை கின்றன. நீர்வீழ்ச்சிகள் நில அமைப்பை மாற்றி இடமாறிக் கொண்டே இருப்பன. மேலும், அருவி அருகி மறைந்து விடுதலும் உண்டு. கிடைநிலையில் ஓடும் ஆற்றின் பாதையில் படி களைப் போன்ற சற்றே உயரமுள்ள நிலக்கட்டமைப் புகள் அமைந்தால் நீர் படிப்படியாகக் குதித்து ஓடும். இவை தொடரடுக்கு அருவி (cascades) எனப்படு கின்றன. மேலும் செங்குத்தான நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் அமைந்த ஆற்றின் இயக்கம் செங்குத்து அருவி அல்லது விரைவு வீழ்ச்சிகள் (rapids) எனப்படு கிறது. நில அமைப்பு செங்குத்தாக அமையும் இடங் களிலுள்ள ஆற்றின் இயக்கம் நீர்வீழ்ச்சி அல்லது அருவி எனப்படுகிறது. அருவியில் நீர் அதிகமாய் பாயும்போது அது பேரருவி (cataract) எனப்படுகிறது. படம் 2. கயானாவில் கொட்டாரோ ஆற்றில் அமைந்த கைத்தூர் அருவி அருவிகளின் நிலக்கோளப் பரவல். அருவிகளின் நிலக்கோளப் பரவல் ஒழுங்கற்ற முறையில் உள்ளது. 123 ++ படம் 1. அருவி பின்னேறி (recession) அருகி மறைதலின் கட்டங்கள் 2. தொடக்கநிலை நீரோட்ட வடிவம் 2. தற்போதுள்ள அருவிக்கு மேலுள்ள வடிவம் 3. எதிர்காலத்தில் அருவி பின்னேறியபின் உள்ள செங்குத்தருவியின் (rapid) வடிவம் 4. அருவி அருகி மறைந்த நிலையிலுள்ள வடிவம்