அரோமாட்டிக் ஹைட்ரோக்கார்பன்கள் 245
வளிமத்தைச் சுண்ணாம்பு, இரும்பு ஆச்சைடு (iron oxide) ஆகியவற்றின் வழியாகச் செலுத்தும்போது கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்ஃபைடு ஆகியவை நீக்கப்படுகின்றன. எஞ்சியுள்ள வளிமம் எரிபொருளாகப் பயன்படுகிறது. 1000°C-க்கு மேற்பட்ட வெப்பநிலையில் (high temperature carbonisation) நிலக்கரி நிலக்கரி சிதைத்துக் காய்ச்சி வடிக்கப்பட்டால் (destructive fractional distillation) தான் தாரிலிருந்து மேற்கூறிய பொருள் கள் கிடைக்குமென்பதும் 600°C க்கு குறைந்த வெப்ப நிலையில் (low temperature carbonisation) தாரில் பென்ட்டேன், ஹெக்சேன் போன்ற பெட்ரோலிய ஹைட்ரோகார்பன்கள் இருக்குமென்பதும் குறிப் பிடத் தக்கது. பொது அரோமாட்டிக் பண்புகள். (அ) பென்சீனி லுள்ள ஆறு கரி அணுக்களடங்கிய வளையம் மிகவும் நிலைப்புத் தன்மையுடையது. வினைகளில் வளையம் சிதையாமலிருப்பதனால் இதனை அறிய லாம். en (ஆ) அரோமாட்டிக் சேர்மங்கள் நிறைவு றாமலிருப்பினும் (unsaturated) உடனிசைவினால் (resonance) நிலைப்புத்தன்மையுற்று, ஹைட்ரஜன், ஹாலோஜன், ஹைட்ரஜன் ஹாலைடு முதலிய வற்றுடன் கூட்டுச் சேர்மங்களைக் கொடுப்பதில்லை. (இ) அசெட்டிலீனைப் பல்லுறுப்பாக்கல் (poly merisation) மூலம் பென்சீனைப் பெற முடிகிறது. பெட்ரோலியம் பிளத்தலினாலும் (cracking of petroleum) பென்சீன சேர்மம் கிடைக்கிறது. நிலக் கரியைச் சிதைத்துக் காய்ச்சி வடித்தால் பென்சீன் சேர்மம் கிடைக்கிறது. இதிலிருந்து திறந்த சங்கிலித் தொடர்ச் சேர்மங்கள் (open chain compounds), பென் சீன் போன்ற சேர்மங்களை எளிதில் கொடுக்கக் கூடியவை என அறியலாம். (ஈ) அலிஃபாட்டிக் ஹைட்ரோக்கார்பன்களை நைட்ரோ தொகுதி ஏற்றத்திற்கும் (nitration). சல்ஃ பானிக் தொகுதி ஏற்றத்திற்கும் (sulphonation) எளிதில் உட்படுத்த முடியாது. இம்மாதிரி எலெக்ட் ரான் சுவர் பதிலீடுகளை (electrophilic substitution) பென்சீன் சேர்மங்கள் எளிதில் அளிக்கக் கூடியவை. (உ) டையசோனியம் உப்புக்களையும்(diazonium salts), குய்னோன் சேர்மங்களையும் (quinone compounds) அரோமாட்டிக் சேர்மங்களில் காண லாம். (ஊ) அலிஃபாட்டிக் ஹாலைடுகளை எளிதில் ஆல்கஹால்களாகவும், அமீன்களாகவும் (amines) அரோமாட்டிக் ஹைட்ரோக்கார்பன்கள் 245 மாற்றலாம். ஆனால், அரோமாட்டிக் ஹாலைடுகளை இம்மாதிரியான அணுக்கவர் பதிலீட்டிற்கு (nucleo philic substitution) எளிதில் உட்படுத்த முடியாது. (எ) அரோமாட்டிக் ஹைட்ராக்சி சேர்மங் களான ஃபீனால்கள் (phenols) அமிலத்தன்மை யுடையவை. (ஏ) நீரற்ற அலுமினியம் குளோரைடு உடனி ருக்க (anhydrous AlCl,) அல்க்கைல் அல்லது அசைல் ஹாலைடுகளுடன் (acyl halides) வினை புரியும் போது, பென்சீன் சேர்மங்களிலுள்ள ஓர் ஹைட் ரஜனுக்குப் பதில் அல்க்கைல் அல்லது அசைல் தொகுதி சென்றடைகிறது. இதனை ஃபிரீடல்-கிரா ஃப்ட்ஸ் வினை (Friedel-Crafts reaction) என்று Umar அழைக்கிறோம். AIC13 + H3C CO CI + CH3 C/ CI AICI 3 COCH3 ஆக்சிஜ (ஐ) வளிம நிலையில் காற்று அல்லது னுடன் வனேடியம் பென்ட்டாக்சைடு (V,O) உடன் இருக்கப் பென்சீன் ஆக்சிஜனேற்றமுற்று மலியிக் நீரிலியைக் (maleic anhydride) கொடுக்கிறது. வனேடியம் 2 +902 பெண்டாக்சைடு HC -CO 2 | 0+ 4 CO2 + 4 H2 0 HC மலியிக் நீரிலி (ஓ)ஏற்கெனவே குறிப்பிட்டபடி பென்சீனிலிருத்து ஒரே ஒரு பதிலீட்டு விளை பொருளும், இரு பதி லீட்டு நிலைகளில் 0-, m-, p- என்ற மூன்று மாற்றி யங்களையும் பெறலாம். மேலும் நிக்கல் உடனிருக்க பென்சீன் ஹைட்ரஜனுடன் சேர்ந்து வளைய ஹெக் சேனைக் (cyclohexane) கொடுக்கிறது. இதனால், பென்சீனில் உள்ள ஆறு கரி அணுக்களும் ஒரு வளையத்தில் தான் இருக்க வேண்டும் எனவும்,