பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்க்கேன்கள்‌ 257

அல்க்கேன்கள் 257 கரியணுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கும்போது எந்தப் பக்கத்திலிருந்து எண்களை இட்டால் கிளைத் தொடருக்குக் குறைந்த மதிப்பெண் வருமோ அந்த எண் வரிசையில் தொடங்க வேண்டும். I 2 H,C-CH-CH-CH,-CH, 3H, CH,-CH CH, கிளையாக ஏற்படும் அல்க்கைல் தொகுதிகள் ஒன் றிற்கு மேற்பட்டு இருந்தால் அவற்றிற்கு இரு (di-), மூ (tri-), நாற் (tetra-) என்ற முன்னொட்டைச் சேர்த்துப் பெயரிட வேண்டும். CH, 3 1 2 ] H,C- Ċ -CH₁₂ CH₂ 2,2- இருமீத்தைல்புரோப்பேன் CH3 5 4 3 2/ 1 H,C-CH-CH,-C-CH, CH, CH₂ CH₂ 2, 2, 4 - மூமீத்தைல்பென்ட்டேன் 8 5 6 7 HC-CH,-CH-CH-CH,-CHs 4 CH CH-CI CH-CH, I CH, 3 CH-CH, 2 CH-CH 1 5-ஈத்தைல் - 2, 3- இருமீத்தைல் - ஆக்ட்டேன் CH, 11 2 3 H,C-C-CH, CH, 9 8 7 6 5 4 3 2 1 H,C-CH,-CH2-CH-C-CH,-CH,CH,-CH3 1 2 3 | CH,-CH=CH3 CH, 5- (1,1 - இருமீத்தைல் புரோப்பில்-5-2-மெத்தில் புரோப்பில்) நோனேன் அல்க்கேன்களைப் பெறும் முறைகள். படிவரிசைச் சேர்மங்களைத் தங்கள் இயல்புகளில் ஒன்றையொன்று ஒத்திருப்பதால் அவற்றைப் பெறும் முறைகளும் அமைந்திருக்கின்றன. பொதுவான முறைகளாக அல்க்கேன்கள் பெருமளவில் இயற்கையாகக் கிடைத் தாலும் அவை பல அல்க்கேன்களுடன் கலந்தே கிடைக்கின்றன. அவற்றினின்றும் இவற்றைப் பிரித் தெடுப்பது எளிதன்று. எனவே நமக்கு வேண்டிய அல்க்கேனைத் தொகுப்பு முறையில் (synthesis) தயா ரித்துக்கொள்கிறோம். சபேஷியர் - சென்டெரன்ஸ் ஆக்சிஜன் இறக்கம். அடைபடாச் சேர்மங்களை நிக்கல் வினையூக்கி யைப் பயன்படுத்தி ஆக்சிஜனிறக்கத்திற்குட்படுத்தும் போது அல்க்கேன்கள் கிடைக்கின்றன. இவ்வகையில் அடைபடாச் சேர்மங்களின் வாயுக்களை ஹைட்ரஜ னுடன் கலந்து நிக்கல் வினையூக்கியின் மேல் 200 300°C வெப்பநிலையில் செலுத்தும்போது அல்க்கேன் கள் கிடைக்கின்றன. இவ்வினைக்கு சபேஷியர் சென் டெரன்ஸ் இறக்கம் (Sabatier - Senderens reduction) என்று பெயர். H₂/Ni C₂H4 → 0₂H அல்க்கைல் ஹாலைடுகளிலிருந்து பெறுதல். துத்த நாகம், அமிலம் ஹைட்ரோகுளோரிக் சேர்ந்த கலவையா லும் அல்லது ஆல்கஹாலிலிட்ட துத்தநாகம் செம்பு இணையாலும் ஆக்சிஜன் ஒடுக்க வினையின் மூலம் ஆல்க்கைள் ஹாலைடுகளை அல்க்கேன்களாக மாற்றலாம். C,H,I+ 2H

  • C,H + HI

அல்க்கைல் ஹாலைடுகளை ஈத்தரில் கலக்கி அவற் றுடன் சோடியம் உலோகத்தை இட்டு ஆவிமீளக் கொதிக்க வைத்து அல்க்கேன்களை உண்டு பண்ணலாம். இவ்வினைக்கு வூட்ஸ் வினை (Wurtz reaction) என்று பெயர். H, CI + 2Na + ICH, H,C - CH, + 2Naj கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து பெறுதல். ஒற் றைக் கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்பை சோடாச் சுண்ணாம்புடன் கவந்து காய்ச்சும் போது அலக்கேன்கள் உண்டாகும். H,CCOONa + NaOH→ CH, + Na,CO, கோல்ப் மின்பகுப்பு முறை. ஒற்றைக் கார்பாக்சிலிக் அமிலத்தின் உப்புகளின் நீர்க் கரைசலை மின்னாற் பகுக்கும்பொழுது அல்க்கேன்கள் உண்டாகின்றன.