அல்க்கேன்கள் 255
ஆகியனவும் 1-பென்ட்டீன், 2 - பென்ட்டீன் ஆகியன வும் இம்மாற்றியங்கள். அமைப்பு மாற்றியம் (Structural isomerism). அல்க் கீன்களும் வளைய அல்க்கேன்களும் ஒரே வாய்பாடு கொண்ட அமைப்பு மாற்றுகள்; எனினும் அல்க் கீன்கள் வளையத்திலமையாத திறந்த முனை கொண் டவை; மேலும் ஓர் இரட்டை இணைப்பைக் கொண் டவை. புரொப்பீனும், வளையப் புரொப்பேனும் (cyclopropane) அமைப்பு மாற்றுகள். அவற்றின் அமைப்புகள், CH-CH=CH புரொப்பீன் CH, - CH, CH, வளையபுரொப்பீன் இது போலவே பியூட்டீனும், வளையபியூட்டேனும் அமையும். CH CH,-CH=CH, பியூட்டீன் CH2-CH CH, CH, வளையபியூட்டேன் வடிவ மாற்றியம் (Geometric isomerism). இரண்டு கரி அணுக்களுக்கிடையே ஓர் இரட்டை இணைப்பு ஏற்படும்பொழுது இக் கரி அணுக்கள் இந்த அச்சில் சுழல இயலாது. எனவே இவற்றில் இணைந்துள்ள இரண்டு ஹைட்ரஜன் அணுக்களின் இரட்டை இணைப்பில் ஒரே பக்கமாக, அல்லது மறுபக்க மாக அமையலாம். இதனால் இரண்டு மாற்றி யங்கள் (isomers) ஏற்படுகின்றன. இதை 2-பியூட்டீ னிலும், 2-பென்ட்டீனிலும் காணலாம். (காண்க: மார்கௌநிகாஃப் விதி; சேர்க்கை வினை; டீல்ஸ் அல்டர் வினை: ஓசோனாற் பகுப்பு) நூலோதி கே.க. Organic Morrison R.T., and Boyd R.N., Chemistry, Second Edition, Prentice Hall of India Private Ltd, New Delhi 1971. அல்க்கேன்கள் இவை கரி, ஹைட்ரஜன் ஆகிய இரு தனிமங்கள் மட் டுமே இணைந்து உண்டாகும் அடைபட்ட (saturated) அலிஃபாட்டிக் சூரிய வேதிச் சேர்மங்கள் அல்க் அல்க்கேன்கள் 255 கேன்கள் ஆகும். இவை பெரும்பாலும் பெட் ரோலியம் என்னும் கல்லெண்ணெயில் கலந்துள்ளன. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்ப் பொருள்கள் பொதுவாகப் பெட்ரோ லியம் என்று அழைக்கப்படுகின்றன. பெட்ரோலியம் அதிக அளவில் ரஷ்யா, வட அமெரிக்கா, ஈரான், ஈராக், ஹாலண்டு, இங்கிலாந்து, கிழக்கிந்தியத் தீவுகள், மெக்சிகோ, ருமேனியா ஆகிய நாடுகளில் கிடைக்கிறது; இந்தியாவில் அஸ்ஸாமிலும், பம்பாயில் கடல் அடியிலிருந்தும் கிடைக்கிறது. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து கிடைப்பது பண்படா எண்ணெய்; இதில் பல எண்ணெய்களும் மற்றப் பொருள்களும் கலந்துள்ளன. இவற்றைத் தனித்தனியாகச் சுத்த மான எண்ணெய்களாக மீத்தூய்மை ஆலைகளில் (refineries) பிரித்தெடுக்கலாம். = அல்க்கேன்கள் பாரஃபீன் ஹைட்ரோக்கார்பன்கள் அல்லது பாராஃபீன்கள் (paraffins) என்றும் அழைக் கப்படுகின்றன. இவை பல வேதிவினைப் பொருள் களுடன் குறைவான ஈடுபாடு கொண்டவை என்று பொருள்படும் லத்தின் சொற்களிலிருந்து பாராஃபீன் என்று பெயர் வந்தது (parum குறைந்த; affinis= ஈடுபாடு). அல்க்கேன்களின் பொது வாய்பாடு CaHga+gi 'n ' இன் எண்ணிக்கைக்கேற்ப அல்க்கேன் களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. அல்க்கேன் சேர்மங்களில் கரியணுக்கள் முழுவதும் அடைபட்ட நிலையில் உள்ளன. இது காரணமாக அல்க்கேன் மூலக்கூறுகள் உறுதிப்பாடுள்ளனவாக அமைகின்ற றன. இயல்புகள். அல்க்கேன் படிவரிசையில் உள்ள முதல் நான்கு சேர்மங்கள் (மீத்தேன் முதல் பியூட் டேன் வரை) நிறமும் மணமுமற்ற வாயுக்கள். பென்ட்டேன் முதல் ஹெப்டாடெக்கேன் (C5 - Ct7) வரையுள்ள அல்க்கேன்கள் நிறமும் மணமுமற்ற நீர்மங்கள்; இவற்றிற்கு மேல் அதிக கரியணு எண் ணிக்கையைக் கொண்ட சேர்மங்கள் நிறமும் மணமு மற்ற திண்மங்களாக விளங்குகின்றன. சில n - அல்க் கேன் சேர்மங்களும் அவற்றின் இயல்புகளும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள் ளது. அல்க்கேன்கள் மின்முனைவுற்ற (non-polar) சேர்மங்கள்; எனவே இவை மின் முனைவுள்ள நீர் போன்ற திரவங்களில் கரைவதில்லை. பென்சீன், ஈத்தர், கரி நாற் குளோரைடு (CCI,) போன்ற கரிமக் கரைப்பான்களில் கரைகின்றன. இவற்றின் கொதிநிலை, உருகுநிலை ஆகிய இயல்புகள் (படி வரிசையில்) மூலக்கூறு எடையின் ஏறு வரிசையில் மேலே செல்லச்செல்லப் படிப்படி யாக உயர்ந்து கொண்டே செல்கின்றன. படிவரி சையில் மேலே செல்லச்செல்ல கரை திறன் இறங்கு வரிசையில் அமைகிறது. இதேபோல் ஒப்படர்த்தி