பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்க்கீன்கள்‌ 253

200-500 மி.கிராம் என்ற அளவில் குறைத்துக் கொண்டால் ஓரளவு இந்நோயினைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அல்க்கீன்கள் -டி. ச. இவை அல்க்கீன்களின் பொது வாய்பாடு CH, ஒலிஃபீன்கள் (olefines) என்றும், அல்க்கைலீன்கள் (alkylenes) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ் வரிசைச் சேர்மங்கள் இரட்டை இணைப்பைக் (double bond) கொண்டவை. அல்க்கேன்களைக் காட்டிலும் அல்க்கீன்கள் வேதி வினையில் தீவிரமுடையன. அல்க்கீன்கள் எல்லாம் நிறைவுறாத சேர்மங்கள் (unsaturated compounds). இவை வினைப்படும் பொழுது மற்றைய வினைப் பொருள்களைத் தம்முடன் சேர்த்துக் கொள்கின்றன. இவ்வினைகளைச் சேர்க்கை வினைகள் (addition reactions) என்கிறோம். அல்க்கீன்களைப் பெறும் பொதுமுறைகள், வினை யூக்கிகள் மூலம் ஆல்கஹால்களிலிருந்து நீரை அகற்றி அல்க்கீன்களைப் பெறலாம். இதை நிறைவேற்ற ஆல்கஹால்களை ஆவியாக்கி வெதுப்பிய அலுமினா வின் (heated alumina) மேல் செலுத்தலாம். இவை தவிர ஃபாஸ்ஃபரஸ் பென்ட்டாக்சைடு, அடர் சல்ஃப் யூரிக் அமிலம், ஃபாஸ்ஃபாரிக் அமிலம் (phosphoric acid) ஆகிய வேறு பலவற்றையும் இதற்குப் பயன் படுத்தலாம். அல்க்கைல் ஹாலைடுகளிலிருந்து. ஆல்கஹாலில் கரைந்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் (alco holic potassium bydroxide) அல்க்கைல் ஹாலைடுகளை வெதுப்பும் பொழுது அல்க்கீன் உண்டாகிறது. அண்டை இரு ஹாலைடுகளிலிருந்து. அடுத்தடுத் துள்ள இரண்டு கரி அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஒரு ஹாலோஜன் அணு இணைந்திருக்கிற சேர்மத்தைத் துத்தநாகத் தூளுடன் சூடுபடுத்தும் பொழுது அல்க் கீன் உண்டாகிறது. இருகார்பாக்சிலிக் அமிலத்தை மின்னாற் பகுப்பதன் மூலம். சக்சினிக் அமிலம் (succinic acid) போன்ற இருகார்பாக்சிலிக் அமிலத்தின் சோடியம் (அல்லது பொட்டாசியம்) உப்புக் கரைசலை மின்னாற்பகுத்து அல்க்கீனைப் பெறலாம். இயற்பியல் பண்புகள். ஐந்து முதல் பதினைந்து கரி . அல்க்கீன்கள் 253 அணுக்கள் உள்ள அல்க்கைன்கள் நீர்மங்களாகவும், இவற்றிற்கு மேம்பட்டவை திண்மங்களாகவும் இருக் கின்றன. இவை நீரில் கரையா: பென்சீன், ஈத்தர், குளோரோஃபார்ம் போன்ற கரியக்கரைப்பான்களில் கரையும். இவை நீரைக்காட்டிலும் இலேசானவை. படிவரிசையில் கார்பன் அணுக்களின் எண்ணிக்கை யின் அதிகரிப்பிற்கேற்ப இவற்றின் கொதிநிலைகளும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு கரி அணு அதிகமாகும் பொழுதும் கொதிநிலையில் சுமார் 20°C -30°C அதிகமாகிறது. எனினும் அல்க்கீன் களின் கொதிநிலை, அவற்றிற்கேற்ற அல்க்கேன் களின் கொதிநிலைக்குக் கிட்டதட்டச் சமமாக இருக் கின்றது. வேதியியல் பண்புகள். இவை எலெக்ட்ரான் கவர் வினைப் பொருள்களுடன் (electrophilic reagents ) எளிதில் சேர்ந்து விடுகின்றன. இவை அனைத்தும் சேர்க்கை வினைகளாகவே அமைகின்றன. ஹைட்ரஜன் ஏற்றம். அல்க்கீன்கள் நிக்கல், பிளாட் டினம், பலேடியம் முதலான வினையூக்கிகள் உடன் இருக்க ஹைட்ரஜன் ஏற்றம் (hydrogenation) அடை கின்றன. Ni --CH-CH-CH, CH- CH = CH, + H, -- 200°C ஹாலோஜன் சேர்க்கை, அல்க்கீன்கள் ஹாலோஜன் களுடன் சேர்ந்து இரு ஹாலோஜன் பெறுதிகளைக் (dihalogen derivatives) கொடுக்கின்றன. R- CH CH, + X2 R - -CH CH X X ஹாலோஜன் ஹாலோஜன் அமிலம் சேர்க்கை. அமிலங்களுடன் அல்க்கீன்கள் சேர்கின் றன. R - CH = CH, + H X + R CH CH, X புரொப்பீனுடன் கூட்டு வினை நடைபெறும் பொழுது இரண்டு விதமான சேர்க்கைப் பொருள் கள் உண்டாகலாம். இரட்டை இணைப்புக்கு இரு புறமும் உள்ள தொகுதிகள் வெவ்வேறாக இருப்பின் அதைச் சீர்மையற்ற அல்க்கீன் (unsymmetrical alkene) என்கிறோம். ஹைட்ரஜன் ஹாலைடு பிளந்து இரட்டை இணைப்புக்கு ஒரு புறமுள்ள கார்பன் அணுவுடன் ஹைட்ரஜனும், மற்றைய கரி அணுவுடன் ஹாலோஜன் அணுவும் சேர்கின்றன. இரட்டை இணைப்புக்கு இரு புறமும் ஒரே தொகுதி அமைந்தால் ஹைட்ரஜனும்