அரைநாணுள்ளவை 219
படம் 2.1. பலனோகிளாசஸ் 2. சாக்கோ கிளாசஸ் இவற்றில் பெரும்பான்மையானவை இந்தியப் பெருங்கடலிலும் (Indian Ocean) அதைச்சார்ந்த பகுதிகளிலும் வாழ்கின்றன. இவ்வகுப்பைச் சேர்ந்த செஃபலோடிஸ்கஸ் (cephalodiscus) போன்ற விலங்கு களின் கழுத்துப்பட்டிப் பகுதியில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட லோஃபோஃபோர்கள் (lophophores) உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் சுரப் பிச் செல்களும் குற்றிழைகளும் நிறைந்த உணர்நீட் சிகள் (tentacles) இரு வரிசைகளாக அமைந்துள்ளன. முன் நீட்சிப் பகுதியால் சுரக்கப்படும் சீனிஷியம் (coenocium) எனப்படும் கூடுகளில் ராப்டோப்புளூரா (rhabdopleura), செஃபலோடிஸ்கஸ் போன்ற அரை நாணிகள் வாழ்கின்றன. பொதுவாக அடித்தண்டு ஒன்றுடன் இணைந்திருப்பதால் ராப்டோப்புளூ ராவின் தனி உயிரிகள் அதிகமாக இடப்பெயர்ச்சி செய்வதில்லை. ஆனால் செஃபலோடிஸ்கஸ் கூட்டை விட்டு வெளியேறி உணவு தேடும் இயல்புடையது. உணர்நீட்சிகளில் உள்ள கோழைத்திரவத்திலும், குற்றிழைகளிலும் சிக்கிக் கொண்ட கரிம உணவுப் பொருள்களை இவை உட்கொள்கின்றன. இது அட்டுபாரியா (atubaria), ஹைட்ராய்டுகளின் (hydroids) தண்டுகளைத் தனது காம்புப் பகுதியில் சுற்றிக்கொண்டு தன்னிச்சையாக வாழ்கிறது. இது கூடுகளை அமைத்துக் கொள்வதில்லை. செஃப அரைநாணுள்ளவை 219 லோடிஸ்கஸ், அட்டுபாரியா ஆகியவற்றின் தொண் டைப் பகுதியில் செரிமான மண்டலத்தை வெளிப் பகுதியுடன் இணைக்கும் இரு செவுள் துளைகள் உள்ளன. இவை ஒருபாலிகள்; கருவுறுதல் உயிரிக்கு வெளியே கூடுகளிலேயே நிகழ்கிறது. இளவுயிரிகள் சில காலம் கூட்டில் வாழும், பின்னர் வெளியேறி நீந்திச் சென்று பரவுகின்றன. கருவளர்ச்சியின் தொடக்கக் காலத்தில் பின்முனைப் பகுதியில் இருக் கும் மலப்புழை, குடல் U வடிவடைவதால், வாயருகே நிலைபெறுகிறது. அடிப்பகுதியை அடைந்த ராப்டோப்புளூராவின் இளவுயிரி முதலியவை சீனி ஷியக் கூட்டை (primary coenocium) அமைக் கின்றன. மொட்டுவிடுதல் (budding) எனும் பாலிலி இனப்பெருக்கத்தினால் கூட்டுயிரி (colony) உருவா கிறது. வரிசை 1. ராப்டோப்புளுரிடா (Rhabdopleurida). இவ்வரிசையைச் சேர்ந்த உயிரிகள் ஒன்றன்பின் ஒன் றாக, ஆனால் தனித்தனிக் கூடுகளில் வாழ்கின்றன. இவை உணர்நீட்சிகள் கொண்ட இரு லோஃபோஃ போர்களுடையவை. செவுள் பிளவுகள் இல்லை. பேரினம். ராப்டோப்புளூரா, பாறைகள், மெல் லுடலி ஓடுகள் போன்றவற்றின் மீது ஒட்டிப்படர்ந்து கிளைத்த குழாய்களுக்குள் கூட்டுயிரியாக வாழ்கிறது. படரும் குழாய்களில் அவ்வப்போது மொட்டு விடு தல் மூலம் தோன்றும் தனி உயிரிகள் செங்குத்துக் குழாய்களை உருவாக்கி அவற்றுள் வாழ்கின்றன. படம் 3. ராப்டோப்புளூரா வரிசை 2. செஃபலோடிஸ்ஸிடா (Cephalodiscida). இவை பொதுவாகக் கூட்டில் வாழ்பவை. கூடுகளின் மேற்பரப்பில் மணல் துகள்களும் புரையுடலிகளின்